முந்தய பக்கம்

நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை: மணிமுத்தாறு அருவியில் வெள்ளம்

10 May 2026, 11:27 pm
நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை: மணிமுத்தாறு அருவியில் வெள்ளம்
<p><strong>நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை: மணிமுத்தாறு அருவியில் வெள்ளம்</strong></p><p>நெல்லை, மே 10- நெல்லை மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. இதனால் வெயிலின் தாக்கம் ஓரளவுக்கு குறைந்து குளிர்ச்சியாக காணப்படுகிறது, நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, பாபநாசம், சேரன்மகாதேவி, வீரவ நல்லூர், களக்காடு திருக்குறுங்குடி, பாளையங்கோட்டை, மானூர் ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் ஒரு சில இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையைப் பொறுத்தவரை காக்காச்சி, மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து, குதிரை வெட்டி ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் காட்டாற்று வெள்ளம் போல் அங்கு தண்ணீர் ஓடுகிறது. இதன் காரணமாக மணிமுத்தாறு அருவியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. பாபநாசத்தில் உள்ள அகத்தியர் அருவியிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. மொத்தத்தில் நெல்லை மாவட்டத்தில் தற்போது மழை காரணமாக வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram