தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நெல்லையில் சாதி மறுப்புத் திருமணம் செய்த இளைஞர் கடத்தல் - மனைவி கண்ணீர் மல்க மனு!

21 May 2026, 11:07 pm
நெல்லையில் சாதி மறுப்புத் திருமணம் செய்த  இளைஞர் கடத்தல் - மனைவி கண்ணீர் மல்க மனு!

நெல்லையில் சாதி மறுப்புத் திருமணம் செய்த இளைஞர் கடத்தல் - மனைவி கண்ணீர் மல்க மனு!

​​​​​​​திருநெல்வேலி, மே 21 - நெல்லையில் சாதி மறுப்புத் திருமணம் செய்த இளைஞர் கடத்தப்பட்டார்.

அவரை மீட்டுத் தரக்கோரி காவல் ஆணையரிடம் அவரது மனைவி கண்ணீர் மல்க மனு அளித்தார்.

நெல்லை மாநகர காவல்துறை ஆணையரிடம் வியாழக்கிழமை யன்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் ஆர். மதுபால், மாவட்டப் பொருளாளர் கு. பழனி, பாதிக்கப் பட்ட பெண் சாருமதி மற்றும் வழக்கறிஞர்கள் அருண்குமார், தமிழினவேந்தன் ஆகியோர் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: பாளையங்கோட்டை அண்ணா நகரைச் சேர்ந்த சாருமதி மற்றும் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள அகரத்தைச் சேர்ந்த மருதநாயகம் ஆகியோர் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த வர்கள்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு காதலித்து சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட இவர்கள், பாளையங்கோட்டையில் உள்ள அண்ணா நகரில் சாருமதி வீட்டில் குடியிருந்தனர்.

இந்நிலையில் தேர்தல் நேரத்தில் மருதநாயகம் தனது சொந்த ஊருக்கு சென்று வாக்களித்துவிட்டு வருவதாக கூறிவிட்டு சென்றார்.

ஆனால் அதற்கு பின்னர் வரவே இல்லை.

இதுகுறித்து தீவிரமாக விசாரித்த போது மருதநாயகத்தை அவரது பெற்றோர் கடத்திக்கொண்டு சென்றதாகவும் தன்னைக் காப்பாற்றுமாறு மருதநாயகம் தனது மனைவி சாருமதியிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, மனைவி சாருமதி, நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் கடந்த ஏப்ரல் 27 அன்று புகார் அளித்த நிலையில், நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையரை அணுகுமாறு கூறப்பட்டுள்ளது.

துணை ஆணையரோ, காவல் ஆய்வாளரிடம் கூறி விசாரிக்குமாறு கூறியுள்ளார்.

ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை. இதற்கிடையே மருதநாயகம் தூத்துக்குடியில் உள்ள தனியார் பவுண்டேஷனில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் பெயரில் சாருமதி அங்கு சென்றபோது, மருத நாயகத்தை பார்க்க மட்டுமே அனு மதித்துள்ளனர்.

அந்த நேரத்தில் மருதநாயகம் தன்னை காப்பாற்றுமாறு சாருமதியிடம் தெரிவித்துள்ளார்.

ஆனால் அவரை மீட்க முடியவில்லை. எனவே, காவல்துறை தலை யிட்டு மருதநாயகத்தை மீட்டுத் தர வேண்டும் மற்றும் சாதியை காரணம் காட்டி பிரிக்க முயன்ற வர்கள் மீதும், அவர்களுக்கு உறு துணையாக செயல்படுபவர்கள் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்து உரிய பாதுகாப்பு தர வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.