முந்தய பக்கம்

நெல்லையில் நூல் வெளியீட்டு விழா

3 Oct 2026, 11:18 pm
நெல்லையில் நூல் வெளியீட்டு விழா
<p>நெல்லையில் நூல் வெளியீட்டு விழா</p><p>திருநெல்வேலி, அக் 3-தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் திருநெல்வேலி கிளை சார்பில், எழுத்தாளர் நிலவழகியின் “மனதின் தேடல்” நூல் வெளியீட்டு விழா சிந்துபூந்துறை மூட்டா அலுவலகத்தில் வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு இளமுனைவர் பூ.திரிபுரசுந்தரி தலைமை வகித்தார். நூலை முனைவர் நெல்லை உலகம்மாள் வெளியிட, து.முத்தாலம்மாள், அ.சித்ரா ஆகிய இருவரும் பெற்றுக்கொண்டனர். தமுஎகச மாவட்டச் செயலாளர் வண்ணமுத்து, முனைவர் நெல்லை உலகம்மாள், எழுத்தாளர் இளம்பிறை ஆகியோர் வாழ்த்திப் பேசினர். எழுத்தாளர் நிலவழகி ஏற்புரையாற்றினார். பி. இராஜகோபால் நன்றி கூறினார்.</p><p><br></p>
Share
FacebookXWhatsAppTelegram