திருநெல்வேலி விரைவு செய்திகள்
2 Jun 2026, 8:51 pm

குளிக்கச் சென்ற சிறுவன் மாயம்

குழித்துறை, ஜூன் 2- மார்த்தாண்டம் அருகே குளிக்கச் சென்ற சிறுவன் மாயமானார். குமரி மாவட்டம் நட்டாலத்தைச் சேர்ந்த ஷிபாவின் அக்காவின் மகன் ஜாண் ஜேக்கப் (13). நாகர்கோ விலில் ஒரு மாணவர் விடுதியில் நின்று எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். தற்பொழுது கோடை விடுமுறை என்பதால் பாட்டி வீட்டிற்கு வந்துள்ளார். சம்பவத்தன்று குளிக்க சென்றுள் ளார்.வீடு திரும்பவில்லை இது குறித்து இவரது சித்தி ஷிபா கொடுத்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவனை தேடி வருகின்றனர்.

ஐ.டி.ஐ-களில் நேரடி மாணவர் சேர்க்கை: இன்று கடைசி நாள்

நாகர்கோவில், ஜுன் 2- கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2026-ம் ஆண்டில் சேரவும் அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலை யங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திடவும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கடைசி தேதி முடிவடைந்த நிலையில் தற்போது நேரடி சேர்க்கைக்கு ஜுன் 3 கடைசி நாளாகும். விண்ணப்பதாரர்கள் தாங்கள் விரும்பும் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரடியாக சென்று விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம். இந்த மையங்களில் நேரடி சேர்க்கை நடைபெற்று வரு கிறது. விண்ணப்பக் கட்டணத் தொகையான ரூ.50-ஐ விண்ணப்பதாரர் டெபிட், கிரெடிட் கார்டுகள், நெட் பேக்கிங், ஜி பே வாயிலாக மட்டுமே செலுத்த வேண்டும். நேரடி சேர்க்கையில் சேர விரும்புவோர் 8ஆம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் ஒரு நகல்களுடன் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு,தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு நேரில் வருகை தர வேண்டும். அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் உதவித் தொகை ரூ.750, கட்டணமில்லா பஸ் பாஸ், இலவச சைக்கிள், பாடப்புத்தகங்கள், வரைபடக் கருவிகள், சீருடை, காலணி, பயிற்சிக்குத் தேவையான உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. அரசு பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவ,மாணவிய ருக்கு தமிழ் புதல்வன், புதுமைப் பெண் திட்டங்களில் மாதம் ரூ.1000 உதவித் தொகையாக வழங்கப்படும். மாணவர்களுக்கு இலவச உண்டி, உறைவிட வசதியும் உள்ளது. நேரடி சேர்க்கையில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். எனவே இந்த அரிய வாய்ப்பி னை மாணவ, மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள தெரி விக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு உதவி இயக்கு நர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், கன்னியாகும ரியில் நேரிலோ அல்லது 94435 79558 என்ற கைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரி வித்துள்ளார்.

கடைக்கு சென்ற சிறுமியிடம் அத்துமீறிய போதை வாலிபர் போக்சோ வழக்கு பாய்ந்தது

திருநெல்வேலி, ஜூன் 2- நெல்லை தச்சநல்லூரை அடுத்த நயினார்குளம் பகுதியை சேர்ந்தவர் நம்பி. இவரது மகன் முத்து ( 25). இவர் நயினார்குளம் மார்க்கெட்டில் லோடு மேனாக வேலை பார்த்து வருகிறார். இவர் திங்கட்கிழமை மாலை நயினார்குளம் வழியாக கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஏழாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி யை மது போதையில் கையை பிடித்து வலுக்கட்டாயமாக இழுத்து -சில்மிஷம் செய்ய முயன்றுள்ளார். உடனே அந்த சிறுமி, முத்துவிடம் இருந்து போராடி தப்பித்து வீட்டுக்கு சென்று தனது பெற்றோரிடம் நடந்த சம்பவங்கள் தொடர்பாக தெரிவித்தார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர், டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலை யத்தில் புகார் அளித்தனர் . அதன்பேரில் போலீசார் விசாரணை. நடத்தி போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து முத்துவை தேடி வருகின்றனர்

டாஸ்மாக் கடை நிரந்தரமாக மூடல் முதல்வருக்கு வியாபாரிகள் சங்கம் நன்றி!

