தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நெல்லை: அரசு பேருந்து -டிப்பர் லாரி மோதி விபத்து பேருந்து நடத்துநர் பலி -20 பேர் படுகாயம்

8 Oct 2026, 10:52 pm
நெல்லை: அரசு பேருந்து -டிப்பர் லாரி மோதி விபத்து பேருந்து நடத்துநர் பலி -20 பேர் படுகாயம்

நெல்லை: அரசு பேருந்து -டிப்பர் லாரி மோதி விபத்து பேருந்து நடத்துநர் பலி -20 பேர் படுகாயம்

திருநெல்வேலி, அக். 8- நெல்லை மாவட்டம் பிரான்சேரி அருகே அரசு பேருந்தும் டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் நடத்துநர் பலியானார். பேருந்தில் பயணம் செய்த குழந்தைகள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். நெல்லை புதிய பேருந்து நிலையத்திலிருந்து வியாழக்கிழமை காலை பாபநாசம்நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. சுப்பிரமணியபுரம் இலங்கை அகதிகள் முகாமுக்கும் பிரான்சேரிக்கும் இடையில் சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த டிப்பர் லாரியும் அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதியது. இதில் இரண்டு வாகனங்களின் முன்பகுதியும் நொறுங்கி பலத்த சேதமடைந்தது.

அரசுப்பேருந்தில் பயணிகள் வலி தாங்காமல் அலறித் துடித்தனர். குழந்தை

களும் அச்சத்தில் அழுது கூச்சலிட்டனர். இதுபற்றிய தகவலறிந்ததும் சேரன்மகாதேவி தீயணைப்பு நிலைய அலுவலர் சூசை மரியபாலன் தலைமையிலான தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்கள் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் சேரன்மகாதேவி சார் ஆட்சியர் ஆயுஷ் குப்தா, சேரன்மகாதேவி டிஎஸ்பி அஸ்வத் ஆண்டோ ஆரோக்கியராஜ், மேலச்செவல் காவல் ஆய்வாளர் ரெகு ராஜன் ஆகியோர் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டனர். இந்த விபத்தில் அரசு பேருந்து நடத்துநர்கன்னியாகுமரியை சேர்ந்த அஜித் மெல்வின் ஆர்தர் உயிரிழந்தார். மேலும் பலத்த காயமடைந்த ஸ்ரீவைகுண்டம் அருகே கருங்குளம் பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுநர் செல்வம் (46), பேருந்து ஓட்டுநர் அருண் (48), குழந்தைகள், பெண்கள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரையும் மீட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.