திருநெல்வேலி விரைவு செய்திகள்
22 Sept 2026, 9:33 pm

திருநெல்வேலி விரைவு செய்திகள்

இரும்புக்குழாயில் துணி காயபோட்ட முதியவர் பலி

குலசேகரம், செப். 22 -கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் ஆரணி விளைப் பகுதியை சேர்ந்தவர் சந்திரன் (71),கூலி தொழிலாளி .இவருக்கு செல்லம் என்ற மனைவியும் ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணம் ஆகியுள்ளது. சந்திரன் வீட்டில் மின் இணைப்புக்கு சர்வீஸ் லைன் கட்டுவதற்காக நிறுத்தப்பட்ட இரும்பு பைப்பில் துணி உலர போடுவதற்காக கயிற்றை கட்டி வைத்துள்ளார்.

செப்டம்பர் 22 திங்களன்று வேலைக்குச் சென்று விட்டு சுமார் இரவு 8 மணி அளவில் வீட்டில் வந்துள்ளார்.பின்னர் குளித்துவிட்டு தான் அணிந்திருந்த ஈரமான துணியை கயிற்றில் காய போடச் சென்ற போது மின்சாரம் தாக்கி சந்திரன் தூக்கி வீசப்பட்டார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு குலசேகரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சந்திரன் இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இச்சம்பவம் குறித்து குலசேகரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய நிர்வாகிகள் தேர்வு

திருநெல்வேலி, செப்.22- தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி நாங்குநேரி வட்டார கிளையின் 15 வது அமைப்பு தேர்தல் திங்கட்கிழமையன்று நாங்குநேரியில் நடைபெற்றது.

தேர்தல் ஆணையராக இராதாபுரம் வட்டார செயலாளர் ஆஸ்டின் ஜெப சாலமோன், துணை தேர்தல் ஆணையராக இராதாபுரம் வட்டாரம் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ஜெயக்குமார் ஆகியோர் தேர்தலை நடத்தினர்

தேர்தலில் வட்டார தலைவராக முருகேசன், வட்டார செயலாளராக செல்வராஜ் ,வட்டார பொருளாளராக அலெக்ஸ் சுனிதா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

முன்னாள் எம்.பி., பெல்லார்மின் முயற்சியால் நிறைவேறிய குடிநீர் திட்டம்

சுனாமி கூட்டுக் குடிநீர் திட்டம் என்பது 2004-இல் ஏற்பட்ட சுனாமி பாதிப்பிற்குப் பின், கடலோரப் பகுதிகள் மற்றும் பேரூராட்சிகளின் குடிநீர் தேவையை நிறைவேற்ற சுமார் ரூ.38 கோடி மதிப்பீட்டில் சுனாமி மறுவாழ்வுத் திட்ட நிதியின் கீழ் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் (TWAD) வடிவமைக்கப்பட்டு வெற்றிகரமாகச் செயல்

படுத்தப்பட்டது. அன்றைய நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.வி.பெல்லார்மின் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். இதன் மூலம் புதுக்கடை, கருங்கல், பைங்குளம், விளாத்துறை, பாலப்பள்ளம், நல்லூர் உள்ளிட்ட 17 பேரூராட்சிகள் மற்றும் 79 கடலோரக் குடியிருப்புகள் பாதுகாப்பான குடிநீரைப் பெற்று வருகின்றன. இதுகுறித்து சிபிஎம் வட்டாரச் செயலாளர் ராஜு கூறுகையில், 20 ஆண்டுகளுக்கு மேலும் பழமையான குழாய்கள் குமரி மாவட்டத்தின் மேடுபள்ளங்கள் நிறைந்த நில அமைப்பால்எளிதில் பழுதாகி விடுகின்றன. அத்தகைய இடங்களில் பழைய குழாய்களை மாற்றி சூழலுக்கு இசைவான புதிய குழாய்கள் அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.