தூத்துக்குடி, ஜூன் 2: தூத்துக்குடி மாட்டுத்தாவணி பகுதியில் நீண்ட நாட்களாகப் பொதுமக்களுக்கு பெரும் இடையூறாக இருந்து வந்த டாஸ்மாக் மதுபா னக் கடை இன்று முதல் நிரந்தரமாக மூடப்பட்டது. வ.உ.சி. மார்க்கெட் ஐக்கிய வியாபாரிகள் சங்கத்தின் கோரிக்கை மனுவை ஏற்று, டாஸ்மாக் கடையை அகற்ற உடனடி நடவடிக்கை மேற்கொண்ட முதல்வர் சி. ஜோசப் விஜய் மற்றும் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான அமைச்சர் ஏ. ஸ்ரீநாத் ஆகியோருக்கு வியாபாரிகள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

தூத்துக்குடி, ஜூன் 2- மெஞ்ஞானபுரம் அருகே நடுகாளான்குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் மகன் சிவனேஷ் (19) என்ற வாலிபர், வேலைக்குச் செல்லாமல் ஊர் சுற்றியதற்காகத் தந்தை கண்டித்ததால் மனமுடைந்து ஜே.ஜே. நகர் காட்டுப் பகுதியில் பூச்சிக்கொல்லி மருந்து குடித்துத் தற்கொலை செய்து கொண்டார். மெஞ்ஞானபுரம் காவல்துறையினர் உடலைக் கைப்பற்றித் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குமரியில் 6 வட்டங்களில் ஜுன் 9-12 வருவாய் தீர்வாய கணக்கு சரிபார்த்தல்

நாகர்கோவில், ஜுன் 2- கன்னியாகுமரி மாவட் டத்தில் உள்ள அகஸ்தீஸ் வரம், தோவாளை, கல் குளம், விளவங்கோடு, திரு வட்டார் மற்றும் கிள்ளியூர் ஆகிய ஆறு வட்டங்களுக்கு 1435 ஆம் பசலி ஆண்டுக் கான கிராம கணக்குகளை சரிபார்க்கும் வருவாய் தீர் வாய (ஜமாபந்தி) கணக்கு சரிபார்த்தல் நிகழ்ச்சியானது வருகிற ஜுன் 9 முதல் 12 ஆம் தேதி வரை அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்க ளில் நடைபெற உள்ளது. இந்த வருவாய் தீர்வாய நிகழ்ச்சியில் திருவட்டார் வட்டத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவரும், அகஸ் தீஸ்வரம் வட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலு வலரும், விளவங்கோடு வட்டத்திற்கு பத்மநாபபுரம் சார் ஆட்சியரும், தோ வாளை வட்டத்திற்கு நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியரும், கல்குளம் வட்டத்திற்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரும், கிள்ளியூர் வட்டத்திற்கு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலு வலரும் வருவாய் தீர்வாய அலுவலர்களாக மாவட்ட ஆட்சியரால் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, அகஸ்தீஸ் வரம் வட்டத்தில், நாகர்கோ வில் குறுவட்டம் ஜுன் 9, இராஜாக்கமங்கலம் குறு வட்டம் ஜுன் 10,. சுசீந்தி ரம் குறுவட்டம் ஜுன் 11, கன்னியாகுமரி குறுவட்டம் ஜுன் 12, தோவாளை வட்டத்தில் உள்ள, தோ வாளை குறுவட்டம் ஜுன் 9, அழகியபாண்டியபுரம் குறுவட்டம் ஜுன் 10, பூதப்பாண்டி குறுவட்டம் ஜுன் 11 தேதிகளிலும், கல்கு ளம் வட்டத்தில் தக்கலை குறுவட்டம் ஜுன் 9, திருவிதாங்கோடு குறு வட்டம் ஜுன் 10, குளச்சல் குறு வட்டம் ஜுன் 11, குருந்தன் கோடு குறுவட்டம் ஜுன் 12, விளவங்கோடு வட்டத்தில் உள்ள விளவங்கோடு குறு வட்டம் ஜுன் 9, இடைக் ்கோடு குறுவட்டம் ஜுன் 10, அருமனை குறுவட்டம் ஜுன் 11, திருவட்டார் வட்டத் தில் உள்ள திருவட்டார் குறு வட்டம் ஜுன் 9, குலசேகரம் குறுவட்டம் ஜுன் 10, கிள்ளியூர் வட்டத்தில் உள்ள மிடாலம் குறுவட்டம் ஜுன் 9, பைங்குளம் ஜுன் 10 ஆகிய தேதிகளில் அந்தந்த குறுவட்டத்திற்கு உட்பட்ட வருவாய் கிரா மங்களுக்கான வருவாய் தீர்வாய சரிபார்த்தல் நடைபெறும். வருவாய் தீர்வாய தணிக்கை நடைபெறும் நாட்களில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அந்தந்த வட்டாட்சியர் அலுவல கங்களில் நியமிக்கப் பட்டுள்ள வருவாய் தீர்வாய அலுவலரிடம் நேரில் வழங்கி தீர்வு பெற்றுக் கொள்ளு மாறு மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டுக்கொண் டுள்ளார்.

