முந்தய பக்கம்

58 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த முன்னாள் மருத்துவக் கல்லூரி மாணவர்கள்

4 Oct 2026, 9:00 pm
58 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த முன்னாள் மருத்துவக் கல்லூரி மாணவர்கள்

58 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த முன்னாள் மருத்துவக் கல்லூரி மாணவர்கள்

விருதுநகர், அக்.4-திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் 1968 முதல் 1975-ம் ஆண்டு வரையிலான காலகட்டத் தில் மருத்துவம் பயின்ற முன் னாள் மாணவர்கள், 58 ஆண்டுகளுக்குப் பிறகு விருதுநகரில் ஒன்றுகூடி தங்களது கல்லூரிக் கால நினைவுகளைப்பகிர்ந்து கொண்டனர்.

இந்தியாவின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் மருத்துவச்சேவையாற்றி ஓய்வுபெற்ற முன்னாள் மருத்துவர்கள் இந்தச் சந்திப் பில் பங்கேற்றனர்.

அப்போது கல்லூரிக் கால அனுபவங்கள், அன் றைய பேராசிரியர்களின் வழிகாட்டுதல், மருத்துவத் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்குறித்து நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர். மேலும், தங்களது நீண்டகால நட்பைப் புதுப்பித்துக் கொண்டதுடன், தங்களை உருவாக்கிய தாய்க் கல்லூரிக்கு ஆற்ற வேண்டிய பங்களிப்புகள், சமூக நல மருத்துவச் செயல்பாடுகள் குறித் தும் கலந்துரையாடினர்.

நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக, 80 வயதைக் கடந்த ஓய்வுபெற்ற பெண் மருத்துவர்கள் உற்சாகத்துடன் கும்மியடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நிறைவாக, சந்திப்பை நினைவுகூரும் வகையில் அனைவரும் ஒன்றாகக் குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram