திருநெல்வேலி விரைவு செய்திகள்
29 Jun 2026, 9:09 pm

வரதட்சனை கொடுமை: கணவர், மாமியார் மீது வழக்குப் பதிவு

குழித்துறை, ஜூன் 29 - களியக்காவிளை அருகே பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை அளித்து வந்ததாக அவரது கணவர், மாமியார் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். களியக்காவிளை அருகேயுள்ள குழிவிளை, பரம்புக் கோடு பகுதியைச் சேர்ந்தவர் பாலையன் மகன் சோபன் (38). கம்ப்யூட்டர் விற்பனையாளரான இவரும், அதே பகுதியைச் சேர்ந்த ஆசீர்வாதம் (31) என்பவரும் காதலித்து கடந்த 2019 ஜூலை மாதம் திருமணம் செய்து கொண்டனர். இத்தம்ப திக்கு 3 குழந்தைகள் உள்ளனர். திருமணத்துக்கு பின் சோபன், அவரது தாயார் சாரதா (60) ஆகியோர் சேர்ந்து அப் பெண்ணை கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்தனராம்.இதுகுறித்து அவர் களியக்காவிளை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சோபன், அவரது தாயார் சாரதா ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசா ரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

மக்கள் குறைதீர் கூட்டம்: நலத்திட்ட உதவிகள் கோரி 438 மனுக்கள்

நாகர்கோவில், ஜூன் 29 - கன்னியாகுமரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் அ.பூங்கோதை தலைமையில் ஜூன் 29 (திங்கள்) அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பொது மக்களிடமிருந்து கல்வி உத வித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத் திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உத வித்தொகை. குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 438 அதிகமான கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட அனைத்து கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணுமாறு மாவட்ட வருவாய் அலுவலர், துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பத்மபிரியா (நிலம்), துறை அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஜூலை 3: மீனவர்கள் குறைதீர் கூட்டம்

நாகர்கோவில், ஜூன் 29 - கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் ஜூலை 3 (வெள்ளிக்கிழமை) அன்று முற்பகல் 10.30 மணிக்கு மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் மீனவர்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை நேரில் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திறக்கப்படாத புதிய கட்டடம்: வாடகை இடத்தில் இயங்கும் அங்கன்வாடி மையம்

குழித்துறை, ஜூன் 29 - ரூ. 14 லட்சம் மதிப்பீட்டில் கடு வாக்குழி அங்கன்வாடி மையத்துக் கான புதிய கட்டடம் கடந்த மூன் றாண்டுகளாக திறக்கப்படாததால், வாடகை கட்டடத்தில் செயல்படும் அவல நிலை நீடித்து வருகிறது. இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அடைக்காக் குழி வட்டாரச் செயலாளர் ரெஜி அளித்துள்ள புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: அடைக்காக்குழி ஊராட்சியில் பயன்பாட்டில் இருந்த கடுவாக்குழி அங்கன்வாடி மையத்தை இடித்து விட்டு முந்தைய ஊராட்சி நிர்வாகம் அனைத்து கிராம அண்ணா மறு மலர்ச்சி-2022-2023 திட்டத்தில் ரூ.14 லட்சத்தில் புது அங்கன்வாடி மையம் கட்டியது. திறப்பு நிக ழ்ச்சிக்கு தயாரான வேளையில் தரமற்ற பணி காரணமாக அதன் தரைதளத்திலும் சுவர்களிலும் விரிசல்கள் ஏற்பட்டன. அதன் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக பூட்டிய நிலையில் அக்கட்டடம் காணப்படுகிறது. அங்கான்வாடி குழந்தைகள் வாடகை கட்டிடத்தில் பயின்று வரு கிறார்கள். எனவே, உடனடியாக கட்டிடத்தை சரி செய்து பயன் பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். குளப்புரம் ஊராட்சி யில் மேத்தன்விளை, மேக்கா விளை ஆகிய இடங்களில் பொது மக்களுக்கு இடையூறாகவும், ஆபத் தாகவும் நிற்கின்ற அயனி மற்றும் இலவு மரத்தை அகற்ற பத்மநாப புரம் சார் ஆட்சியர் உத்தரவிட்டும் இதுவரை அகற்றப்படவில்லை. பொது மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் இவைகளை உடனே அகற்ற வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப் பட்டுள்ளது.

