திருநெல்வேலி விரைவு செய்திகள்
31 May 2026, 10:13 pm

குமரி மாவட்ட அணைகளில் ஜூன் 1-இல் நீர் திறப்பு

நாகர்கோவில், மே 31- கன்னியாகுமரி மாவட்டத்தில், கோதையாறு மற்றும் பட்டணங்கால் பாசனத்திற்கு பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் -| மற்றும் சிற்றாறு-|| அணைகளி லிருந்து ஜூன் 1ஆம் தேதி முதல் வரும் 2027 பிப்ரவரி 28 ஆம் தேதி வரை வினாடிக்கு 850 கன அடி வீதம் தேவைக்கேற்ப தண்ணீர் இருப்பை பொறுத்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை வட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டம், கல்குளம் வட்டம், கிள்ளி யூர் வட்டம், திருவட்டார் வட்டம், விளவங்கோடு வட்டம் மற்றும் அதனைச் சார்ந்த கிராமங்களில் உள்ள 79000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று நீர்வளத் துறை அரசு முதன்மை செயலாளர் தெரிவித்துள்ளார்.

தட்டுப்பாடின்றி ஆட்டோ கேஸ் வழங்க ஓட்டுநர்கள் கோரிக்கை

நாகர்கோவில், மே 31 - குமரி மாவட்டத்தில் எரிவாயு நிரப்புவதற்கு பல மணி நேரம் கார்கள் மற்றும் ஆட்டோக்கள் காத்திருக் கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் ஆட்டோ கேஸ் தட்டுப்பாட்டால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக ஓட்டுநர்கள் மன வேதனை அடைந்துள்ளனர். கேசில் இயங்கும் ஆட்டோ, கார் ஓட்டுபவர்களின் வாழ்வாதாரத்தை கணக்கில் கொண்டு மாவட்ட நிர்வாகம் குமரி மாவட்ட பெட்ரோல் நிலையங்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் அதிக அளவிலான எரி பொருள்கள் வழங்கிட எண்ணெய் நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டும் என்று குமரி மாவட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1.200 கிலோ கஞ்சாவை பதுக்கிய மூன்று பேர் கைது

நாகர்கோவில், மே 31- குமரி மாவட்டத்தில் காவல்துறை நடத்திய அதிரடி வேட்டையில் 1.200 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப் பட்டது. குமரி மாவட்டம், சுசீந்திரம் காவல் நிலைய எல்லைக் குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக இருந்த மூன்று பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.இதில், ராஜாக்க மங்கலம் துறை, சுனாமி காலனியை சேர்ந்த அன்னை மரி யான் மகன் கிராஸ் சாரதி (18) , தெற்கு சூரங்குடி, வடலி காட்டு விளையை சேர்ந்த ராஜ பூபதி மகன் நந்தகுமார் (20) மற்றும் தூத்துக்குடி , தர்மபுரி காலனி, கீழ ராமசாமி யார் புரத்தை சேர்ந்த மகேந்திரன் மகன் தமிழரசு (19) ஆகி யோர் விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. தொடர்ந்து காவல் துறையினர் மேற்கொண்ட சோத னையில் அவர்களிடமிருந்து சுமார் 1.200 கிலோகிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு சுசீந்திரம் காவல் நிலையத்தில் குற்ற வழக்கு பதிவு செய்து,3 பேரையும் கைது செய்த னர்.

