தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருநெல்வேலி விரைவு செய்திகள்

17 Jul 2026, 10:29 pm
திருநெல்வேலி  விரைவு செய்திகள்

திருநெல்வேலி விரைவு செய்திகள்

புல்லாவெளி அருவியை மேம்படுத்த நில அளவைப் பணிகள் தொடக்கம்

சின்னாளப்பட்டி ஜூலை 17- திண்டுக்கல் மாவட்டத்தில் ஆத்தூர் தாலுகா மணலூர் ஊராட்சி பெரும்பாறை அருகே அமைந்துள்ள புல்லாவெளி அருவியை மேம்படுத்தும் நோக்கில் சுற்றுலாதுறை சார்பில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் அடிப்படை வசதிகளுக்கான மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. புல்லாவெளி அருவி கன்னிவாடி வனத்துறை கட்டுப் பாட்டில் உள்ளது என்று கூறி பணி நிறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து சுற்றுலாத்துறை, வருவாய்துறை, வனத்துறை இணைந்து நில அளவை பணி நடைபெற்று வரு கிறது. இதில் திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் கிருஷ்ண மூர்த்தி, ஆத்தூர் வட்டாட்சியர், சுரேஸ்குமார், கன்னிவாடி வனச்சரகர் குமரேசன், நில அளவர் பாஸ்கர், வருவாய் ஆய்வாளர் சாந்தி, கிராம நிர்வாக அலுவலர் பாண்டிய ராஜன் ஆகியோர் நில அளவை பணியில் ஈடுபடுகின்றனர்.

அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வறிக்கை தாக்கல் செய்திடுக! உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை, ஜூலை 17 - தென்மண்டலத்தில் உள்ள 12 மாவட்ட அரசுப் பள்ளிகளில் சேதமடைந்த கட்டி டங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தர விட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் வல்லாதி ரக்கோட்டையைச் சேர்ந்த முருகானந்தம் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவல்களின்படி, விருதுநகர், திருச்சி, திருநெல்வேலி, திண்டுக்கல், கரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை, தேனி, தென்காசி மற்றும் தூத்துக் குடி மாவட்ட அரசுப் பள்ளிகளில் பல கட்டி டங்கள் சேதமடைந்த நிலையில் உள்ளதா கவும், மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், சேதமடைந்த பள்ளிக் கட்டி டங்கள், கழிப்பறைகள், சமையலறைகள், சுற்றுச்சுவர்கள் மற்றும் அங்கன்வாடி கட்டி டங்களை பழுதுபார்க்கவும், பயன்பாட்டி ற்கு தகுதியற்ற கட்டிடங்களை அகற்றி புதிய கட்டிடங்கள் அமைக்கவும், கூடுதல் வகுப்பறைகள் மற்றும் அடிப்படை வசதி களை ஏற்படுத்தவும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கின் மீதான விசாரணை நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்தி வேல் அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது நீதிபதிகள், 12 மாவட்டங்க ளின் தலைமை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலம் தங்க ளது கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நேரடி ஆய்வு மேற்கொள்ள வேண்டும் . ஒவ்வொரு பள்ளியின் தலைமை ஆசிரியரிடமிருந்தும் சுகாதாரம், தூய்மை மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பான அறிக்கைகளை பெற்று, அவற்றை ஒருங்கிணைத்து தலை மை கல்வி அலுவலர்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். அறிக்கையில் குடிநீர், வடிகால் வசதி, பள்ளி வளாகத்தில் புதர்கள் அல்லது களை கள் உள்ளனவா உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற வேண்டும் என்றும், இந்த அறிக்கையை ஆகஸ்ட் 24-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யவும், இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் தனி அறிக்கை சமர்ப்பிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இஸ்ரோவை தனியார்மயமாக்குவதால் நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறி

ப.மாணிக்கம்தாகூர் எம்.பி. குற்றச்சாட்டு விருதுநகர், ஜூலை.17- பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசானது இஸ்ரோ உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கி வருவதால் நாட்டின் பாதுகாப்பு கடும் கேள்விக்குறியாகி வரு கிறது என்று விருதுநகர் மக்களவை உறுப்பி னர் ப.மாணிக்கம்தாகூர் குற்றம்சாட்டினார். விருதுநகரில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிக ளில் பயிலும் 10, 11 ஆம் வகுப்பில் முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவ மாணவி யருக்கு விருது வழங்கும் விழா நடை பெற்றது. அதில் கலந்து கொண்ட பின்பு செய்தி யாளர்களை சந்தித்த ப.மாணிக்கம்தாகூர் கூறியதாவது : “கூடங்குளம் அணுமின் நிலையத்தின் மிக முக்கியமான மற்றும் சென்சிடிவ் வான தரவுகள் கசிந்து, ‘டார்க் வெப்’ இணையதளத்தில் பரவி வருவது அதிர்ச்சி யை அளிக்கிறது. இது மிகவும் ஆபத்தான, தேசியப் பாதுகாப்பு மீறலாகும். நாட்டின் புதிய தரவுப் பாதுகாப்புச் சட்டம் எங்கே போனதென்று தெரியவில்லை. அரசிடம் இருக்க வேண்டிய முக்கியத் துறைகளை ரிலையன்ஸ் போன்ற கார்ப்ப ரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் போதே இந்த ஆபத்து தொடங்கிவிட்டது. மோடி அரசின் இந்த மெத்தனப் போக்கால் இந்தியாவின் பாதுகாப்பிற்கே அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இது குறித்து விரிவான விசாரணை நடத்தக் கோரி பிரதமருக்குக் கடிதம் எழுதியுள் ளேன். வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலும் இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்படும். ஒன்றிய பாஜக அரசானது இஸ்ரோ உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்க ளைத் தனியார்மயமாக்கத் துடிப்பதால், நாட்டின் பாதுகாப்புப் பெரும் கேள்விக் குறியாகியுள்ளது. இஸ்ரோ உலகப் புகழ்பெற்ற விண்வெளி ஆராய்ச்சி அமைப்பாகும். 100க்கும் மேற்பட்ட தகுதி வாய்ந்த விஞ்ஞானிகள் வெளியேறி வரு வது மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது. நேரடியாகப் பிரதமரின் கட்டுப்பாட்டில் வரும் இந்தத் துறை குறித்து, நாடாளு மன்றத்தில் கேபினட் அமைச்சரும் பிரத மரும் உரிய விளக்கமளிக்க வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் எந்த வொரு போராட்டமும் நடத்தக் கூடாது, கேள்விகள் கேட்கக் கூடாது என பள்ளி மாணவர்களைக் கட்டுப்படுத்துவது போல் மோடி அரசு முயல்கிறது. இது நாடாளு மன்ற ஜனநாயகத்திற்கு முற்றிலும் எதி ரானது. மக்கள் எங்களை தில்லிக்கு பிரச்ச னைகளைப் பேசத்தான் அனுப்பியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.