மது அருந்திய போது தகராறு: ஒரே நாளில் 3 பேர் கொலை

நாகர்கோவில், ஜூன் 29 - குமரி மாவட்டத்தில் மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் மூன்று கொலைகள் நடந்துள்ளன. நாகர்கோவிலை அடுத்த ஈத்தாமொழி கண்ணம்பிவிளை பகுதியில், மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் கூலித் தொழிலாளர்கள் லிங்கசாமி (48) மற்றும் சிங்கம் (60) ஆகியோர் கற்களால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டனர். இதேபோல் சுசீந்திரம் அருகே தனியார் பள்ளி வளாகத்தில், மது போதையில் ஏற்பட்ட தகராறில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி சரவணகுமார் (35) கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை ஒரு மணி நேரத்தில் தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். குமரி மாவட்டத்தில் மது போதையில் ஒரே நாளில் 3 கொலைகள் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நத்தம் அருகே தோட்டத்து வீட்டில் புகுந்த மலைப்பாம்பு

நத்தம், ஜூன் 29- திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே சின்ன அரவங் குறிச்சியைச் சேர்ந்தவர் முத்துராமன் (37). விவசாயியான இவர், தனது விவசாயத் தோட்டத்தில் உள்ள வீட்டில் ஞாயிறு காலை சுமார் 6 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் நத்தம் தீயணைப்புத் துறையின ருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், நத்தம் தீய ணைப்பு நிலைய உதவி அலுவலர் அம்சராஜன் தலைமை யிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். புதருக்குள் மறைந்திருந்த மலைப்பாம்பை பொதுமக் கள் உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பாக பிடித்த னர். பின்னர், அந்த மலைப்பாம்பை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் அதை பாதுகாப்பாக வனப்பகுதியில் விடுவித்தனர்.

கண்மாயில் மண் திருட்டு: சிறுவன் உட்பட இருவர் கைது

சின்னாளப்பட்டி, ஜூன் 29- திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே உள்ள கண்மாயில் சட்டவிரோதமாக மண் அள்ளியதாக சிறுவன் உட்பட இருவரை போலீசார் கைது செய்து, ஜேசிபி இயந்தி ரம் மற்றும் டிராக்டரை பறிமுதல் செய்தனர். பட்டிவீரன்பட்டி காவல்நிலைய சார்பு ஆய்வாளர் வாணிக்கு கிடைத்த தகவலின் பேரில், போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் இணைந்து கண்காணிப்பு பணி யில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, எம்.வாடிப்பட்டி பகுதியில் உள்ள கோபால் சமுத்திரம் கண்மாயில் சட்டவிரோதமாக மண் அள்ளப் பட்டு வந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, எம்.வாடிப்பட்டியைச் சேர்ந்த பெரிய சாமி மகன் கண்ணன் (20) மற்றும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும், மண் அள்ள பயன்படுத்தப்பட்ட ஜேசிபி இயந்திரம், டிராக்டர் மற்றும் அள்ளப்பட்ட மண்ணை பறி முதல் செய்த போலீசார், சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருநெல்வேலி ரயில் நிலையத்தில் பயன்பாட்டுக்கு வரும் 6 ஆவது நடைமேடை