ஒரே நாளில் 4 அரசு பேருந்துகள் நிறுத்தம் களக்காட்டில் பயணிகள் கடும் அவதி

திருநெல்வேலி, மே 31- நெல்லை மாவட்டம் களக்காட்டில் ஒரே நாளில் 4 அரசு பேருந்துகள் திடீரென நிறுத்தப்பட்டதால் பயணிகள், பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். களக்காடு வழியாக நாகர்கோவில், தென்காசிக்கு அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த வழித்தடத் தில் இயக்கப்பட்ட வள்ளியூர் பணிமனையைச் சேர்ந்த 3 பேருந்துகள் சனிக்கிழமையன்று இயங்கவில்லை. இதுபோல களக்காடு, நாங்குநேரிக்கு இயக்கப்பட்ட நகர பேருந்தும் இயக்கப்படவில்லை. ஒரே நாளில் 4 அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் களக்காடு நிலை யத்தில் பேருந்துக்காக பயணிகள் நீண்டநேரம் காத்திருந்த னர். களக்காடு வழித்தடத்தில் இயக்கப்பட்ட 4 அரசு பேருந்துகளும் வேறு ஊர்களுக்கு சிறப்பு பேருந்து களாக மாற்றிவிடப்பட்டதாக கூறப்படுகிறது. களக்காடு வழித்த டத்தில் நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்கவும், கூடுதல் பேருந்துகள் இயக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

இன்ஸ்டாகிராமில் பெண்களை ஆபாசமாகச் சித்தரித்த வாலிபர் கைது

தூத்துக்குடி, மே 31- சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாகச் சித்தரித்து வெளியிட்ட புகாரில், கோவில்பட்டியைச் சேர்ந்த வாலிபர் ஒருவரைப் போலீஸார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூர், ரயில்வே பீடர் சாலைப் பகுதியைச் சேர்ந்தவர் காந்தி மகன் சூரிய சாரத் (26). இவருக்குச் சொந்தமான இன்ஸ்டாகிராம் சமூக வலைதளப் பக்கத்தில், பெண்களின் புகைப்படங்களை அவர்களின் அனுமதியின்றி எடுத்து, அதனை ஆபாசமான முறையில் கணினியில் சித்தரித்து தொடர்ந்து வெளியிட்டு வந்த தாகக் கூறப்படுகிறது. பெண்களின் கண்ணியத்திற்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து ஆபாசப் புகைப்படங்கள் வெளியாவது குறித்து பாதிக்கப்பட்ட வர்கள் தரப்பில் காவல் நிலையத்தில் முறைப்படி புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் அடிப்படையில், நாலாட்டின்புதூர் போலீஸார் தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் பெண்களைத் தவறாகச் சித்தரித்தல் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசா ரணை நடத்தினர். இதையடுத்து, தலைமறைவாக செல்ல முயன்ற சூரிய சாரத்தை சனிக்கிழமையன்று போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் ‘கிரையோஜெனிக்’ பரிசோதனை வெற்றி

திருநெல்வேலி, மே 31- நெல்லை மாவட்டம் காவல்கிணறு மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் ஜிஎஸ்எல்வி எல்வி. எம் 3 ராக் கெட்டிற்கான சி இ 20 கிரையோஜெனிக் இன்ஜினின் பரி சோதனை 165 வினாடிகள் வெற்றிகரமாக நடந்ததாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ ) தெரி வித்துள்ளது. நெல்லை மாவட்டம் காவல்கிணறு மகேந்திரகிரியில் இஸ்ரோ மையம் செயல்பட்டு வருகிறது. இம்மையத் தில் விண்ணில் விண்கலம் செலுத்துவதற்கு தேவை யான கிரையோஜெனிக் இன்ஜின், விகாஷ் பி.எஸ்.4 இன்ஜின் தயாரிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப் பட்டு வருகிறது. கூடுதல் அங்கமாக விண்வெளிக்கு மனி தர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் விண்ணில் செலுத்தப்பட இருக்கும் ராக்கெட்டுகளின் சோதனை களும் நடந்து வருகின்றன. ஜிஎஸ்எல்வி எல்விஎம்- 3 ராக்கெட்டிற்கான சி இ 20 கிரையோஜெனிக் இன்ஜினின் பரிசோதனை பல்வேறு கட்டங்களாக இங்கு நடந்து வருகிறது. அதன்படி 165 வினாடிகள் சோதனை நடத்த இஸ்ரோ திட்டமிட்டது. அதற் கான கவுன்டவுன் ஆரம்பிக்கப்பட்டு நடத்தப்பட்ட சோதனை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை வெற்றிகரமாக அடைந்தது. இந்நிகழ்ச்சியை மகேந்திரகிரி இஸ்ரோ விஞ்ஞானி கள் பார்வையிட்டனர். சோதனை வெற்றிகரமாக நடந்த தால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தூத்துக்குடியில் 17 காவல் உதவி ஆய்வாளர்கள் உட்பட 31 பேர் இடமாற்றம்

