தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருநெல்வேலி விரைவு செய்திகள்

10 Oct 2026, 10:16 pm
திருநெல்வேலி  விரைவு செய்திகள்

திருநெல்வேலி விரைவு செய்திகள்

ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க நெல்லை போலீஸ் எஸ்.பி.உத்தரவு

திருநெல்வேலி, அக். 10- ​நெல்லை மாவட்டத்தில் ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள போலீஸ் எஸ்.பி., விஷ்வேஷ் பா. சாஸ்திரி உத்தரவிட்டார்.

மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல்துறை அதிகாரிகளுக்கு மாதாந்திர ஆய்வுக் கூட்டம் எஸ்.பி., விஷ்வேஷ் பா. சாஸ்திரி தலைமையில் நடைபெற்றது. அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை, நிலுவை வழக்குகள், நீதிமன்ற பணிகள் குறித்து ஆய்வு நடந்தது. கஞ்சா, புகையிலை கடத்தல் நபர்கள், ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். காவல் துறை வாகனங்களின் பராமரிப்பு குறித்து ஆய்வு செய்தார். சீரிய முறையில் பணியாற்றிய காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் உட்பட 98 பேருக்கு எஸ்.பி., நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

பொழிக்கரையில் மின்னல் தாக்கி வீடுகளில்மின்சாதனப் பொருட்கள் சேதம்

திருநெல்வேலி, அக். 10- திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே பொழிக்கரை கிராமத்தில் மின்னல் தாக்கியதில் ஒருவரின் வீட்டில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

பொழிக்கரைமடை பகுதியைச் சேர்ந்த இ. பொன்ராஜ் என்பவரது வீட்டின் அருகே வெள்ளிக்கிழமை மாலை சுமார் 4 மணியளவில் மின்னல் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதன் தாக்கத்தால் வீட்டின் சுவர்கள் மற்றும் மேல்தளத்தில் உள்ள பூச்சுகள் மற்றும் கட்டமைப்புகள் சேதமடைந்தன.

மேலும், வீட்டு அருகே பொருத்தப்பட்டிருந்த காலிங் பெல், டி.வி, ஃப்ரிட்ஜ் மற்றும் ஏசி (AC) உள்ளிட்ட மின்சாதனங்கள் முற்றிலும் எரிந்து போயுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

​வீட்டின் மின் வயரிங் முழுமையாக மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், இதற்கு ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையே, பொழிக்கரைமடை மற்றும் அதனைச் சுற்றியுள்ள வீடுகளிலும் இதே போன்று தொலைக்காட்சி, மின்விசிறிகள் உள்ளிட்ட மின்சாதனப் பொருட்கள் சேதமடைந்துள்ளன. ​இதற்கிடையே, மின்வாரிய உயர் அதிகாரிகள் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பாதிப்புகளை ஆய்வு செய்துள்ளனர். விபத்து அபாயத்தைத் தவிர்க்க பாதிக்கப்பட்ட வீட்டின் மின் இணைப்பு தற்காலிகமாகத் துண்டிக்கப்பட்டு, பாதுகாப்பு எச்சரிக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. வீட்டின் மின்சார அமைப்பு மற்றும் மின் சாதனங்களின் சேதம் குறித்து முழுமையான ஆய்வு மேற்கொண்டு, உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வீட்டின் உரிமையாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

திருச்செந்தூர் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.5.26 கோடி

தூத்துக்குடி, அக்.10-திருச்செந்தூர் முருகன் கோவிலின் உண்டியல் மூலம் அக்டோபர் மாதத்தில் ரூ.5.26 கோடி பணம் மற்றும் 1,236 கிராம் தங்கம் கிடைத்துள்ளது.

திருச்செந்தூர் முருகன் கோயிலின் உண்டியல் காணிக்கை எண்ணும் பணிகள் கோயில் நிர்வாக அலுவலக அரங்கில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெற்றன. இதன்படி, பக்தர்கள் காணிக்கையாக ரூ.5,26,22,024 பணம், தங்கம் 1,236 கிராம், வெள்ளி 34,262 கிராம், பித்தளை 49,005 கிராம், செம்பு 5,156 கிராம், தகரம் 12,544 கிராம், வெளிநாட்டுப் பணத்தாள்கள் 2,102 இருந்தன.

இப்பணியினை அறங்காவலர் குழுத் தலைவர் இரா. அருள்முருகன் பார்வையிட்டார். இணை ஆணையர் அருணாசலம், அறங்காவலர்கள் மற்றும் கோயில் பணியாளர்கள், அயற்பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டனர்.

விவசாய நிலங்களில் பட்டாசு ஆலை அமைக்க அனுமதி கோரி நடுவப்பட்டி விவசாயிகள் ஆட்சியரிடம் மனு

தென்காசி, அக். 10-தென்காசி மாவட்டம், திருவேங்கடம் வட்டத்தில் உள்ளது நடுவப்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் ஆண்டுக்கு 3 மாதங்கள் மட்டுமே விவசாயப் பணிகள் நடைபெறுவதால், மீதமுள்ள 9 மாதங்களும் வேலைவாய்ப்பின்றித் தவிப்பதால் , விவசாய நிலங்களில் பட்டாசு ஆலை அமைக்க அனுமதி வழங்கக் கோரி அப்பகுதி விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

தென்காசி மாவட்டம், திருவேங்கடம் வட்டம், நடுவப்பட்டி கிராமம் வானம் பார்த்த பூமியாக இருப்பதால், ஆண்டுக்கு மூன்று மாதங்கள் மட்டுமே விவசாயப் பணிகள் நடைபெறுகின்றன. இதனால், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் சிறு, குறு விவசாயிகள் ஆண்டின் பெரும்பகுதியில் வேலைவாய்ப்பின்றிப் பொருளாதாரச் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். எனவே, விவசாயிகளுக்கும் விவசாய நிலங்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், உரிய விதிமுறைகளுக்கு உட்பட்டு பட்டாசு ஆலை அமைக்க அனுமதி வழங்க வேண்டும். இதன் மூலம் விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதுடன், சிறு, குறு விவசாயிகளின் வாழ்வாதாரமும் மேம்படும். கிராம மக்களின் பொருளாதார நிலையை உயர்த்தும் நோக்கில் பட்டாசு ஆலை அமைக்க அனுமதியளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர். விவசாய நிலங்களில் பட்டாசு ஆலை அமைக்க அனுமதி கோரி விவசாயிகளே மனு அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை அஞ்சல் கோட்டத்தில் தேசிய அஞ்சல் வார விழா

திருநெல்வேலி, அக்.10-இந்திய அஞ்சல்துறையின் சார்பில் தேசிய அஞ்சல் வார விழா அக்டோபர் 9 முதல் 15 ஆம் தேதி வரை நாடு முழுவதும் கொண்டாப்படுகிறது.

இதையொட்டி நெல்லை அஞ்சல் கோட்டத்தின் சார்பில் பொதுமக்களிடையே அஞ்சல் சேவைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. இந்த ஆண்டின் உலக அஞ்சல் தினக் கருப்பொருளாக ‘ஒரே அஞ்சல் கட்டமைப்பு; எல்லையற்ற சாத்தியக்கூறுகள்’ என்னும் தலைப்பில் கொண்டாடப்பட உள்ளது. ​அஞ்சல் துறையின் சேவைகளை பொதுமக்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என நெல்லை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ராஜேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.