திருநெல்வேலி,ஜூன் 29 - ரயில்களை பாதுகாப் பாக இயக்க மற்றும் கூடுதல் போக்குவரத்து கட்டமை ப்புகளை உருவாக்க ஜூன் 10 முதல் ஜூன் 30 வரை திருநெல்வேலி ரயில் நிலைய ரயில் பாதை அமை ப்புகளை மாற்றி அமைக் கும் பணி நடைபெற்று வருகிறது. இதன்மூலம் தற்போது பயன்பாட்டில் இருந்து வரும் மின் இயந்திரவியல் சிக்னல் முறை மாற்றப்படும். இந்த முறையில் ரயில் பாதை இணைப்பு பாயி ண்ட்டுகள் மற்றும் கைகாட்டி விளக்குகள் விசை மாற்றி கள் மூலம் இயக்கப்பட்டு வந்தன. தற்போது நடை பெற்று வரும் வளர்ச்சி பணி கள் முடிந்த பிறகு நவீன மின்னணு சிக்னல் முறை அமலுக்கு வர உள்ளது. இதில் கணிப்பொறி மென் பொருள் மூலம் ரயில் பாதை இணைப்புகள் மற்றும் கைகாட்டி விளக்குகளை விரைவான “மவுஸ் கிளிக்” மூலம் இயக்க முடியும். மேலும் ரயில் பாதை அமைப்புகள் மாறுவதால் இரட்டை ரயில் பாதையில் இருபுறமும் ரயில்களை எளிதாக பாதுகாப்பாக இயக்க முடியும். மேலும் நாகர்கோவில் பகுதியில் இருந்து வரும் ரயில்களினால் தென்காசி பகுதியில் இருந்து வரும் ரயில்களை, தாமதம் இல்லாமல் பாதுகாப்பாக கையாள புதிய 600 மீட்டர் நீள நடைமேடை எண்.9 பயன்பாட்டுக்கு வர உள்ளது. இந்த வளர்ச்சி பணிகளினால் ரயில் என்ஜின்கள், ரயில் பாதை பராமரிப்பு இயந்திர ரயில், மின் பாதை பராமரிப்பு, இயந் திர ரயில் ஆகியவற்றிற்கு தனித் தனி ரயில் பாதை கள், ரயில் பெட்டி பராம ரிப்பு பணிமனை, ரயில் பாதைகளுக்கு முழுமை யான மின் தடங்கள் போன்ற வை அமைக்கப்படுகின்றன. இதன்மூலம் ரயில் பாதை, ரயில் பெட்டி, மின் தடங்கள் பராமரிப்பு மேம் படும். வளர்ச்சி பணிகளில் புதிய சிக்னல் முறையினால் பாதுகாப்பு மேம்படுவதால் ரயில்கள் பாதுகாப்பாக இயங்குவது உறுதி செய் யப்படும். புதிய கட்டமைப்பு கள் உருவாவதால் கூடு தல் ரயில்களை கையாள முடியும். இந்த வளர்ச்சி பணி களால் ரயில் போக்கு வரத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு பயணிகளு க்கு இடையூறு ஏற்பட்டது. இந்த தற்காலிக இடையூ றால் நீண்டகால பயன் பாட்டிற்கான புதிய கட்ட மைப்புகள் உருவாகி யுள்ளன.

தேவாலய பணியாளர்கள் நலத்திட்ட உதவி பெற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

தென்காசி, ஜூன் 29 - கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரி யும் உபதேசியார்கள் மற்றும் பணியா ளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்காக இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க லாம் என மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து தென்காசி ஆட்சியர் ரஞ்ஜீத்சிங் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரிவோருக்கு, விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் உதவித்தொகை, இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை, ஈமச் சடங்கு செலவிற்கான உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, திருமண உத வித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, மூக்குக் கண்ணாடி செலவுத்தொகை ஈடு செய்தல் மற்றும் முதியோர் ஓய்வூதியம் போன்ற நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நலத்திட்ட உதவிகளை பெறுவ தற்கு, கிறித்துவ இனத்தைச் சார்ந்த வர்கள், 18 வயது முதல் 60 வயது நிறைவு பெறாதவர்கள், கிறித்துவ தேவாலயங்க ளில் பணியாற்றும் உபதேசியார்கள், வேதி யர்கள், சீஷப்பிள்ளைகள், பாடகர்கள், கல்லறை பணியாளர்கள், கிறித்துவ ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் தொழுநோயாளியர், மறுவாழ்வு இல்லங்களில் பணிபுரியும், முறையான மாதாந்திர ஊதியம் இல்லாத பணியா ளர்கள் ஆகியோர் இவ்வாரியத்தில் உறுப்பி னர்களாக பதிவு செய்து நலத்திட்ட உதவிகளை பெறத் தகுதி பெறுகின்றனர். நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்தல் மற்றும் நலத்திட்ட உதவிகள் பெற விரும்புவோர் www.uwb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இடி, மின்னல் தாக்கி பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்தது

மதுரை, ஜூன் 29- மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அழகாபுரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி கட்டி டத்தின் ஒரு பகுதி இடி, மின்னல் தாக்கியதில் இடிந்து விழுந்தது. பள்ளிக்கு விடுமுறை என்பதால் 120 மாணவ, மாணவிகள் உயிர்தப்பினர். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு பெய்த மழையின்போது பள்ளி கட்டிடத்தின் மீது இடி, மின்னல் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பள்ளி கட்டிடத்தின் மையப்பகுதியில் அமைந்திருந்த சமையலறையின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்து சேதமடைந்தது. சனிக்கிழமை பள்ளிக்கு விடுமுறை என்பதால் மாணவர்கள் யாரும் பள்ளிக்கு வராத நிலையில், பெரும் அசம்பா விதமும் உயிர்ச் சேதமும் தவிர்க்கப்பட்டது.