திருநெல்வேலி விரைவு செய்திகள்
29 Oct 2026, 9:08 pm

மாணவி உயிரிழப்பு

நத்தம், அக்.29-திண்டுக்கல் மாவட் டம், நத்தம் அருகே வேம் பரளியைச் சேர்ந்த பரமேஸ்வரன் (48) என்பவரின் மகள் இலக்கியா (17). இவர் மதுரை மாவட்டம், சத்திரப்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், படிப்பு தொடர்பாக பெற் றோர் கண்டித்ததால் மன உளைச்சலில் இருந்த அவர்தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆபத் தான நிலையில் மீட்கப் பட்டு மதுரை அரசு மருத் துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர், வழியிலேயே உயிரிழந்தார்.

பறிமுதல்

நத்தம், அக்.30-திண்டுக்கல் மாவட் டம், நத்தம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் அனுமதியின்றி மது

விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் செந்துறை சுற்று வட்டாரப் பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப் போது, மங்களப்பட்டியைச் சேர்ந்த தவமணி (35) என்பவர் தனது வீட் டில் மது விற்பனை செய் தது தெரியவந்தது.இதையடுத்து அவரைக் கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 419 மதுபாட்டில் கள் மற்றும் 3.50 கிலோ புகையிலையைப் பறிமுதல் செய்தனர்.

இளைஞர் கைது

வாடிப்பட்டி, அக்.29-மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே கல்லூரி மாணவியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். விராலிப்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன் (22) என்பவருக்கும்,வாடிப்பட்டி தாதம்பட்டியைச் சேர்ந்த கல்லூரி மாணவிக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட் டுள்ளது. இந்நிலையில் பேச்சை தவிர்த்த ஆத்திரத்தில் தனது செல் போனில் பதிவு செய்திருந்த மாணவியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் அளித்த புகாரின்பேரில்,சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையபோலீசார் மணிகண்டனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விழிப்புணர்வு முகாம்

நத்தம், அக்.29-திண்டுக்கல் மாவட் டம், நத்தம் அரசு பெண் கள் மேல்நிலைப் பள்ளியில் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. பள்ளித் தலைமையாசிரியர் சோபியா தலைமை வகித்தார். வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா, செயலாளர் செந்தில் குமார் ஆகியோர் முன் னிலை வகித்தனர். முகாமில் பங்கேற்ற நத்தம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஆப்ரினா பேகம், போக்சோ சட்டம், குழந்தைத் திருமணம் மற்றும் போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திப் பேசினார்.

கலசலிங்கம் மருந்தியல் கல்லூரியில் வகுப்புகள் தொடக்கம்

திருவில்லிபுத்தூர், அக்.29-கிருஷ்ணன்கோவில் அருள்மிகு கலசலிங்கம் மருந்தியல் கல்லூரியில் 2026–27 கல்வியாண்டுக்கான டி.பார்ம்.,பி.பார்ம். மற்றும் பார்ம்-டி. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடக்க விழா மற்றும் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவுக்கு கல்லூரித் தாளாளர் டாக்டர் எஸ்.அறிவழகி ஸ்ரீதரன், செயலாளர் எஸ்.சசி ஆனந்த், இயக்குநர் எஸ்.அர்ஜுன் கலசலிங்கம் ஆகியோர் தலைமை வகித்தனர். கல்லூரி முதல்வர் எஸ்.ஏ.முகமது ஷேக் அரபாத்வரவேற்றார்.விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஆர்.அமுதா ராணி தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு, மருந்தியல் துறையின் முக்கியத்துவம் மற்றும் சமூகத்திற்கு மருந்தாளுநர்கள் ஆற் றும் சேவைகள் குறித்து பேசினார்.

சென்னை லாகூன் ட்ரக்ஸ் நிறுவனப் பொது மேலாளர் பி.சரவண முத்துக்குமார் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, மருந்து தொழில்துறையின் வளர்ச்சிகள் குறித்துஎடுத்துரைத்தார். பேராசிரியர்கள் ஏ.தங்கதிருப்பதி, ஏ.தேன்மொழி ஆகியோரும் உரையாற்றினர். நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். பேராசிரியர் ஏ. ஜூலியன் திலிபன் நன்றி கூறினார்.

கொப்பரை தேங்காய் ஏலம்

நத்தம், அக்.29-திண்டுக்கல் மாவட்டம் நத்தம்- காந்திநகர் சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்றது. விற்பனைகூட மேற்பார்வையாளர் மாரிமுத்து தலைமை வகித்தார். தொடர்ந்து நடந்த இந்த ஏலத்தில் கொப்பரை தேங்காய் பருப்பின் தரத்திற்கேற்ப அதிகபட்சமாக கிலோ ஒன்றிற்கு ரூ.152-க்கும், குறைந்தபட்சமாக ரூ.100-க்கும் ஏலம் போனது. 4438 கிலோ கொப்பரை தேங்காய்கள் வரப் பெற்று ரூ.6.47 லட்சத்திற்கு ஏலம் போனது.

இதில் இளநிலை உதவியாளர் பாலமுருகன், மண்டி ஆய்வாளர் முத்துக்குமார் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள், உள்ளூர்,வெளி மாவட்ட வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

அக்.31-க்குள் தொழிற்சாலை உரிமங்களைப் புதுப்பிக்க வேண்டும்

மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

விருதுநகர், அக்.29-விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், சிவகாசி, வெம்பக்கோட்டை, சாத்தூர், அருப்புக்கோட்டை, திருச்சுழி,காரியாபட்டி ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் தொழிற்சாலைகள், 2027-ஆம் ஆண்டிற்கான உரிமங்களை அக்.31-க்குள் புதுப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஷரண்யா அரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொழிற்சாலை உரிமங்களைப் புதுப்பிக்க உரிய கட்டணத்தைச் செலுத்தி இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன்புதுப்பிக்கப்பட்ட உரிமத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்காக அலுவலகத்திற்கு நேரில் வரத் தேவையில்லை. உரிமத்தில் திருத்தங்கள் அல்லது மாற்றங்கள் மேற்கொள்ளவும் இணையதளம் வழியாகவிண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.

அக்.31-க்குப் பிறகு விண்ணப்பித்தால் தாமதக் கட்டணம் செலுத்த நேரிடும். உரிய உரிமம் இன்றி செயல்படும் தொழிற்சாலைகள் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.மேலும், பட்டாசு ஆலைகளுக்கு பெசோ மற்றும் டி.எம். உரிமம் பெற்ற பட்டாசு ஆலை வரைபடத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மட்டுமே உரிமம் புதுப்பிக்கப்படும் எனக்குறிப்பிட்டுள்ளார்.

கூடுதல் விபரங்களுக்கு, புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அறை எண் 112-ல் செயல்படும் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் அலுவலகத்தைத் தொடர்புகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.