திருநெல்வேலி விரைவு செய்திகள்
28 Sept 2026, 11:12 pm

திருநெல்வேலி விரைவு செய்திகள்

குமரியில் இருந்து கேரளத்திற்கு கனிம வளம் கடத்தல்2 டெம்போக்கள் பறிமுதல்; 2 பேர் கைது

நாகர்கோவில், செப்.28 -குமரி மாவட்டம் களியக்காவிளை பகுதி வழியாக கேரளத்திற்கு கனிம வளம் கடத்தப்படுவதாக மார்த்தாண்டம் துணை சூப்பிரண்ட் சங்கர்கணேஷ்க்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து களியக்காவிளை சோதனைச் சாவடி வழியாக செல்லும் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டன. அப்போது தார்ப்பாய் மூலம் மூடப்பட்டு, சிமெண்ட் லோடு ஏற்றி செல்வது போல் வந்த லாரியை போலீசார் நிறுத்தினர். தப்பி ஓட முயன்ற ஓட்டுநரை, போலீசார் மடக்கிப் பிடித்தனர். தொடர்ந்து லாரியை சோதனை செய்த

தில், கனிம வளம் இருந்ததும் அவற்றை கேரளத்திற்கு கடத்தியதும் தெரிய வந்தது. லாரியை பறிமுதல் செய்த

போலீசார், ஓட்டுநரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில் அவர் சிதறால் பகுதியைச் சேர்ந்த சிபின் என தெரிய வந்தது. இதுபோன்று மலையடி பகுதியில் போலீசார் இரண்டு டெம்போக்களை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் ஓட்டுநர்கள் வாகனங்களை நிறுத்தாமல் வேகமாக எடுத்துச் சென்றனர். இதையடுத்து 3 கிலோ மீட்டர் தூரம் துரத்தி பாறமடை என்ற பகுதியில் வாகனங்களை போலீசார்மடக்கி பிடித்தனர். இதில் வெள்ளறடை பகுதியைச் சேர்ந்த அகஸ்டினை போலீசார் திங்களன்று கைது செய்தனர்.

கேசவன்புத்தன் துறை கடலில் இழுத்துச்செல்லப்பட்ட சிறுமியின் உடல் மீட்பு

நாகர்கோவில், செப்.28 -நாகர்கோவில் ராமன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் கட்டிராஜன் - பிரியதர்ஷினி தம்பதிக்குகெபின்ஜோஸ் (9) என்ற மகனும், அலிகியானா சல்மா (4) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் ஞாயிறன்று ஈத்தாமொழி காவல் நிலையஎல்லை பகுதியான கேசவன் புத்தன்துறை மீனவக் கிராமத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டிற்கு விருந்திற்கு சென்றுள்ளனர்.அப்போது வீட்டின் பின்புறம் உள்ள தூண்டில் வளைவு கடற்கரையில் சென்று கடலில் இறங்கி கால் நனைத்து கொண்டிருந்தனர். அப்போது பிரியதர்ஷினி மற்றும் அவரது இரண்டு குழந்தைகளையும் ராட்சத அலை கடலுக்குள் இழுத்துச் சென்றது. அவர்கள் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் மீனவர்கள் உடனடியாக கடலில் குதித்து தாய் பிரியதர்ஷினி மற்றும் மகனை உயிருடன் மீட்டனர். ஆனால் 4 வயது சிறுமி அலிகியானா சல்மா அலையின் வேகத்தில் கடலுக்கு இழுத்துச் செல்லப்பட்டுமாயமானார்.தகவலறிந்த கன்னியாகுமரி மரைன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். முதல் நாள் இரவு வரையிலும் சிறுமி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து திங்களன்று காலையிலிருந்து தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது. கேசவன் புத்தன்துறை முதல் சுற்றுவட்டார கடலோர பகுதிகளில் தீவிரமாக தேடிய நிலையில், திங்களன்று மதியம் சிறுமி அலிகியானா சல்மாவினுடைய உடல் மீட்கப்பட்டது. அவரது உடலை குமரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ரத்தக் கறையுடன் வீட்டில்பெண் சடலம் மீட்பு

இரணியல், செப்.28 -இரணியல் அருகே கடமலைக்குன்று பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரதாஸ் மனைவி தங்க லீலா (67). இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. சுந்தரதாஸ் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் தங்க லீலா நடுத்தேரில் வசிக்கும் மகள் ஜாஸ்மின் ஷீபா (39) வீட்டில் தங்கியிருந்தார்.

இந்நிலையில் ஞாயிறன்று மாலை ஜாஸ்மின் ஷீபா வெளியே சென்று விட்டார். தங்க லீலா மட்டும் வீட்டிலிருந்தார். இரவு மகள் வீட்டிற்கு வந்து பார்த்த போது தங்க லீலா கட்டிலில் இறந்து கிடந்துள்ளார். அருகே இருந்த தலையணையில் ரத்த கறை இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஜாஸ்மின் ஷீபா இது குறித்து இரணியல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.அப்போது தங்க லீலா அணிந்திருந்து தங்கச் செயின், காப்பு, கம்மல் என அனைத்தும் அப்படியே இருந்தது. போலீசார் சிசிடிவி காட்சியை ஆய்வு செய்து விசாரித்தனர். தொடர்ந்து மூதாட்டி உடலை கைப்பற்றி குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தங்க லீலா எப்படி இறந்தார் என்பது உடற்கூராய்வுக்கு பிறகுதான் தெரிய வரும் என்றனர் போலீசார்.இரணியல் பகுதியில் கடந்த 10 நாட்களில் இது போன்ற மர்ம சாவு நடப்பது இது மூன்றாவது சம்பவமாகும்.

