தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருநெல்வேலி விரைவு செய்திகள்

2 Nov 2026, 10:27 pm
திருநெல்வேலி  விரைவு செய்திகள்

கன்னியாகுமரி வாவத்துறை மீனவர் பிரச்சனைஅதிகாரிகளின் பேச்சுவார்த்தையில் தீர்வு

நாகர்கோவில், நவ.2 -கன்னியாகுமரி வாவத்துறையில் வள்ளங்களில் பிடித்து வரும் மீன்களைச் சந்தையில் விற்பனை செய்ய ஒரு தரப்புமீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பிரச்சனை ஏற்பட்டதுபோலீசார் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர். பின்னர் நாகர்கோவிலில் கோட்டாட்சியர் தலைமையில்பேச்சுவார்த்தை நடைபெற்றது. மீன்பிடிக்கச் செல்ல அறிவுறுத்தப்பட்டும் அக்டோபர் 30 ஆம் தேதிக்குப் பிறகுமீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. இந்நிலையில் அதிகாரிகள் மட்டத்தில் மீண்டும் நடைபெற்றபேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், நவ.2 (திங்கள்) அன்று முதல் மீன்பிடிக்கச் சென்றனர்.

தோட்டத்தில் வேலை செய்த வாலிபர் கடையாலுமூடு அருகே திடீர் சாவு

அருமனை, நவ. 2 -கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூடு அருகே தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த வாலிபர் திடீரெனமயங்கி விழுந்து உயிரிழந்தார்.செருப்பாலூர் பண்டாரவிளை பகுதியைச் சேர்ந்த ராஜு என்பவரின் மகன் அனிஷ் (33). கூலித் தொழிலாளியான இவர் அக்.31 ஆம் தேதி தனது தந்தை, தாய் ஆகியோருடன் சிற்றாறு சிலோன் காலனியில் உள்ள அரசுரப்பர் கழகத் தோட்டக் கூப்பு எண்.6-இல் லாசர் என்பவருக்கு அன்னாசிப் பழ கன்றுகள் நடும் வேலைக்குகுடும்பத்துடன் சென்றுள்ளார்.அங்கு வேலை செய்து கொண்டிருந்த போது அனிஷ்திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அனிஷை மீட்டு பேச்சிப்பாறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தக்கலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அனிஷைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.இதுகுறித்து ராஜு கடையாலுமூடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிந்து வாலிபரின் திடீர் சாவு குறித்து விசாரணைநடத்தி வருகின்றனர்.

பனை மேம்பாட்டு திட்டம் 100 சதவீத மானியத்தில் பனை விதைகள், கன்றுகள் விநியோகம்

நாகர்கோவில், நவ. 2-கன்னியாகுமரி மாவட்டத்தில் 2026-27 ஆம் ஆண்டிற்கான பனை மேம்பாட்டு இயக்கத் திட்டத்தின் கீழ், ரூ.2,40,000 நிதி ஒதுக்கீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளதாகமாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தின் கீழ், 20,000 பனை விதைகள் மற்றும் 800 பனங்கன்றுகள் 100% முழு மானியத்தில் விநி

யோகிக்கப்பட உள்ளன. தனிநபர்களுக்கு அதிகபட்சமாக 50 பனை விதைகளும், 15பனங்கன்றுகளும் வழங்கப்படும். பொது இடங்களில் நடுவதற்குத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் ஊராட்சிகள் மூலம் 100 விதைகள், 30கன்றுகள் வரை பெறலாம்.மேலும், பனை சார்ந்த சிறு தொழில் முனைவோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, சுகாதாரமான மதிப்புக் கூட்டப்பட்ட பனைபொருட்கள் தயாரிப்புக் கூடம் அமைக்க 50% பின்னேற்பு மானியமாக ரூ.50,000 (இரு பயனாளிகளுக்கு) வழங்கப்படும். இதற்கு சொந்த/குத்தகை நிலத்

தில் பனை தொழில் செய்பவராகவும், பனை வெல்லகூட்டுறவு சங்க உறுப்பினராகவும் இருக்க வேண்டும். தமிழ்நாடு பனை பொருள் வளர்ச்சி வாரிய பயிற்சி பெற்றோருக்கு முன்னுரிமைஅளிக்கப்படும்.

விருப்பமுள்ள விவசாயிகள், கூடுதல் விவரங்கள்மற்றும் விண்ணப்பங்களுக்குத் தங்கள் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகலாம்.

நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் : பாபநாசம் நீர் இருப்பு 66.85 அடியாக பதிவு

​திருநெல்வேலி, நவ.2 -நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரதான அணைகளின் திங்கட்கிழமை நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் நீர் வரத்து குறித்த விவரங்களை நீர்வளத்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் தற்போது 66.85 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 337.92 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், பாசனத்திற்காக 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ​156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 80.22 அடியாக பதிவாகியுள்ளது. இந்த அணைக்கு நீர்வரத்து மற்றும் குடிநீர் வெளியேற்றம் எதுவும் இல்லை.

