அரசு ஊழியராக்கக் கோரி நெல்லையில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
25 Sept 2026, 9:51 pm

அரசு ஊழியராக்கக் கோரி நெல்லையில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி, செப்.25-அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை உடனடியாக அரசு ஊழியர் ஆக்க வேண்டும். நியாயமான காலமுறை ஊதியத்தை அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும். அங்கன்வாடி மையங்களை தனியாருக்கு தாரைவார்க்கக் கூடாது என்று வலியுறுத்தி நெல்லை மாவட்டம்களக்காடு அருகே உள்ள மாவடி மற்றும் பாப்பாக்குடியில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள சங்கம் சார்பில் வியாழனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. களக்காடு அருகே உள்ள மாவடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் தங்க ரூபி தலைமைதாங்கினார். சிஐடியு மாவட்ட தலைவர் ஆர்.முருகன் துவக்கி வைத்து பேசினார். சிஐடியு ஒருங்கிணைப்புக்குழு கன்வீனர் எஸ்.பூலுடையார் ரவிச்சந்திரன், ராமசாமி ,ஹரிஷ்குமார், முருகன் உள்ளிட்டோர்பேசினர்.

பாப்பாக்குடி வட்டாரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஞானம்மாள் தலைமை தாங்கினார், ஆர்ப்பாட்டத்தில்பலர் கலந்து கொண்டனர்.