வரையாடுகள் தினத்தில் அவல நிலை திருநெல்வேலியில் பாழடைந்து,பராமரிப்பின்றி இருளில் மூழ்கிய வரையாடு சுற்றுலாத் தலம்
7 Oct 2026, 10:06 pm

வரையாடுகள் தினத்தில் அவல நிலை திருநெல்வேலியில் பாழடைந்து,பராமரிப்பின்றி இருளில் மூழ்கிய வரையாடு சுற்றுலாத் தலம்

திருநெல்வேலி, அக். 7-ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 7 ஆம் தேதி அன்று’நீலகிரி வரையாடுகள் தினம்’ (Nilgiri Tahr Day)அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் அமைந்துள்ள நீலகிரி வரையாடு சுற்றுலாத் தலம் எந்தவித பராமரிப்புமின்றி பாழடைந்துகிடப்பது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தமிழகத்தின் மாநில விலங்கான நீலகிரி வரையாடுகளைப் பாதுகாக்க வேண்டியது வனத்துறையின் கடமை மட்டுமல்ல; அவற்றின் பெயரால் உருவாக்கப்படும் பொது இடங்களையும், சுற்றுலாத் தலங்களையும் முறையாகப் பராமரிப்பது உள்ளாட்சி அமைப்பானமாநகராட்சியின் முக்கியப் பொறுப்பாகும்.ஆனால், திருநெல்வேலி ரெட்டியார்பட்டி பகுதியில்வரலாற்றுச் சிறப்புமிக்க பொருநை அருங்காட்சியகம் அருகே அமைக்கப்பட்டுள்ள நீலகிரி வரையாடு சுற்றுலாத் தலம், தற்போது பரிதாப நிலையில் உள்ளது.போதுமான மின் விளக்கு வசதிகள் மற்றும் பராமரிப்பு இல்லாததால், இந்த சுற்றுலாத் தலம் இரவு நேரங்களில்முழுமையாக இருளில் மூழ்கிக் கிடக்கிறது, புதன்கிழமையன்று வரையாடுகள் தினம் கொண்டாடப்படும் சிறப்பு நாளில்கூட, மாநகராட்சி நிர்வாகம் இந்தத்தலத்தை சீரமைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்தஇடம்,தற்போது சமூக விரோதிகளின் புகலிடமாகவோ அல்லது குப்பைமேடாகவோ மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வரையாடுகளின் முக்கியத்துவத்தை இளம் தலைமுறையினருக்கும் பொதுமக்களுக்கும் எடுத்துரைக்கும் வகையில் அமைந்துள்ள இந்த சுற்றுலாத் தலத்தை, திருநெல்வேலி மாநகராட்சிநிர்வாகம் உடனடியாகக் சீரமைக்க வேண்டும்.மின்விளக்கு வசதிகளைச் செய்து தருவதுடன், செடிகொடிகளை அகற்றி, முறையான பாதுகாப்பு மற்றும் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு, இந்தச் சுற்றுலாத் தலத்திற்கு மீண்டும் உயிர் கொடுக்க வேண்டும் என்பதேஇப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.