திருவிதாங்கோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியர் திடீர் ஆய்வு

நாகர்கோவில், ஜுன் 2- கன்னியாகுமரி மாவட்டம், திரு விதாங்கோடு அரசு ஆரம்ப சுகாதார நிலை யம் மற்றும் பத்மநாபபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சித் தலைவர் மு.பிரதாப் மே 2 செவ்வாயன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது நோயாளிகளின் வருகை பதிவேடு, மருத்துவ அறை, மருந்து வழங்கும் நிலையம், உள்நோயாளிகள் வார்டு, பிரசவ வார்டு உள்ளிட்டவைகளை ஆய்வு மேற்கொண்டார்கள். மேலும் புறநோயா ளிகளிடம் மருத்துவர்கள் மற்றும் செவிலி யர்கள் நன்கு பரிசோதனை மேற்கொண்டு அந்த நோய்க்கு ஏற்ப மருந்து வழங்கு கின்றார்களா என்பதையும் கேட்டறிந் தார்கள். மேலும் பிரசவ வார்டினை ஆய்வு மேற்கொண்டு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மருத்துவர்களிடம் ஒவ்வொரு மாதமும் இந்நிலையத்தில் குழந்தைகள் பிறப்பு விகிதத்தை கேட்டறிந்ததோடு தாய் மார்களிடம் அரசால் வழங்கப்படும் முதல் மற்றும் இரண்டாம் கட்ட உதவித்தொகை கிடைக்கிறதா என்பதனையும் கேட்டறிந்தார் கள். கர்ப்பிணி தாய்மார்களுக்கு அரசால் வழங்கப்படும் ஊட்டச்சத்து உள்ளிட்ட பெட்டகங்கள் வழங்கப்படுகிறதா என்பதை யும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பத்மநாபபுரம் அரசு தலைமை மருத்து வமனையினை திடீர் ஆய்வு மேற் கொண்டு நோயாளிகளுக்கு வழங்கப் படும் மருத்துவ வசதிகள் குறித்து மருத்து வர்களிடம் கேட்டறிந்ததோடு உள்நோயாளி கள் மற்றும் புற நோயாளிகளாக வரும் நோயாளிகளை காத்திருக்க வைக்கா மல் உடனுக்குடன் அவர்களின் நோய் தன்மை அறிந்து மருத்துவ சிகிச்சை வழங்க மருத்துவர்களிடம் அறிவுறுத்தி னார். நீண்ட வரிசையில் நின்று மருத்துவ சிகிச்சை பெற வந்த புற நோயாளி களிடம் மருத்துவர்கள் நன்றாக பரிசோ தனை மேற்கொண்டு உரிய சிகிச்சை அளிக்கின்றார்களா என்பதை கேட்ட றிந்தார். மேலும் தனியார் மருத்துவமனைக்கு இணையாக அனைத்து அரசு மருத்துவ மனைகளும் சிகிச்சை அளிக் கப்பட்டுவருவதாகவும் தரமான மருத்துவ சேவைகள் நோயின் தன்மை அறிந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்பதை நோயாளிகளுக்கு தெரியப்படுத்தியதோடு மருத்துவ மனைக்கு வரும் நோயாளிகளிடம் கனிவுடன் பரிசோதனைகள் மேற்கொண்டு சிகிச்சை அளிக்க வேண்டுமென மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் அறிவுறுத்தினார்கள். நடைபெற்ற ஆய்வின்போது பத்மநாப புரம் அரசு தலைமை மருத்துவமனை கண் காணிப்பு அலுவலர் மில்லிங்டோனியா, திருவிதாங்கோடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் பரத், மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்