தூத்துக்குடி, மே 31- தூத்துக்குடி மாவட்டத்தில் 17 காவல் உதவி ஆய்வா ளர்கள் மற்றும் தனிப்பிரிவு காவலர்கள் உட்பட மொத்தம் 31 பேரை அதிரடியாக இடமாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா உத்தரவு பிறப்பித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரிந்து வந்த 17 காவல் உதவி ஆய்வாளர்கள் வெவ்வேறு காவல் நிலை யங்களுக்கு அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு: ஐ. அந்தோணி திலிப் – தூத்துக்குடி வடபாகம் நிலையத் திலிருந்து முறப்பநாட்டிற்கும் ஆா். சோனியா – தூத்துக்குடி தென்பாகம் நிலையத்திலிருந்து திருச்செந் தூர் தாலுகாவிற்கும் எம். அனுஷியா – தெர்மல்நகர் நிலையத்திலிருந்து தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும் பி. ராமச்சந்திரன் – தாளமுத்து நகர் நிலையத்திலிருந்து நாலாட்டின்புதூருக்கும் ஆா். சிலுவை அந்தோணி – தாளமுத்துநகர் நிலையத்திலிருந்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்திற்கும் எஸ். முகேஷ் அரவிந்த் – புதுக்கோட்டை நிலையத்திலிருந்து குலசேகரன்பட்டினத்திற்கும் அமலோற்பவம் – சிப்காட் நிலையத்திலிருந்து திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும் ஆா். தரனியா – திருச்செந் தூர் கோயில் நிலையத்திலிருந்து தூத்துக்குடி தென்பாகத் திற்கும் ஜி. முத்துச்செல்வம் – திருச்செந்தூர் தாலுகா நிலையத்திலிருந்து புதுக்கோட்டைக்கும் யு. பாலன் – ஆழ்வார்திருநகரி நிலையத்திலிருந்து செய்துங்கநல்லூ ருக்கும் ஆா். மாணிக்கராஜ் – கோவில்பட்டி கிழக்கு நிலையத்திலிருந்து தாளமுத்துநகருக்கும் பி. சுந்தா் – நாலாட்டின்புதூர் நிலையத்திலிருந்து தாளமுத்துநகருக் கும் பி. ராமலட்சுமி – குளத்தூர் நிலையத்திலிருந்து திருச் செந்தூர் கோயில் காவல் நிலையத்திற்கும் ஆனந்தமுத்து ராமன் – தூத்துக்குடி தென்பாகம் நிலையத்திலிருந்து தெர்மல்நகருக்கும் எம். செல்வன் – விளாத்திகுளம் உள்கோட்ட தனிப்பிரிவிலிருந்து தனிப்பிரிவு தலை மையிடத்திற்கும் பி. சுப்புராஜ் – முறப்பநாடு நிலையத்தி லிருந்து தூத்துக்குடி தென்பாகத்திற்கும் எம். கவுராஜன் – தூத்துக்குடி தென்பாகம் நிலையத்திலிருந்து சிப்காட்டிற் கும் மாற்றப்பட்டுள்ளனர். இதேபோன்று மாவட்டத்தின் பல்வேறு உள்கோட்டங் களைச் சேர்ந்த தனிப்பிரிவு காவலர்கள், தலைமைக் காவலர்கள் மற்றும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

