திருநெல்வேலி சந்திப்பு யார்டு மேம்பாட்டு பணிகள் இன்று பல ரயில்கள் ரத்து, பகுதி ரத்து மற்றும் வழித்தட மாற்றம்
yesterday
<p><strong>திருநெல்வேலி சந்திப்பு யார்டு மேம்பாட்டு பணிகள் இன்று பல ரயில்கள் ரத்து, பகுதி ரத்து மற்றும் வழித்தட மாற்றம்</strong></p><p>மதுரை, ஜூன் 21- திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலைய யார்டு மறுசீரமைப்பு பணிகள் காரணமாக ஜூன் 22 ஆம் தேதி பல்வேறு பயணிகள் மற்றும் விரைவு ரயில்களின் இயக்கத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. முழுமையாக ரத்து செய்யப்பட்ட ரயில்கள் வாஞ்சி மணியாச்சி – திருச்செந்தூர் பயணிகள் ரயில் (56755), திருச்செந்தூர் – திருநெல்வேலி சந்திப்பு பயணிகள் ரயில் (56758), திருநெல்வேலி – கன்னியாகுமரி பயணிகள் ரயில் (56708), கன்னியாகுமரி – திருநெல்வேலி பயணிகள் ரயில் (56707), திருச்செந்தூர் – திருநெல்வேலி பயணி கள் ரயில் (56004), திருநெல்வேலி – திருச்செந்தூர் பயணிகள் ரயில் (56003), செங்கோட்டை – ஈரோடு எக்ஸ்பிரஸ் (16846), ஈரோடு – செங்கோட்டை எக்ஸ்பிரஸ் (16845) ஆகியவை முழுமையாக ரத்து செய்யப் பட்டுள்ளன. பகுதி ரத்து செய்யப்பட்ட ரயில்கள் திருச்செந்தூர் – திருநெல்வேலி (56752), திருநெல்வேலி – திருச்செந்தூர் (56753), செங்கோட்டை – திருநெல்வேலி (56774), திருநெல்வேலி – செங்கோட்டை (56773), நாகர்கோவில் – கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ் (16321), கோயம்புத்தூர் – நாகர் கோவில் எக்ஸ்பிரஸ் (16322), செங் கோட்டை – திருநெல்வேலி பயணிகள் ரயில் (56742), திருநெல்வேலி – செங்கோட்டை பயணிகள் ரயில் (56743), தாம்பரம் – நாகர்கோவில் அந்தியோதயா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (20691), நாகர்கோவில் – தாம்பரம் அந்தியோதயா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (20692) ஆகியவை குறிப்பிட்ட நிலையங்களுக்கு இடையே மட்டுமே இயக்கப்படும். மேலும், குருவாயூர் – சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் (16128), ஜூன் 21-ஆம் தேதி குருவாயூரில் இருந்து புறப்படும் நிலையில், திருச்சூர், பாலக்காடு, பொள்ளாச்சி மற்றும் திண்டுக்கல் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும். இதனால் எர்ணாகுளம், திருவனந்தபுரம், நாகர்கோவில், திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட பல நிலையங்களில் நிறுத்தம் இருக்காது. அதற்கு பதிலாக பாலக்காடு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி மற்றும் ஒட்டன்சத்திரம் நிலையங்களில் கூடுதல் நிறுத்தங்கள் வழங்கப்படும். இதேபோல், திருச்சிராப்பள்ளி – திரு வனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (22627) ஜூன் 22-ஆம் தேதி காலை 7.15 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக, ஒரு மணி நேரம் 15 நிமிடங்கள் தாமதமாக காலை 8.30 மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.</p>
