திருநெல்வேலி விரைவு செய்திகள்
6 Oct 2026, 9:36 pm

பெ.சண்முகம் குறித்து அவதூறுகுமரி எஸ்பியிடம் சிபிஎம் புகார்

நாகர்கோவில், அக். 5-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அதன் மாநில செயலாளர் பெ.சண்முகம் குறித்து சமூக வலைதளத்தில்அவதூறான மற்றும் பொய்யான தகவல்களை பரப்பிய நபர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரிகன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சிபிஎம் மாவட்டச் செயலாளர் என்.எஸ்.கண்ணன் புகார்அளித்துள்ளார்.

குமரி மாவட்டம் புலையன்விளை கென்னடி பிரான்சிஸ் என்பவர் திட்டமிட்டு அவமானப்படுத்தும் உள்நோக்கத்துடன் சிபிஐ(எம்) கட்சியின் மீதும், மாநில செயலாளர் பெ.சண்முகம் மீதும் தவறான, பொய்யான, அருவருப்பாக வெளியிட்டுள்ள சமூக வலைத்தள விளம்பரம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

புகாரில், சிபிஎம் மற்றும் சிபிஐ கட்சிகள் மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுவது தொடர்பாக சமூக வலைதளத்தில் சில குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. மேலும் சிபிஎம் மாநிலச்செயலாளர் பெ.சண்முகம் குறித்து தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்தும் வகையிலான கருத்துகளும் அந்த காணொலியில் இடம்பெற்றுள்ளன. அவை கட்சிக்கும், மாநிலச் செயலாளரின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளன. சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் குறித்து உரிய விசாரணை நடத்தி, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.வி.பெல்லார்மின், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அகமது உசேன் ஆகியோர் உடனிருந்தனர்.

55 காலி வணிக மனைகளை வாங்க விண்ணப்பிக்கலாம்

தென்காசி, அக். 06-திருநெல்வேலி வீட்டு வசதி பிரிவிற்குட்பட்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய திட்டப்பகுதிகளில் காலியாக உள்ள 55 வணிக மனைகள் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளன.

கீழநத்தம் பகுதி-I, பாளையங்கோட்டை பகுதி-I மற்றும் II, தென்காசி, வல்லன்குமாரன்விளை, வி.எம்.சத்திரம் நிலை-II, குலவணிகர்புரம் (TNUDP), சங்கரப்பேரி (TNUDP), மீளவிட்டான் (TNUDP), நாரணம்மாள்புரம் திட்டப்பகுதி-I மற்றும் நாரணம்மாள்புரம் பகுதி-II (TNUDP) ஆகிய திட்டப்பகுதிகளில் இந்த வணிக மனைகள் அமைந்துள்ளன.

வணிக மனைகளின் விற்பனை விவரம் மற்றும் விண்ணப்பிக்கும் நடைமுறைகள் குறித்து தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான tnhb.tn.gov.in மூலம் பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம்.

வணிக மனைகளைப் பெற விரும்பும் பொதுமக்கள் 09.10.2026-க்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கயத்தாறு அருகே பைக் மீது அரசு பேருந்து மோதல் : ஒருவர் பலி

தூத்துக்குடி,அக்.6-கயத்தாறு அருகே பைக் மீது அரசுப் பேருந்து மோதியவிபத்தில் ஒருவர் உயிரிழந்தார். திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை, குலவணிகர்புரம் பகுதியைச்சேர்ந்தவர் ராஜகோபால் (60). இவர் கோவில்பட்டி - கயத்தாறு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பங்கில் பெட்ரோல்நிரப்பிவிட்டு, கயத்தாறு நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த அரசு பேருந்துஅவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது.இந்த விபத்தில் தலையில் பலத்தக் காயம் அடைந்த ராஜகோபால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்துகயத்தாறு காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணைநடத்தி வருகின்றனர். இதனிடையே விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற அரசு பேருந்து கங்கைகொண்டான் செக்போஸ்ட்டில் காவல் துறையினரால் நிறுத்தி வைக்கப்பட்டு விசாரணை நடத்தினர்.

கோவை - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் மாற்றுப்பாதையில் இயக்கம்

திருநெல்வேலி, அக். 6-கோவையில் இருந்து நெல்லை வழியாக நாகர்கோவில் செல்லும் பகல் நேர எக்ஸ்பிரஸ் ரயில் செவ்வாய்க்கிழமை முதல்17ஆம் தேதி வரை மாற்றுப்பாதையில் சில தினங்கள் மட்டும் இயக்கப்பட உள்ளது.

கோவை - திண்டுக்கல் இடையே நடக்கும் பராமரிப்பு பணிகள் காரணமாக கோவை - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் (எண். 16322) 6ஆம் தேதி முதல் சில தினங்கள் மட்டும் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது. அதன்படி வரும் 8ஆம் தேதி, 10, 13, 15மற்றும் 17ஆம் தேதிகளில் ஈரோடு மார்க்கமாக செல்வதற்கு பதிலாக, கோவையில் இருந்து பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம் வழியாக திண்டுக்கல் வந்து சேரும். வழக்கமான பாதையான பீளமேடு, சிங்கநல்லூர், சூலூர் ரோடு,திருப்பூர், ஊத்துகுளி, ஈரோடு, கொடுமுடி, புகலூர், கரூர், பாளையம் ஆகிய இடங்களுக்கு குறிப்பிட்ட நாட்களில் செல்லாது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதுபோல் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் பகல் நேரத்தில் நடக்கும் பணிகள் காரணமாக திருச்செந்தூரில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு நெல்லைக்கு வரும் பாசஞ்சர் ரயிலும், நெல்லையில் இருந்து மாலை 4.30மணிக்கு புறப்பட்டு திருச்செந்தூர் செல்லும்பயணிகள் ரயிலும், 6ஆம் தேதி முதல் 8, 9, 10, 12, 13, 14, 15, 16, 24, 26 ஆகிய தேதிகளில்முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.