றுமிக்கு பாலியல் வன்கொடுமை திருமங்கலத்தில் 4 சிறுவர்கள் போக்சோ சட்டத்தில் கைது

மதுரை, மே 31- மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் 13 வயது சிறுமிக்கு எதிராக பாலியல் வன்கொடுமை நடைபெற்றதாகக் கூறப்படும் சம்பவத்தில், நான்கு சிறுவர்களை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: திருமங்கலம் தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்த 13 வயது மாணவியை, அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது டைய நான்கு சிறுவர்கள், மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவையொட்டி நடைபெற்று வந்த சித்திரைப் பொருட்காட்சி பகுதிக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படு கிறது. அங்கு சிறுமிக்கு எதிராக பாலியல் வன்கொடுமை நடை பெற்றதாக அவரது பெற்றோர் அளித்த புகாரின் அடிப்ப டையில், திருமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற் கொண்டனர். விசாரணையின் அடிப்படையில், சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் நான்கு சிறுவர்களை யும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாது காக்கும் (போக்சோ) சட்டத்தின் கீழ் கைது செய்து, சட்டப் பூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் திருமங்கலம் பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவில்பட்டி அருகே பட்டாசு ஆலையில் விபத்து: பலி எண்ணிக்கை 3 பேராக உயர்வு

தூத்துக்குடி,மே 31- கோவில்பட்டி அருகே அனுமதியின்றி செயல்பட்டு வந்த பட்டாசு தயாரிப்பு கூடத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் சிக்கி, படு காயம் அடைந்த இளைஞர் உயிரிழந்தார். இதன் மூலம் இந்த விபத்தில் பலியானோ ரின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே புளியங்குளம் காட்டுப் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான கட்டிடத்தில், எவ்வித அரசு அனுமதியுமின்றி சட்டவிரோத மாகப் பட்டாசு தயாரிக்கும் பணி ரகசிய மாக நடைபெற்று வந்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இங்கு வழக்கம் போல் பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாகப் பயங்கர வெடி விபத்து நேரிட்டது. இந்த விபத்தின் அதிர்வில் அந்த பட்டாசு தயாரிப்பு கட்டிடமே இடிந்து தரைமட்ட மானது. இதில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி விருதுநகர் மாவட்டம் கவுண்டன்பட்டி யைச் சேர்ந்த மாலதி (25) மற்றும் புளியங் குளத்தைச் சேர்ந்த அய்யப்பன் (30) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த னர். இந்த பயங்கர வெடிவிபத்தில் விருது நகர் மாவட்டம் சாத்தூர் அருகே மஞ்சள் ஓடைப் பட்டி கிராமத்தைச் சேர்ந்த சூரியபிரகாஷ் (25) என்ற இளைஞர் உடல் கருகி பலத்த காயமடைந்தார். அவர் உடனடியாக மீட்கப் பட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனை யில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சூரியபிரகாஷ், சனிக் கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உரிமையாளர் உட்பட 4 பேர் கைது இந்த விபத்து குறித்து கோவில்பட்டி மேற்கு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்ற னர். சட்டவிரோதமாகப் பட்டாசு தயாரிப்பு கூடத்தை நடத்த அனுமதித்த கட்டிட உரிமை யாளர் மற்றும் இதற்கு காரணமான முக்கிய நபர்கள் உட்பட 3 பேரை போலீஸார் கடந்த புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நெட்டூரில் பட்டியலின மக்கள் மீது தாக்குதல் முக்கூடல் அருகே பதுங்கிய ரவுடியை சுட்டுப்பிடித்த போலீசார்