தென்காசி மாவட்டத்தில் 15 சிறந்த கலைஞர்களுக்கு விருதுகள் ஆட்சியர் தகவல்

தென்காசி, ஜூன் 2- தென்காசி மாவட்டக் கலைமன்றம் வாயிலாக 15 சிறந்த கலைஞர்களுக்கு 2025-2026 ஆம் ஆண்டுக்கான கலை விருதுகள் வழங்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் தெரிவித்துள்ளார். இயல், இசை, நாடகம் முதலிய முத்தமிழ் கலைக ளில் சிறந்து விளங்கும் கலைஞர்கள் தேர்வுக்குழு மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர். பாட்டு, பரதநாட்டியம், நாட்டுப்புறக் கலைகள், ஓவியம், சிற்பம் மற்றும் சிலம்பாட்டம் உள்ளிட்ட கலைகளில் சிறந்து விளங்கும் தென்காசி மாவட்டக் கலைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வயதின் அடிப்படையில் கலை இளமணி (18 வயது வரை - ரூ.4,000), கலைவளர்மணி (19-35 வயது - ரூ.6,000), கலைச்சுடர்மணி (36-50 வயது - ரூ.10,000), கலை நன்மணி (51-65 வயது - ரூ.15,000) மற்றும் கலைமுதுமணி (66 வய துக்கு மேல் - ரூ.20,000) ஆகிய நிலைகளில் பொற்கிழி மற்றும் பட்டயம் வழங்கப்படும். தேசிய, மாநில(கலைமாமணி) விருது பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கக் கூடாது. தகுதியுள்ள கலைஞர்கள் சான்றுகளுடன் திருநெல்வேலி யில் உள்ள மண்டலக் கலை பண்பாட்டு மைய அலுவல கத்திற்கு 10 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இரவு நேரப் பேருந்துகளை இயக்காவிட்டால் மக்களுடன் சாலை மறியல் எம்.எல்.ஏ. எச்சரிக்கை

தென்காசி, ஜூன் 2- தென்காசியில் இருந்து வடகரைக்கு இயக்கப்படும் இரவு நேரப் பேருந்துகள் முறையாக இயக்கப்படாததைக் கண்டித்துப் பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தென்காசி பழைய பேருந்து நிலையத்திலிருந்து வடகரை செல்ல இரவு 9.30 மணிக்கு இயக்கப்பட வேண்டிய கடைசிப் பேருந்து, கடந்த சில நாட்களாக இரவு 11 மணி வரை ஆகியும் இயக்கப்படவில்லை. இதனால் ஆத்திர மடைந்த பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கலெ க்ஷன் குறைவு என்ற காரணத்தைக் கூறி பேருந்துகள் நிறுத்தப்படுவதாகப் பயணிகள் புகார் தெரிவித்தனர். மறியல் போராட்டம் குறித்து அறிந்த கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் தி.மு.ராசேந்திரன், உடனடியாகத் திருநெல்வேலி மண்டல மேலாளரைத் தொடர்பு கொண்டு பேசினார். வடகரை ரகுமானியாபுரம் பகுதிக்குப் பேருந்து இனி சரியான நேரத்தில் இயங்க வேண்டும் என்றும், இந்தத் தவறு மீண்டும் ஏற்பட்டால் பொதுமக்க ளோடு சேர்ந்து தானும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு: தவெக நிர்வாகிகள் இருவர் கைது

தூத்துக்குடி, ஜூன் 2: இளம்பெண்ணுக்குக் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்துக் கூட்டுப் பாலியல் வன்கொடு மையில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் 2 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே ஆறுமுக மங்கலம் பகுதியைச் சேர்ந்த த.வெ.க. மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பாலமுருகன் (29) மற்றும் இராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த த.வெ.க. நிர்வாகி ஜெயபால் (27) ஆகிய இருவரும் ஸ்ரீவைகுண்டம் அருகே யுள்ள ஒரு பகுதியைச் சேர்ந்த 33 வயது இளம்பெண்ணு க்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி காரில் அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர், அந்த இளம்பெண்ணை ஏர்வாடி யில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்க வைத்து, குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்துக் கூட்டுப் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. மயக்கம் தெளிந்த பின்னர் தனக்கு நேர்ந்த கொடூரத்தை அறிந்து அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண், ஸ்ரீவை குண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், பாலமுருகன் மற்றும் ஜெயபால் ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, இருவரையும் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

தவெக நிர்வாகிகளின் அத்துமீறலுக்கு முதல்வர் விஜய் பதில் சொல்ல வேண்டும் பி.கீதா ஜீவன் அறிக்கை!

