திருச்சி விரைவு செய்திகள்
1 Nov 2026, 10:19 pm

திருநெல்வேலி விரைவு செய்திகள்

சிறுவன் படுகாயம்

விருதுநகர் மாவட்டம் நரிக்குடியில் உள்ள பள்ளப்பட்டியைச் சேர்ந்த அஜித்குமார்-அனுசியா தம்பதியர். மண் வீட்டில் வசித்து வந்தனர். இவர்களது மகன் வெற்றிக்காளை (4). இந் நிலையில், நரிக்குடி மற் றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்தது. இதில், அஜித் குமாரின் வீட்டுச் சுவர் விழுந்தது. இதில், வீட்டிலிருந்த சிறுவன் வெற் றிக்காளை மீது ஓடு விழுந்ததில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அச்சிறுவன் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தற்கொலை

இராஜபாளையம் சத்திரப்பட்டி ரயில்வே மேம்பாலம் கீழ்பகுதியில் ரயில் தாண்டவாளத்தில் ஞாயிறன்று வாலிபர் ஒருவர் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இவர் அரக்கு கலர் அரை கை சட்டை, மஞ்சள் கரை வேஷ்டி அணிந்திருந்தார். முகம் சிதைந்த இருந்ததால் அடையாளம் காண முடியவில்லை. இதுகுறித்து புதுப்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் முத்துலட்சுமி கொடுத்த புகாரின்பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். மேலும் இறந் தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தேனி சிறையில் மனித உரிமை மீறல் புகார்

தேனி மாவட்ட சிறையில் கைதிகளுக்கு தரமற்ற உணவு வழங்கப் படுவதாகவும், சிறை அதிகாரிகள் தாக்கித் துன்புறுத்துவதாகவும்தப்பியோடிய கைதி ஒருவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. சிறை நிர்வாகம் 17கைதிகள்தப்பியதாகத் தெரிவித்த நிலையில், 21 பேர் தப்பியதாக அந்தக் கைதி கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்ட சிறையிலிருந்து கடந்த 26-ஆம் தேதி இரவு கைதிகள் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தப்பியோடியவர் களில் பெரும்பாலானோர் மீண்டும் பிடிபட்டதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், மீனாட்சிசுந்தரம் என்ற கைதி வெளியிட்டதாகக் கூறப்படும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

அதில், சிறையில் வழங்கப்படும் உணவு தரமற்றதாக இருந்ததாகவும், இதுகுறித்து சிறைக் கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்தபோது தாங்கள் தாக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். உறவினர்களைச் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதாகவும், தொடர் தாக்குதலுக்கு அஞ்சி சிறையிலிருந்து தப்பியதாகவும் தெரிவித்துள்ளார்.