​அதேபோல, 118 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணையில் நீர் இருப்பு 66.37 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 133 கன அடி நீர் வந்து சேர்கிறது; 60 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

​பிற அணைகளின் தற்போதைய நிலையின் படி வடக்கு பச்சையாறு: (மொத்த உயரம் 50 அடி) – நீர் இருப்பு: 6 அடி. (நீர்வரத்து/வெளியேற்றம் இல்லை). ​நம்பியாறு: (மொத்த உயரம் 22.96 அடி) – நீர் இருப்பு: 11 அடி. (நீர்வரத்து/வெளியேற்றம் இல்லை). ​கொடுமுடியாறு: (மொத்த உயரம் 52.50 அடி) – நீர் இருப்பு: 15 அடி. (நீர்வரத்து/வெளியேற்றம் இல்லை).​மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளின் நீர்மட்டத்தை நீர்வளத் துறையினர் தொடர்ந்து கண்காணித்துவருகின்றனர்.

விடுதியிலிருந்து 8 ஆம் வகுப்பு மாணவர் மாயம்: கண்டுபிடித்து தர ஆட்சியரிடம் பெற்றோர் கோரிக்கை!

தூத்துக்குடி, நவ.2 தூத்துக்குடியில் அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் தங்கிப் படித்து வந்த 8 ஆம் வகுப்பு மாணவர்விடுதியிலிருந்து மாயமான சம்பவம் குறித்து, மாணவரின் தந்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனுஅளித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ரெகுராமபுரத்தைச் சேர்ந்தவர் கே. வெள்ளச்சாமி. இவரது மகன் ஜீவா (13). இவர் தூத்துக்குடி பீச் ரோட்டில்உள்ள ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் கடந்த 3 ஆண்டுகளாகத் தங்கி, காரப்பேட்டை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்8 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த அக்.22 ஆம் தேதி விடுமுறை முடிந்து விடுதிக்குச் சென்ற ஜீவா, அதன்பின் பள்ளிக்குச் செல்லவில்லை எனக் கூறப்படுகிறது. இது குறித்து அக்.27 ஆம் தேதி பள்ளி ஆசிரியர் தெரிவித்ததைத் தொடர்ந்து, பெற்றோர் மாணவருக்கு அறிவுரைகூறிப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், கடந்த 30.10.2026 அன்று மாலை 4.26 மணியளவில் விடுதியிலிருந்த தனது உடமைகளை எடுத்துக்கொண்டு மாணவர் ஜீவா வெளியேறியது விடுதியின் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதன்பின்னர் அவன் விடுதிக்கும் செல்லாமலும், வீட்டிற்கும் வராமலும் மாயமாகியுள்ளான்.வெள்ளை நிறச் சட்டை, ஊதா நிறப் பேண்ட் அணிந்து பள்ளிப் பை மற்றும் மஞ்சப்பை உடன் சென்ற மாணவர் ஜீவா எங்கு சென்றான் என்பது தெரியாமல் குடும்பத்தினர் தவித்து வருகின்றனர். இதுதொடர்பாகக் கடந்த 30.10.2026 அன்று தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.இதனால் அதிர்ச்சியடைந்த மாணவரின் தந்தை வெள்ளச்சாமி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று மனு அளித்து, மாயமான தனது மகனைக் விரைந்து கண்டுபிடித்துத் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

சிறுமியிடம் 144 பவுன் நகை மோசடி வழக்கில் நகைக் கடை உரிமையாளர் கைது

குழித்துறை, நவ. 2 -கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள கழுவன்திட்டை பகுதியை சேர்ந்த பிளஸ்-1 படிக்கும் சிறுமிக்கும்அதே பகுதியை சேர்ந்த ஒலி ஒளி அமைப்பாளர் ஜெனிஷ் (25) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஜெனிஷ் காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி வீட்டிலிருந்து 144 பவுன் நகைகளை பெற்றுக் கொண்டு மோசடி செய்தார். இது குறித்து கடந்த ஆகஸ்ட் மாதம் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமி புகார் அளித்தார். போலீசார் விசார

ணை நடத்தி மோசடி செய்த ஜெனிஷை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த அவரது தம்பி ஜெபிஷ் என்பவரையும் கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசார் தமிழக -கேரள எல்லைப் பகுதியில் கைது செய்தனர். பின்னர் அவரிடம் அண்ணன் ஜெனிஷ் கொடுத்து வைத்த நகை, பணம்தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சிறுமியிடம் மோசடி செய்தநகையில் 40 பவுன் தங்க நகைகளை மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு நகைக்கடையில் கொடுத்ததாக ஜெபிஷ் தெரிவித்துள்ளார். இதை அடுத்து போலீசார் மார்த்தாண்டத்தில் நகை கடை நடத்தி வரும் உண்ணாமலைகடை லட்சுமி நாராயணபுரம் பகுதியை சேர்ந்த லாலி (48) என்பவரிடம் விசாரித்தனர்.

அதில் அவர் ஜெபிஷிடமிருந்து 40 பவுன்நகைகளை பெற்றுக் கொண்டது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் நகையை பறிமுதல் செய்ய கேட்டுள்ளனர். அப்போதுஅவர் கொடுக்காமல் இருந்து வந்துள்ளார். அதைத் தொடர்ந்து சிறுமியின் நகை மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக லாலி மீது போலீசார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.