புழு தாக்குதலால் மஞ்சள் நிறமாக பூக்கும் மல்லிகை பூக்கள் கத்திரி விவசாயமும் பாதிப்பு:விவசாயிகள் அதிர்ச்சி
31 Oct 2026, 10:40 pm

புழு தாக்குதலால் மஞ்சள் நிறமாக பூக்கும் மல்லிகை பூக்கள் கத்திரி விவசாயமும் பாதிப்பு:விவசாயிகள் அதிர்ச்சி

திருநெல்வேலி, அக். 31-நெல்லை மாவட்டம் மானூர் ஊராட்சி ஒன்றிய பகுதியானது விவசாயம் அதிக அளவில் நடக்கும் பகுதியாகும்.

இந்த பகுதிகளில் உள்ள பள்ளமடை, காளார்பட்டி, மாவடி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பெரும்பாலான மக்களின் தொழிலாக விவசாயமே உள்ளது.

தற்போது மானூர் சுற்றுவட்டார பகுதிகளான குப்பனாபுரம், பள்ளமடை, காளார்பட்டி, எட்டான்குளம், மாவடி உள்ளிட்ட கிராமங்களில் பெரும்பாலான விவசாயிகள் 300 ஏக்கருக்கும் மேல் மல்லிகை , 100 ஏக்கருக்கு மேல் கத்தரிக்காய் பயிரிட்டுள்ளனர்.

இதில் கத்தரிக்காய் செடிகள் புழுக்களால் தாக்கப்பட்டு, பட்டுப் போகும் நிலையில் உள்ளது. ஒரு ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்திருக்கும் நிலையில் மகசூல் பெற முடியாமல் விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர்.

மருந்துகளை வாங்கி செடிகளில் தெளிக்கின்றனர். ஆனாலும் புழுக்களின் தாக்குதல் குறைந்த பாடில்லை. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தோட்டக்கலை துறை, வேளாண்மை துறை அதிகாரிகளை நாடிய போதிலும் எந்த பதிலும் இல்லை. மல்லிகை பூக்களிலும் புழுக்கள் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

புழுக்களின் தாக்குதல் காரணமாக வெள்ளை நிறத்தில் பூக்க வேண்டிய மல்லிகை பூக்கள் மஞ்சள் நிறமாக மாறியுள்ளது. மல்லிகை பூக்களை பறிக்க முடியாமல் விவசாயிகள் பரிதவிக்கும் நிலையில் உள்ளனர். மானூர் சுற்றுவட்டார பகுதி முழுவதுமே பயிரிடப்பட்டுள்ள மல்லிகை செடிகள் மற்றும் கத்தரிக்காய் செடிகளில் தொடர்ந்து புழுக்களின் தாக்கம் உள்ளது.

பாதிப்புகளுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும், செடிகளில் ஏற்பட்டுள்ள புழு தாக்குதலை கட்டுப்படுத்த உரிய மருந்து தர வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.