ரப்பர், நகர்ப்புற உள்ளாட்சி ஊழியர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் சிஐடியு வலியுறுத்தல்

நாகர்கோவில், செப். 28-சிஐடியு கன்னியாகுமரி மாவட்டக் குழு கூட்டம் நாகர்கோவிலில் ராணித்தோட்டம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்க அலுவலகத்தில் திங்கட்கிழமை (செப்.28) மாவட்ட தலைவர் ஏ.வி.பெல்லார்மின் தலைமையில்நடைபெற்றது.

மாவட்டச் செயலாளர் எஸ்.சி. ஸ்டாலின் தாஸ், மாவட்டப் பொருளாளர் ப. இந்திரா, மாநில துணைத் தலைவர் எம். ஐடா ஹெலன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், மாவட்டக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.அகில இந்திய சிஐடியு அறைகூவலின்படி, டிசம்பர் 1–2 தேதிகளில் தில்லி தலைநகரில் நடைபெறவுள்ள “ஆக்கிரமிப்போம் தில்லியை!” போராட்டத்தில் குமரி மாவட்ட சிஐடியுவினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வதென முடிவு செய்யப்பட்டது.

மேலும், அரசு ரப்பர் கழகத்தைச் சேர்ந்த பால் வடிப்பு, காட்டு வேலை உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வரும் தோட்டத் தொழிலாளர்களுக்கு கடந்த ஊதிய ஒப்பந்தம் 30.11.2025-உடன் முடிவடைந்த நிலையில், 10 மாதங்களாகியும்1.12.2025 முதல் ஊதிய உயர்வு அளிக்கப்படவில்லை.சிஐடியு உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களும் ஊதிய உயர்வு கோரி மனுக்களை நிர்வாகத்துக்கு அளித்த பின்னரும், அதனை அவர்கள் ஏற்றுக் கொள்ளாத நிலையில், ஆர்ப்பாட்டம் மற்றும் இரண்டு நாட்கள் வேலைநிறுத்தம் என போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.

ரூ.200 ஊதிய உயர்வு என்ற தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளாமல், ரூ.40 மட்டுமே அளிக்க இயலும் என நிர்வாகம் பிடிவாதமாக உள்ளது. பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஆர். செல்லசுவாமி வனத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தினார். எனினும் அதிகாரிகள் பிரச்சனையைத் தீர்க்கமுன்வரவில்லை. தொழிலாளர்கள் தொடர்ந்து வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர்.

எனவே, தமிழ்நாடு அரசும் வனத்துறையும் அனைத்து தொழிற்சங்கங்களுடன் பேசி, நியாயமான ஊதிய உயர்வையும், 1.12.2025 முதல் நிலுவைத்தொகையையும் உடனடியாக வழங்கும் வகையில் பிரச்சனைக்கு உடனடியாகத் தீர்வு காணுமாறு சிஐடியு குமரி மாவட்டக் குழு வலியுறுத்துகிறது. போராடும் தோட்டத் தொழிலாளர்களுக்கு சிஐடியு குமரி மாவட்டக் குழு தனது முழு ஒருங்கிணைப்பைத் தெரிவித்துக் கொள்கிறது.

மேலும், உள்ளாட்சி ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட வாழ்வாதாரக் கோரிக்கைகளை முன்வைத்து, அக்டோபர் 5 முதல் மாநிலம் முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட ஆயத்தமாகி வருகின்றனர்.உள்ளாட்சி ஊழியர் சங்கத்துக்கு சிஐடியு குமரி மாவட்டக் குழு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதோடு, அக்டோபர் 5 நடைபெறும் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு முழு ஆதரவும், ஒத்துழைப்பும் நல்குவதோடு, போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

குமரி மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதம் மட்டும் 12 போக்சோ வழக்குகள் பதிவு சட்ட ஒழுங்கு கலந்தாய்வு கூட்டத்தில் தகவல்

நாகர்கோவில், செப்.28-கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதத்தில் மட்டுமே 12 போக்சோ வழக்குகள்புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக சட்ட ஒழுங்குகுறித்த கலந்தாய்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துஉள்ளார்.கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட காவல் துறை உட்பட பல்வேறு துறைகளின் சார்பில் சட்ட ஒழுங்கு குறித்த கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர்அலுவலக வருவாய் கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் துறை சார்ந்த அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டு கூறுகையில், “கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பவர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. போதைப் பொருட்களுக்கு அடிமையாகும் இளைஞர்களை கைது செய்து, அவர்களை சீர்திருத்த சிறைகளுக்கு அனுப்பி தக்க மனநல ஆலோசனை வழங்கவும் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதத்தில், தலைக்கவசம் (ஹெல்மெட்)அணியாமல் வாகனம் ஓட்டியதற்காக அதிகபட்சமாக 29,208 வழக்குகளும், இருசக்கர வாகனத்தில் விதிகளை மீறி மூன்று பேராகச் சென்றதற்காக 1,112 வழக்குகளும், உயிருக்கு ஆபத்தான முறையில் மது அருந்திவிட்டுவாகனம் ஓட்டிய 905 ஓட்டுநர்கள் மீது வழக்குகளும், அதிவேகமாக வாகனங்களை இயக்கியதற்காக 137 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக, போக்குவரத்துப் பிரிவுகளில் அதிகளவில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நாகர்கோவில், வடசேரி, தக்கலை, மார்த்தாண்டம், குளச்சல், இரணியல் மற்றும் கன்னியாகுமரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் காவல் துறையினர் போக்குவரத்து ஒழுங்குபடுத்துதல் பிரிவு காவலர்கள் தொடர்ந்து தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் புதிதாக 12 போக்சோ வழக்குகள் பதிவாகியுள்ளன. குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சட்டம் ஒழுங்கு பிரச்சனை சம்பந்தமாகவும், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.