திருநெல்வேலி, மே 31- தென்காசி மாவட்டம் நெட்டூர் மற்றும் நெல்லை மாவட்டம், மானூர் அருகே தெற்குப்பட்டியில் சாதிய வெறியுடன் 8 பேர் கொண்ட கண்ணில் பட்டவர்களை எல்லாம் அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இந்த வழக்கில் ஏற்கனவே 8 பேர் கைது செய்யப்பட்டனர், இதில் 3 சிறார்கள் சீர்திருத்தப்பள்ளியிலும், மற்ற 5 பேரை பாளை மத்திய சிறையிலும் அடைத்தனர். இந்த சம்பவங்களில் தொடர்புடைய மேலும் 4 பேரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் அந்த 4 பேரில் ஆலங்குளம் காவல் நிலையத்தில் ரவுடி பட்டியலில் இடம் பெற்ற ஐயப்பன் என்பவர், முக்கூடல் அருகே வடக்கு அரியநாயகிபுரம், அரசங்குளம் பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ரவுடி ஐயப்பன் மீது ஏற்கெனவே ஆலங்குளம் காவல்நிலையத்தில் ஒரு கொலை வழக்கும் உள்ளது. இதையடுத்து தனிப்படை போலீ சார் அந்தப் பகுதிக்கு சென்று அங்கு பதுங்கி யிருந்த அவரை பிடிக்க முயற்சித்தனர். அப்போது போலீசாரை ரவுடி ஐயப்பன் ஆயுதங்களால் தாக்கினார். இதில் ஏட்டு முத்துக்குமாருக்கு காயம் ஏற்பட்டது. இருப்பினும் அவரை சுற்றி வளைத்த போலீ சார் தங்களது தற்காப்புக்காக அவரது காலில் துப்பாக்கியால் சுட்டுபிடித்தனர். இரு வருக்கும் சேரன்மகாதேவி அரசு மருத்துவ மனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத் துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளனர்.

திருச்செந்தூர் வைகாசி விசாக விழாவிற்கு சென்றவர்கள் எட்டயபுரம் அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் பெண் பலி

தூத்துக்குடி, மே 31- நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் சிவனாண்டி மகன் சிவா (56). இவரது காரில் அதே பகுதியைச் சேர்ந்த குபேந்திரன் மனைவி லதா (43), சிவன் ஆண்டி மனைவி கலா (54), தேவா மனைவி ராஜேஸ்வரி (33) மற்றும் சுபேதன் (22) ஆகியோருடன், மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த ராஜ் மனைவி விஜயா (48) என்பவரும் இணைந்து திருச்செந்தூர் முருகன் கோவில் வைகாசி விசாகத் திருவிழாவிற்கு வந்துள்ள னர். சனிக்கிழமையன்று கோவிலில் சாமி தரிசனத்தை முடித்த ஆறு பேரும், அதே காரில் மீண்டும் நாகப்பட்டினத்திற்குப் புறப் பட்டுள்ளனர். காரை சிவா ஓட்டியுள்ளார். திருச்செந்தூரில் இருந்து இரவு 10 மணி யளவில் புறப்பட்ட இவர்களது கார், தூத் துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் எட்டையாபுரம் அருகே நள்ளிரவு 1 மணி அளவில் சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிரே தூத்துக்குடி துறை முகத்தை நோக்கி வேகமாக வந்துகொண் டிருந்த ஒரு கண்டெய்னர் லாரி, எதிர்பாராத விதமாக இவர்களது கார் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் கார் அப்படியே தலைகீழாகக் கவிழ்ந்து நொறுங் கியது. இந்த விபத்தில் காரில் இருந்த சிவா உட்பட 6 பேரும் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி பலத்த காயமடைந்து அலறினர். கண்டெய்னர் லாரி ஓட்டுநர் வண்டியை நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார். சம்பவ இடத்திற்கு விரைந்த பொதுமக்க ளும் போலீஸாரும், இடிபாடுகளுக்குள் சிக்கி யவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக எட்டயபுரம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், தலையில் மிகப்பலத்த காயம் அடைந்திருந்த லதா (43) எட்டயபுரம் அரசு மருத்துவ மனையிலேயே சிகிச்சை பலனின்றி உயிரி ழந்தார். மேலும் விபத்தில் படுகாயமடைந்த கார் ஓட்டுநர் சிவா, கலா, விஜயா, ராஜேஸ் வரி மற்றும் சுபேதன் ஆகிய 5 பேருக்கும் எட்டயபுரம் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனு மதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து எட்டயபுரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய கண்டெய்னர் லாரி ஓட்டுநரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.