தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருநெல்வேலி விரைவு செய்திகள்

1 Nov 2026, 10:56 pm
திருநெல்வேலி  விரைவு செய்திகள்

நெல்லை சந்திப்பில் காருக்குள்இறந்து கிடந்த ரயில்வே ஊழியர்

திருநெல்வேலி, நவ.1– ​நெல்லையை அடுத்த தச்சநல்லூர் புது அம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் வேல்ராஜ் (38). இவர் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் கிரேடு–3 டெக்னீசியனாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு துர்கா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

​இந்த நிலையில் நேற்று முன்தினம் வேல்ராஜ், மதுரையில் நடைபெற்ற பதவி உயர்வுக்கான தகுதி தேர்வுக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து தனது காரில்புறப்பட்டு சென்றார். அதன் பின்னர் சனிக்கிழமை அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது செல்போனுக்கு துர்கா பலமுறை போன் செய்து பார்த்தும் அவர் போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த துர்கா ஞாயிற்றுக்கிழமை காலை சந்திப்பு ரயில் நிலையம் பகுதிக்குதனது கணவர் வேல்ராஜ் குறித்து விசாரிப்பதற்காக சென்றுள்ளார்.

​அப்போது ரயில் நிலையத்தின் மேற்கு பகுதியில் ரயில்வே ஊழியர்கள் குடியிருப்பு பகுதிக்கு பின்புறம் வேல்ராஜின் கார் நின்று கொண்டிருந்தது. அங்கு சென்று, தான் எடுத்து வந்த மற்றொரு சாவியால் காரை திறந்தார். அப்போது காரில் வேல்ராஜ் இறந்து கிடந்தார். தகவல் அறிந்து சந்திப்பு போலீசார் விரைந்து சென்று வேல்ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். வேல்ராஜுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. எனவே அவர் மது போதையில் காரில் தூங்கியிருக்கலாம். அப்போது நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்று போலீசார் சந்திக்கின்றனர். எனினும் உடல் கூராய்வு அறிக்கை வந்த பின்னரே முழு விபரம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

ஸ்ரீவைகுண்டம் கிளைச்சிறை திடீர் மூடல்:25 கைதிகள் பேரூரணி சிறைக்கு மாற்றம்

தூத்துக்குடி, நவ.1-தேனி சிறையில் கைதிகள் தப்பி ஓடிய சம்பவத்தின் எதிரொலியாக பாதுகாப்புமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் இயங்கி வந்த பழமையானகிளை சிறைச்சாலை எவ்வித முன் அறிவிப்புமின்றி திடீரென மூடப்பட்டுள்ளது.பாதுகாப்புப் பலவீனமாக உள்ள பழமையான கிளை சிறைகளை மூடி, கைதிகளை மாவட்ட சிறைகளுக்கு மாற்றவும் சிறைத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

ஸ்ரீவைகுண்டம் பழைய தாலுகா அலுவலக வளாகத்தில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் முதல் இயங்கி வந்த கிளைசிறையில் 100 கைதிகள் வரை அடைக்கும் வசதி இருந்தது. ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், சாத்தான்குளம் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்படும் கைதிகள் இங்கு அடைக்கப்பட்டு வந்தனர்.தற்போது பாதுகாப்புப் பலப்படுத்துதல் மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு இக்கிளை சிறையை மூட சிறைத்துறை உத்தரவிட்டது. இதனையொட்டி, நேற்று முன்தினம் இரவோடு இரவாக ஸ்ரீவைகுண்டம் கிளை சிறை மூடப்பட்டு, அதன் நுழைவுவாயிலுக்குப் பூட்டு போடப்பட்டது.இச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த 25 விசாரணைக் கைதிகளும் துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்களில் ஏற்றப்பட்டு, தூத்துக்குடி அருகே உள்ள பேரூரணி மாவட்டச் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டனர்.

ஏற்கெனவே பேரூரணி சிறையில் கைதிகள் எண்ணிக்கை அதிகமாக உள்ள நிலையில், தற்போது ஸ்ரீவைகுண்டம் கைதிகளும் அங்கு மாற்றப்பட்டுள்ளதால் பேரூரணி மாவட்டச் சிறை வளாகத்தில் பாதுகாப்பை மேலும்பலப்படுத்த வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துஉள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.