தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருநெல்வேலி விரைவு செய்திகள்

2 Oct 2026, 10:53 pm
திருநெல்வேலி  விரைவு செய்திகள்

வீடு வாங்கித் தருவதாக பணம் மோசடி: 6 பேர் மீது வழக்கு பதிவு

அருமனை, அக். 2-கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே பள்ளிவிளை வீடு பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமாரி (58). இவரது கணவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு நோய்வாய்ப்பட்டு இறந்துபோனார். இவரது மகன் அஷ்வின் அலெக்ஸ். இவர்தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.மகனுக்கு வீடு வாங்குவதற்காக விஜயகுமாரி பலஇடங்களில் விசாரித்து வந்துள்ளார். இந்த நிலையில், வேர் கிளம்பி காரியமங்கலம் பகுதியில் வீடு ஒன்று விற்பனைக்கு உள்ளதாகக் கூறி சிலர் அவரை அணுகியுள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான காஜா மைதீன் உள்ளிட்ட 6 பேர் சேர்ந்து வீடு ஒன்றைக் காட்டியுள்ளனர். வீட்டைப் பார்த்த விஜயகுமாரி, அந்த வீட்டுக்கு ரூ.48 லட்சம் விலை பேசி முடித்து, ரூ.12 லட்சம் முன்பணமாக கொடுத்துள்ளார். அதன் பின்னர் மீதித் தொகையை பல தவணைகளாக நேரடியாகவும் வங்கி கணக்கு மூலமும் கொடுத்துள்ளார்.

இதற்கிடையே, வீட்டை எழுதி கொடுக்காமல் காலம் கடத்தி வந்துள்ளனர். விஜயகுமாரி விசாரித்தபோது, வீட்டை வேறு நபருக்கு ஏற்கனவே விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, தன்னை ஏமாற்றி மோசடிசெய்ததாகக் கூறி விஜயகுமாரி திருவட்டார் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதன்பேரில், காஜா மைதீன் மற்றும் 3 பெண்கள் உள்ளிட்ட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குலசேகரம் பேரூராட்சியில் டெங்கு தடுப்பு பணி தீவிரம்

குலசேகரம், அக். 2 -தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதால் அதை தடுக்கும் நோக்கோடு அரசு செயல்பட்டு வருகிறது. இதை இதைத்தொடர்ந்து குமரி மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் டெங்கு தடுப்பு பணி தீவிர படுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் குலசேகரம் பேரூராட்சிக்குட்பட்ட 18வார்டுகளிலும் டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். இதனை கண்காணிக்கும் வகையில் பேரூராட்சி தலைவர் ஜெயந்தி ஜேம்ஸ்துணைத் தலைவர் ஜோஸ் எட்வர்ட் செயல் அலுவலர் காமேஸ்வரி, சுகாதார ஆய்வாளர் மேற்பார்வையிலும் இப்பணி நடைபெற்று வருகிறது. தூய்மை பணியாளர்கள் தன்னார்வதொண்டர்கள் வீடு வீடாக சென்று தண்ணீர் தொட்டிகள் கால்நடை வளர்க்கும் பகுதிகள் கொசுக்கள்உற்பத்தியாகாமல் கொசு மருந்து அடிக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்களுக்குவிழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர்.

நெல்லை மாவட்டத்தில் 67 புறநகர் பேருந்துகளில் வெற்றி பயணத் திட்டம்

திருநெல்வேலி அக். 2-​நெல்லையில் 67 வழித்தடங்களில் ‘வெற்றி பயண திட்டம்’கீழ் மகளிர் இலவசமாக பயணம் செய்ய ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தை நெல்லை புதிய பஸ்-ஸ்டாண்டில் ஆட்சியர் ஆனந்தமோகன் தலைமையில் ராபர்ட்புரூஸ் எம்பி., ரெட்டியார்பட்டி நாராயணன் எம்எல்ஏ ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

நெல்லையை புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஏரல், ஆத்தூர், உடன்குடி, திருச்செந்தூர், தூத்துக்குடி,ஸ்ரீவில்லிபுத்தூர், சங்கரன்கோவில், கோவில்பட்டி, பாபநாசம், அம்பை, தென்காசி, கடயம் ஆகிய பகுதிகளுக்கும், வள்ளியூரிலிருந்து நெல்லை, கோவில்பட்டி, நாகர்கோவில், தென்காசி, ராதாபுரம் ஆகிய பகுதிகளுக்கும், திசையன்விளையிலிருந்து திருச்செந்தூர், நெல்லைக்கும், பாபநாசத்திலிருந்து நெல்லை, தென்காசி, ஆலங்குளம், முக்கூடல் ஆகிய பகுதிகளுக்கும் வெற்றி பயண திட்டத்தின் கீழ் புறநகர் பஸ்கள் இயக்கப்படுவதாக ஆட்சியர் ஆனந்தமோகன் தெரிவித்தார். மொத்தம் 189 நகர பஸ்களிலும், 67 புறநகர் வழித்தடங்களிலும் என மொத்தம் 257 வழி தடங்களில் வெற்றி பயண திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நிகழ்ச்சியில் அரசு போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் செல்வம், கோட்ட மேலாளர் பூல்ராஜ்,உதவி மேலாளர் மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

‘ஜி-பே’ மூலம் லஞ்சம் கேட்ட தலைமை காவலர் சஸ்பெண்ட்

திருநெல்வேலி, அக். 2-நெல்லை மாநகரம் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருபவர் சொர்ண ராஜ். இவர் சம்பவத்தன்றுமேலக் கருங்குளம் சோதனை சாவடியில் பணியில் இருந்தார். அப்போது அங்கு போலீசார் வாகன சோதனையில்ஈடுபட்டிருந்தனர்.

இதையடுத்து, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை போலீசார் வழிமறித்து ஆவணங்களை சரிபார்த்துள்ளனர். இதில் அந்த நபரிடம் வாகன காப்பீடு இல்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர் அங்கிருந்த அதிகாரியிடம் கூறியுள்ளார்.

​அதன் பின்னர் அதிகாரி, அந்த நபருக்கு அறிவுரை வழங்கி விட்டு செல்லும்படி கூறியுள்ளார். ஆனால் சொர்ணராஜ் அந்த நபரிடம் பணம் ஏதும் இருந்தால் கொடுத்துவிட்டு போகுமாறு கூறியுள்ளார்.

இதைக் கேட்ட அந்த நபர் போன் ஜி-பே நம்பரை சொர்ண ராஜிடம் கேட்டுள்ளார். அந்த நபருக்கு சொர்ண ராஜ் ஒரு போன் நம்பர் கொடுத்து அதில் பணத்தை போட்டு விடும்படி சொல்லி அனுப்பி வைத்துள்ளார். ​இதைத் தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு சென்ற அந்த நபர் சிறிது நேரம் கழித்து ஏட்டு சொர்ண ராஜ் வழங்கிய அந்த நம்பருக்கு பணம் வந்து விட்டதா? என்று போன் செய்து கேட்டுள்ளார்.

இதைக் கேட்ட சொர்ண ராஜ் பணம் வரவில்லை என்று கூறியுள்ளார். இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இது தொடர்பாக மாநகர போலீஸ் கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதை விசாரித்த கமிஷனர் உடனடியாக சம்பந்தப்பட்ட ஏட்டு சொர்ண ராஜை சஸ்பென்டு செய்து உத்தரவிட்டார். இது மாநகர காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.