தூத்துக்குடி, ஜூன் 2: இளம்பெண் ஒருவர் தவெக நிர்வாகிகளால் கடத்தப் பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்ப வத்திற்குத் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலா ளரும் முன்னாள் அமைச்சருமான பி.கீதா ஜீவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில், “வாய்ச்சவடால் விட்டு ஆட்சிக்கு வந்துள்ள உங்கள் தவெக கட்சி நிர்வாகிகள் இருவரே இந்த கொடூரத்தைச் செய்துள்ளனர். இதுதான் உங்கள் ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு செயல்படுகின்ற லட்சணமா? இந்த உன்னதப் பாதுகாப்புக் குறைபாட்டிற்கு முதல்வர் விஜய் இப்போது என்ன பதில் சொல்லப் போகிறார்?” என மிகக் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

பணிகள் ஆய்வுக் கூட்டம் அமைச்சர்கள் பங்கேற்பு!

தூத்துக்குடி, ஜூன் 2: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மீன்வளத் துறை அமைச்சர் ஆ.ஸ்ரீநாத், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவ னங்கள் துறை அமைச்சர் பெ.மதன் ராஜா ஆகியோர் தலைமையில் அனைத்து அரசுத் துறைகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் பேசுகையில், தகுதி யுடைய அனைத்து மக்களுக்கும் அரசுத் திட்டங்கள் சென்றடைவதை அதி காரிகள் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் மீன்வளத்துறை இயக்குநர் விஜய கார்த்திகேயன், மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், மாவட்ட எஸ்பி அபிஷேக் குப்தா, சட்டமன்ற உறுப்பி னர்கள் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் (திருச்செந்தூர்), ஜி.வி.மார்க் கண்டேயன் (விளாத்திகுளம்), கு.சரவணன் (திருவைகுண்டம்), க.கரு ணாநிதி (கோவில்பட்டி), கூடுதல் ஆட்சியர் இரா.ஐஸ்வர்யா, மாநகராட்சி ஆணையர் சி.ப்ரியங்கா, மாவட்ட வருவாய் அலுவலர் மூ.குருச் சந்திரன் மற்றும் கோவில்பட்டி சார் ஆட்சியர் ஹிமான்ஷு மங்கள் உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

சிறுபான்மையினருக்குக் குறைந்த வட்டியில் கடன் வழங்கும் திட்டம்: ஆட்சியர் அறிவிப்பு

தென்காசி, மே 2- தமிழ்நாடு சிறுபான்மை யினர் பொருளாதார மேம் பாட்டுக் கழகத்தின் மூலம் சிறு பான்மையின மக்களின் வேலைவாய்ப்பு மற்றும் வரு மானம் ஈட்டுவதற்கான செயல் பாடுகளுக்குக் குறைந்த வட்டி யில் கடனுதவிகள் வழங்கப்பட வுள்ளதாகத் தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ் தனி நபர் கடன், சுயஉதவிக் குழுக்க ளுக்கான சிறுதொழில் கடன், கைவினைஞர்களுக்கான ‘விராசாத்’ கடன் மற்றும் கல்விக் கடன்கள் வழங்கப்படு கின்றன. குடும்ப ஆண்டு வரு மானம் ரூ.3,00,000 வரை உள்ளவர்கள் திட்டம் 1-ன் கீழும், ரூ.8,00,000 வரை உள்ளவர்கள் திட்டம் 2-ன் கீழும் பயன்பெறலாம். திட்டம் 1-ன் கீழ் தனிநபர் கடன் 6% வட்டியில் அதிகபட்ச மாக ரூ.20 லட்சமும், திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8%, பெண்களுக்கு 7% வட்டியில் அதிகபட்சமாக ரூ.30 லட்ச மும் கடன் வழங்கப்படுகிறது. கைவினைஞர்களுக்கு 4% முதல் 5% வட்டியில் ரூ.10 லட்சம் வரை விராசாத் கடன் வழங்கப்படுகிறது. மேலும், தொழிற்கல்வி பயிலும் மாண வர்களுக்கு 3% முதல் 8% வட்டி விகிதத்தில் ரூ.20 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரையிலும் கல்விக் கடனுதவி வழங்கப்படு கிறது. தகுதியுடைய சிறுபான் மையினர் மாவட்ட பிற்படுத்தப் பட்டோர்/சிறுபான்மையினர் நல அலுவலகம் அல்லது கூட்டுறவு வங்கிகளில் விண் ணப்பித்துப் பயன்பெறலாம்.

தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு மாவட்ட ஆட்சியரிடம் ஊழியர் சங்கம் மனு

திருநெல்வேலி,ஜூன் 2- நெல்லை மாவட்டத்தில் உள்ள தூய்மை பணியா ளர்களுக்கு 2026-2027 வரு டத்திற்கு விலைவாசி உயர்வு க்கு ஏற்ப குறைந்தபட்ச ஊதி யம் உயர்த்தி அரசாணை பிறப்பிக்க கோரி நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் சிஐடியு திருநெல்வேலி மாவட்ட ஊரக வளர்ச்சி உள் ளாட்சித் துறை ஊழியர் சங் கத்தினர் மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதா வது: நெல்லை மாவட்டத்தில் மாநகராட்சி நகராட்சி பேரூ ராட்சிகளில் 20 ஆயிரத்தி ற்கும் மேற்பட்ட தினக்கூலி தூய்மை பணியாளர்கள் பணி செய்து வருகின்றனர். இவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் மாவட்ட ஆட்சித் தலைவர் நிர்ணயம் செய்கிற குறைந்தபட்ச ஊதியம் வழங் கப்படுகிறது. தற்போது இந்த பணியாளர்களுக்கு தினசரி ஊதியமாக ரூ.540 வழங்கப் பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர் வின் காரணமாக அனைத்து அத்தியாவசிய பொருட்கள் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. மேலும் குழந்தைகளின் கல்வி மற்றும் மருத்துவ செலவு களும் அதிகமாகியுள்ளது. இதன் காரணமாக தூய்மை பணியாளர்கள் வாழ்க்கை நடத்துவது மிகப் பெரிய சிரமமாக உள்ளது. மேலும் நமது பக்கத்து மாவட்டங்க ளான தென்காசி, கன்னியா குமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் தினக்கூலி தூய்மை பணியாளர்க ளுக்கு நமது மாவட்டத்தை விட அதிக ஊதியம் நிர்ண யம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் நமது மாவட்டத்தில் மட்டும் குறைவான ஊதி யமே நிர்ணயம் செய்யப் படுகிறது. 2017-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு தமிழ்நாட் டிலுள்ள தூய்மை பணியா ளர்களுக்கு தினசரி ஊதிய மாக ரூபாய் 732/- நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்று ஒரு அரசாணை வெளியிட்டுள்ளது. மேற் படி அரசாணையை பல மாவட்டங்கள் நிறைவேற் றாத காரணத்தால் எங்கள் மாநில அமைப்பின் சார்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு உயர்நீதி மன்றமும் குறைந்தபட்ச ஊதியம் ரூ.732 அனைத்து மாவட்டங்களும் உத்தரவா தப்படுத்தப்பட வேண்டும் என்றும் தீர்ப்பு கூறியுள்ளது. இதன் காரணமாக திருப்பூர், கோயமுத்தூர், ஈரோடு போன்ற மாவட்டங்களில் தினசரி ஊதியம் ரூபாய் 732 நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் நெல்லை மாவட்டத்தில் தூய்மை பணியாளர்க ளுக்கான ஊதிய உயர்வு நிர்ணயம் செய்யும்போது ஏற்கனவே பெற்றுக் கொ ண்டிருக்க கூடிய ஊதியத்தி லிருந்து ஆறு சதவிகித ஊதியம் உயர்த்தப் படுகிறது. இது சரியான அணுகுமுறை இல்லை. சமூகத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ள தூய்மை பணியாளர்களின் ஊதியத்தை தினசரி ரூ.732 க்கு குறையாமல் குறைந்த பட்ச ஊதியத்தை உயர்த்தி அரசாணை பிறப்பிக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது. இதில் திருநெல்வேலி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஆர்.மோகன், பொதுச் செய லாளர் மாரியப்பன், பொரு ளாளர் செல்லதுரை மற்றும் ஊழியர்கள் பங்கேற்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்தனர்.