தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருநெல்வேலி விரைவு செய்திகள்

16 Jul 2026, 9:45 pm
திருநெல்வேலி  விரைவு செய்திகள்

போக்குவரத்துக்கழகத்தில் தொழில் பழகுநர் பயிற்சி விண்ணப்பிக்க அழைப்பு

நாகர்கோவில்,ஜூலை 16- தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி) லிமிடெட், நாகர்கோவில் மண்ட லத்தில் பட்டம், பட்டயம் மற்றும் கலை மற்றும் அறிவியல் ( B.A. , B.S c. , B.Com ) பட்டம் பெற்றவர்கள் 2026-2027 - ஆம் ஆண்டிற்கான தொழில் பழகுநர் பயிற்சி பெற தகுதியான இயந்திரவியல் (Mechanical ) / ஆட்டோ மொபைல் ( Automobile ) பிரிவுகளில் பொறியியல் பட்டம் ( B.E ), பட்டயம் ( Diploma ) மற்றும் கலை மற்றும் அறிவியல் ( B.A. , B.S c. , B.Com etc., ) 2022, 2023, 2024, 2025 & மே ‘2026 - ஆம் ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவரிடம் இருந்து விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆன்லைனில் https://nats.education.gov.in – 28.08.2026-க்குள் தகுதியு டையவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று நாகர்கோவில் மண்டலம், திருநெல்வேலி கோட்ட பொதுமேலாளர் தெரிவித்துள்ளார்.

ஆதிதிராவிடர் பள்ளியில் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

நாகர்கோவில்,ஜூலை 16- கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்;குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் கலிங்கராஜபுரம் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் காலியாகவுள்ள ஒரு முதுகலை பட்டதாரி ஆசிரியர் (வேதியியல்) பணியிடத்திற்கு மாதம் ரூ.18,000 வீதம் தொகுப்பூதியத்தில் முற்றிலும் தற்காலிகமாக ஆசிரியர்களை நியமித்திட தகுதியான நபர்களிடமிருந்து 16.07.2026 முதல் 22.07.2026 முடிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை எழுத்து மூலமாக நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ உரிய கல்வித்தகுதி சான்றுகளுடன் (3 பிரதிகளில்) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் 22.07.2026 அன்று மாலை 05:45 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

பத்மநாபபுரம் தொகுதியில் நிறுத்தப்பட்ட பேருந்து சேவைகளை மீண்டும் இயக்க வேண்டும் போக்குவரத்து பொதுமேலாளரிடம் ஆர்.செல்லசுவாமி எம்எல்ஏ வலியுறுத்தல்

நாகர்கோவில்,ஜூலை 16- குமரி மாவட்டம், பத்ம நாபபுரம் சட்டமன்றத் தொகு திக்குட்பட்ட பல பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள பேரு ந்து சேவைகளை மீண்டும் தொடர வேண்டும். புதிய தரமான பேருந்துகளை இயக்க வேண்டும். தேவை யான இடங்களில் புதிய பேருந்து நிறுத்தங்களை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, அரசு போக்கு வரத்துக் கழகத்தின் பொது மேலாளர் மற்றும் துணை வணிக மேலாளர் ஆகி யோரை பத்மநாபபுரம் சட்ட மன்ற உறுப்பினர் ஆர்.செல்லசுவாமி நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்துப் பேசினார். சிபி எம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். அண்ணா துரை உடனிருந்தார். திருவட்டாறு அருகே உள்ள சாரூர் பகுதி மக்களு க்கு உடனடியாக பேருந்து வசதி ஏற்படுத்தித் தர வேண்டும். புதிய தரமான பேருந்துகளை இயக்க வேண்டும். தேவையான இடங்களில் புதிய பேருந்து நிறுத்தங்களை அமைக்க வேண்டும் என்று வலி யுறுத்தினோம். எங்களின் அனைத்து கோரிக்கைக ளையும் விரைவாக பரி சீலித்து, தேவையான நடவ டிக்கைகளை மேற்கொ ண்டு, விரைவில் நடை முறைப்படுத்தப்படும் என்று அதிகாரிகள் உறுதிய ளித்தனர்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு: துல்லியமான தகவல்களை வழங்க மக்களுக்கு ஆட்சியர் வேண்டுகோள்

நாகர்கோவில், ஜூலை 16- மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 ஆம் ஆண்டு இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இணையதளத்தின் மூலம் முதல் முறையாக டிஜிட்டல் தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது. இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதல் கட்டமான, அதாவது வீட்டுப்பட்டியல் மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பு நடவடிக்கைகள், ஏப்ரல் மற்றும் செப்டம்பர் 2026-க்கு இடையில் ஒரு மாத காலத்திற்கு நாடு முழுவதும் நடத்த திட்டமிடப்பட் டுள்ளது. தமிழ்நாட்டில், வீட்டுப் பட்டியல் நடவடிக்கை கள் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை (30 நாட்களுக்கு) மேற்கொள்ளவும், சுய கணக்கெடுப்பு (Self Enumeration) காலம் ஜூலை 17-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை (களப்பணி தொடங்குவதற்கு 15 நாட்களுக்கு முன்) மேற்கொள்ளவும் அறிவிக் கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில், 2027 மக்கள்தொகை கணக்கெடுப்பில், சுய கணக்கெடுப்பு மற்றும் டிஜிட்டல் முறை கணக்கெடுப்பு முதல் முறையாக அறிமு கப்படுத்தப்படுகிறது. அதன்படி, கன்னியாகுமரி மாவட்டத்தில் சுய கணக்கெடுப்பு வரும் ஜூலை 17 முதல் 31 வரை நடை பெறுகிறது. இதில் பொதுமக்கள் தாங்களாகவே, இணையதளம் (https://se.census.gov.in) வாயிலாக, தங்கள் விவரங்களை பதிவு செய்யலாம். இது மிகவும் எளிமையான, விரைவான மற்றும் வசதியான செயல்முறையாகும். எனவே அனைத்து குடும்பங்களும் இந்த டிஜிட்டல் மக்கள்தொகை கணக்கெடுப்பில் பங்கேற்று, குறிப்பிட்ட காலத்திற் குள் (30.07.2026) சுய கணக்கெடுப்பை நிறைவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். சுய கணக்கெடுப்பை நிறைவு செய்த பின்னர் ஒரு தனித்துவமான சுய பதிவு (SE ID) உருவாக்கப்படும். ஆகஸ்ட் 1 முதல் 30-ம் தேதி வரை, கணக்கெடுப்பாளர் கள் கணக்கெடுப்பிற்காக வீட்டிற்கு வருகை தரும் போது மக்கள் தங்களின் SE ID- ஐ வழங்க வேண்டும். மேலும், கணக்கெடுப்பாளர்கள் தங்கள் இல்லத்திற்கு வருகை தரும்போது அவர்களை அன்புடன் வரவேற்று அவர்களின் அடையாள அட்டை யை சரிபார்த்து உங்கள் குடும்பம் மற்றும் வீட்டைப் பற்றிய துல்லிய தகவல்களை வழங்குமாறு கேட்டுக் ொள்கிறேன். துல்லியமான தரவுகளும், முழுமை யான பங்கேற்பும், மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027-ன் வெற்றிக்கு அடித்தளமாக அமையும். வாருங்கள் அனைவரும் இணைந்து இந்த தேசிய பணியினை வெற்றிகரமாக நிறைவேற்றுவோம் என்று தெரிவித்துள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.