திருநெல்வேலி விரைவு செய்திகள்
30 Oct 2026, 9:31 pm

குரூப் 2, 2ஏ தேர்வு: தேனி மாவட்டத்தில் 9,231 பேர் எழுதுகின்றனர்

தேனி, அக். 30-தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் குரூப் 2 மற்றும் 2ஏ பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு வருகிற நவம்பர் 1-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி தேனி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வெள்ளியன்றுநடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வ.சிவகிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கி பணிகளை ஆய்வுசெய்தார்.

பின்னர் ஆட்சியர் தெரிவித்ததாவது:நவம்பர் 1 அன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெறவுள்ள குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலைத் தேர்வை, தேனி மாவட்டத்தில் மொத்தம் 9,231 தேர்வர்கள் எழுத உள்ளனர். இதற்காக தேனி வட்டத்தில் 23 மையங்கள், உத்தமபாளையம் வட்டத்தில் 9 மையங்கள் என மொத்தம் 32தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.தேர்வுகள் எவ்வித முறைகேடுகளுமின்றி நேர்மையாகவும் அமைதியாகவும் நடைபெறுவதை உறுதிசெய்ய தீவிர கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இதற்காக 3 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 3 பறக்கும்படைக் குழுக்கள் மற்றும் 8 நடமாடும் கண்காணிப்புக் குழுக்கள் (மொபைல் பார்ட்டிகள்) அமைக்கப்பட்டு தீவிரபணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

தேர்வு மையங்களில் தடையில்லா மின்சார வசதி, போதுமான குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் தடையின்றி கிடைப்பதை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் நேரில் பார்வையிட்டு முன்கூட்டியே உறுதி செய்ய வேண்டும். மேலும், தேர்வு எழுத வரும் இளைஞர்கள், பெண்கள் சிரமமின்றி மையங்களுக்குச் சென்று வர ஏதுவாக, போக்குவரத்துத்துறை சார்பில்கிராமப்புற மற்றும் நகர்ப்புற வழித்தடங்களில் உரிய நேரத்திற்கு கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கைஎடுக்க வேண்டும். தேர்வுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மையங்களைஉடனடியாக ஆய்வு செய்து முன்னேற்பாடுகளை விரைந்து முடிக்க வேண்டும் .இவ்வாறு ஆட்சியர் உத்தரவிட்டார்.

பழனி கோவில் நில மோசடி வழக்கு: ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி!

பழனி,அக்.30-பழனி தண்டாயுதபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை மோசடியாகப் பத்திரப்பதிவு செய்த வழக்கில் கைது செய்யப்பட்டசார்பதிவாளர் அலுவலக இளநிலை உதவியாளர் மற்றும் வழக்கறிஞர் ஆகிய இருவரின் ஜாமின் மனுக்களையும் திண்டுக்கல் முதன்மை மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டதுபழனி அடிவாரம் பகுதியில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் மோசடியாகத் தனியார் பெயருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டதாகப் புகார் எழுந்தது. இதுகுறித்துநடைபெற்ற விசாரணையில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் (48), சார்பதிவாளர் அலுவலக இளநிலை உதவியாளர் சிவசங்கரி (46), போலி பத்திரம் தயாரித்துக் கொடுத்ததாகக் கூறப்படும்விருப்பாட்சி பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் சிவக்குமார் (36) உள்ளிட்ட 8 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.இந்த வழக்கில் முருகதாஸ், சேதுபதி, வெள்ளைத்துரை, ஜெயப்பிரகாஷ், ஜஸ்டின் மணிகண்டன் ஆகிய 5பேருக்கு எதிராக கடந்த அக்டோபர் 23 ஆம் தேதி சிபிசிஐடி போலீசார் மின்னணு முறையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதற்கிடையே, கைது செய்யப்பட்டுள்ள இளநிலை உதவியாளர் சிவசங்கரி மற்றும் வழக்கறிஞர் சிவக்குமார் ஆகியோர் தங்களுக்கு ஜாமீன்வழங்கக் கோரி திண்டுக்கல் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.இந்த மனுக்கள் நீதிபதி பத்மநாபன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தன. அப்போது, அரசு தரப்பில் ஆஜரானவழக்கறிஞர் சிவச்சந்திரன், இருவருக்கும் ஜாமீன் வழங்கக் கடும் ஆட்சேபணை தெரிவித்தார். இருதரப்புவாதங்களையும் கேட்ட நீதிபதி, சிவசங்கரிமற்றும் வழக்கறிஞர் சிவக்குமார் ஆகிய இருவரின் ஜாமின்மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

டிராகன்பழம் சாகுபடிக்கு ரூ.1.62 லட்சம் மானியம் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

திருநெல்வேலி, அக். 30 – நெல்லை மாவட்டத்தில் டிராகன் பழம் சாகுபடி செய்ய ஹெக்டருக்கு ரூ.1.62 லட்சம் மானியம் வழங்கப்பட உள்ளதால் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என தோட்டக்கலைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிராகன் பழம் சாகுபடி, குறைந்த நீர் தேவையுடன் அதிக வருமானம் தரும் தோட்டக்கலை பயிராகும். இது

ஒரு பல்லாண்டு பயிராகும், நடவு செய்த 12 முதல் 18 மாதங்களுக்குள் வணிக ரீதியாக மகசூல் அளிக்கத் தொடங்கும். சரியான பராமரிப்பின் மூலம் சுமார் 20 ஆண்டுகள் வரை தொடர்ந்து மகசூல் பெறமுடியும்.

நெல்லை மாவட்டத்தில் 4 ஹெக்டெர் அளவு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 20 சதவீதம் ஆதிதிராவிடர் விவசாயிகளுக்கும், 80 சதவீதம் மற்ற விவசாயிகளுக்கும், ஒரு ஹெக்டேர் சாகுபடிக்கு ரூ.1 லட்சத்து 62 ஆயிரம் மானியமாக வழங்கப்பட உள்ளது. விண்ணப்பிக்கும் முறை: [https://tnhorticulture.tn.gov.in/tnhortnet](https://tnhorticulture.tn.gov.in/tnhortnet) என்றஇணையதளம் மூலமாக விண்ணப்பித்து பதிவு செய்யலாம். அல்லது வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் சமர்ப்பித்து பதிவு செய்து பயன்பெறலாம்.

சிறுமியர் பாலியல் வன்கொடுமை வழக்கு மதபோதகருக்கு 4 தூக்கு தண்டனைகளை உறுதி செய்யக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு

மதுரை, அக். 30 -நெல்லை மாவட்டம், தேவர்குளம் அருகே மேலஇலந்தைகுளத்தில் 13 வயதுக்குட்பட்ட 4 சிறுமியரைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மதபோதகர்ஆபிரகாமுக்கு விதிக்கப்பட்ட 4 தூக்கு தண்டனைகளை உறுதி செய்யக்கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு ஒத்திவைத்தது.

மேல இலந்தைகுளத்தில் 2020 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் 13 வயதுக்குட்பட்ட 4 சிறுமியரை மதபோதகர் ஆபிரகாம் பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றம், குற்றவாளி ஆபிரகாமுக்கு 4 தூக்கு தண்டனைகள் விதித்துஉத்தரவிட்டது.இந்தத் தண்டனையை உறுதி செய்யக் கோரி காவல்துறை தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையே, தண்டனையை எதிர்த்து ஆபிரகாம் தரப்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் நிர்மல்குமார், குணசேகரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கானை நியமித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.மேலும், வழக்கை இறுதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கான தேதியை முடிவு செய்வதற்காக விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.