திருநெல்வேலி விரைவு செய்திகள்
13 Aug 2026, 10:25 pm

திருநெல்வேலி விரைவு செய்திகள்

தங்கச் சங்கிலியை பறித்தவருக்கு 3 ஆண்டு சிறைகுழித்துறை நீதிமன்றம் தீர்ப்பு

நாகர்கோவில், ஆக.13-கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறத்தில் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற கேரளத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு குழித்துறை நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

மேல்புறம் பழக்கடையில் பழம் வாங்குவது போல் நடித்து வியாபாரியின் மனைவி கிறிஸ்டினாவின் கழுத்தில் இருந்த 6.5 பவுன் தங்கச் சங்கிலியை ஒரு பெண் பறித்துச் சென்றார். இதுகுறித்து அருமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சிசிடிவி காட்சிகள் மற்றும் சம்பவ இடத்தில் கிடைத்த செருப்பை வைத்து கேரள மாநிலம் வெள்ளறடை ஆலம்பாறையை சேர்ந்த சாந்தகுமாரி (44) என்பவர் கைது செய்யப்பட்டார். அவருடன் சென்ற சதீஷ் என்பவரும் கைது செய்யப்பட்டார்.இதுகுறித்த வழக்கு குழித்துறை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் நீதிபதி சுசின்குமார், சாந்தகுமாரிக்கு 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.1,000 அபராதம்விதித்து தீர்ப்பளித்தார். சதீஷ் விடுதலை செய்யப்பட்டார்.

நெல்லை மாவட்ட அணைகளில் நீர்மட்டம்

திருநெல்வேலி ஆக 13-நெல்லை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளின் நீர்மட்ட நிலவரம் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.பிரதான அணையான பாபநாசம் அணையின் தற்போதைய நீர் இருப்பு 83.65 அடியாக உள்ளது. அணைக்கு 615.78 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 1104.75 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

சேர்வலாறு அணையின் நீர் இருப்பு 96.55 அடியாக பதிவாகியுள்ளது. இங்கு அணையின் நீர்வரத்து மற்றும் வெளியேற்றம் எதுவும் இல்லை. மணிமுத்தாறு அணையின் நீர் இருப்பு 66.41 அடியாக உள்ளது. அணைக்கு 86.82 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், 255 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

வடக்கு பச்சையாறு அணையின் நீர் இருப்பு 6 அடி. நீர்வரத்து மற்றும் வெளியேற்றம் இல்லை.நம்பியாறு அணையில் நீர் இருப்பு 14 அடி. நீர்வரத்து மற்றும் வெளியேற்றம் இல்லை. கொடுமுடியாறு அணையில் நீர் இருப்பு 15 அடி. அணையிலிருந்து 25 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.