திருநெல்வேலி விரைவு செய்திகள்
23 Jul 2026, 10:54 pm

இராஜபாளையம் பகுதியில் பயிர்களில் பூச்சி, நோய் தாக்குதல் குறித்து ஆய்வு

இராஜபாளையம், ஜூலை 23- இராஜபாளையம் வட்டாரத்திற்கு உட்பட்ட சேத்தூர், மேட்டுப்பட்டி, முத்துச்சாமிபுரம், தேவதானம் மற்றும் சோழபுரம் பகுதிகளில் தென்னை, மா, நெல், உளுந்து, நிலக்கடலை, பருத்தி உள்ளிட்ட பயிர்களில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் குறித்து வேளாண் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அருப்புக்கோட்டை வேளாண் அறிவியல் ஆராய்ச்சி நிலையத் தலைவர் டாக்டர் ராமசுப்பிரமணியன் தலைமை யிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது, தென்னை மரங்களில் காண்டாமிருக வண்டு, சிவப்பு கூன்வண்டு, வெள்ளை ஈ தாக்குதல் காணப்பட்ட தோப்புகளில் அவற்றைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், உளுந்து சாகுபடியில் களை மேலாண்மை மற்றும் மகசூலை அதிகரிக்கும் வகையில்ஊட்டச்சத்தை 30 மற்றும் 45-வது நாளில் இலைவழியாக தெளிக்கும் முறை குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது. வேளாண்மைத் துறையின் மானியத் திட்டங்கள் குறித்தும் துணை வேளாண்மை அலுவலர் விவசாயி களுக்கு எடுத்துரைத்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் நாராயணன் செய்திருந்தார்.

ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பெட்ரோல் கேனுடன் வந்த இளைஞர்

திருவில்லிபுத்தூர், ஜூலை 23- திருவில்லிபுத்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவல கத்திற்கு பெட்ரோல் கேனுடன் வந்த இளைஞரால் வியாழக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது. கடமங்குளத்தைச் சேர்ந்த கண்ணன், விபத்துக்கு உள்ளான தனது வாகனம் இரண்டு மாதங்களாக காவல்நி லையத்தில் இருந்தும் அதிகாரிகள் ஆய்வு செய்யாததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாகக் கூறி, பெட்ரோலை உடலில் ஊற்றிக் கொள்ள முயன்றார். உடனடியாக அலு வலக ஊழியர்கள் அவரை தடுத்து சமாதானப்படுத்தினர். இதையடுத்து, வட்டாரப் போக்குவரத்து அலுவல ரின் உத்தரவின்பேரில் மோட்டார் வாகன ஆய்வாளர் வன்னியம்பட்டி காவல்நிலையத்துக்குச் சென்று வாக னத்தை ஆய்வு செய்தார். பின்னர், காவல்துறையினர் வாக னத்தை அதன் உரிமையாளர் கண்ணனிடம் ஒப்படைத்தனர்.

பரளிபுதூர் சுங்கச்சாவடியில் கட்டண உயர்வு வாகன ஓட்டிகள் அதிருப்தி

நத்தம், ஜூலை 23- மதுரை–நத்தம்–துவரங்குறிச்சி நான்குவழிச் சாலை யில் நத்தம் அருகே பரளிபுதூரில் செயல்பட்டு வரும் சுங்கச்சாவடியில் கார், பஸ், லாரி உள்ளிட்ட வாகனங் களுக்கான சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப் பட்ட இந்த சுங்கச்சாவடியில், புதிய கட்டண உயர்வு வியாழனன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, கார், ஜீப், வேன்களுக்கு ஒருவழி கட்ட ணம் ரூ.195-ல் இருந்து ரூ.200 ஆகவும், மாதாந்திர கட்டணம் ரூ.6,435-ல் இருந்து ரூ.6,635 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது. பஸ்களுக்கு ஒருவழி கட்டணம் ரூ.675, இருவழி கட்டணம் ரூ.1,010 மற்றும் மாதாந்திர கட்டணம் ரூ.22, 465 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிப்பர் லாரிகளுக்கு ஒருவழி கட்டணம் ரூ.735, இருவழி கட்டணம் ரூ.1,105 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு ரூ.5 முதல் ரூ.200 வரை இருப்ப தாக கூறப்படுகிறது. ஏற்கனவே மாநிலத்தில் அதிக சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் சுங்கச்சாவடிகளில் ஒன்றாக பரளிபுதூர் சுங்கச்சாவடி இருந்து வரும் நிலையில், மீண்டும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிக ள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.