முந்தய பக்கம்

டவுன் கல்லணை பள்ளியில் மாணவிகளுக்கு அடையாள வில்லை வழங்கல்

20 Jul 2026, 10:15 pm
டவுன் கல்லணை பள்ளியில் மாணவிகளுக்கு அடையாள வில்லை வழங்கல்
<p><strong>டவுன் கல்லணை பள்ளியில் மாணவிகளுக்கு அடையாள வில்லை வழங்கல்</strong> </p><p>திருநெல்வேலி ஜூலை 20 - நெல்லை மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சார்பில் மகிழ்முற்றம் 2026- 2027 அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை-மேல்நிலைப் பள்ளி மகிழ்முற்றம் அணிகளுக்கு அடையாள வில்லை (பேட்ஜ்) வழங்கும் விழா நெல்லை டவுனில் உள்ள கல்லணை மகளிர் மேல்நிலைப் பள்ளியில் திங்கட்கிழமை நடைபெற்றது. நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார் மாணவிகளுக்கு அடையாள வில்லைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் கணேசன், கல்லணை மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை கணியம்மாள், கதீட்ரல் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் டேவிட் தனபால், சாப்டர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அருள்தாஸ் ஜெபக்குமார், மேரி சர்ஜெண்ட் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை பியூலா வசந்தி, பாரதியார் பள்ளி தலைமை ஆசிரியை அங்கையற்கண்ணி, ம.தி.தா இந்து கல்லூரி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சோமசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram