நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம்
5 Aug 2026, 9:58 pm

நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம்

திருநெல்வேலி, ஆக 5-நெல்லை மாவட்டம் மற்றும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் 5 நிலவரப்படி பாபநாசம் அணையின் நீர்மட்டம் தற்போது 80.65அடியாக உள்ளது. அணைக்கு 1,245.11 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிற நிலையில், அணையில் இருந்து 704.75 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 98.72 அடியாகப் பதிவாகியுள்ளது. இங்கு நீர்வரத்து மற்றும் வெளியேற்றம் இரண்டும் இல்லை.

மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 68.28 அடியை எட்டியுள்ளது. அணைக்கு 84.01 கன அடி நீர் வரு

கிறது. பாதுகாப்பு கருதி 155 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. வடக்கு பச்சையாறு அணையின் நீர்மட்டம் தற்போது 6 அடியாகக் குறைந்துள்ளது. நீர்வரத்துமற்றும் வெளியேற்றம் இல்லை.நம்பியாறு அணையின் நீர்மட்டம் 14 அடியாக உள்ளது. இங்கு நீர்வரத்து மற்றும் வெளியேற்றம் எதுவும் இல்லை. கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 26.25 அடியாக உள்ளது. அணைக்கு வரும்நீர் வரத்தும், வெளியேற்றமும் தலா 47 கன அடியாக சமநிலையில் உள்ளது.விவசாயப் பணிகளுக்கும், குடிநீர்த் தேவைகளுக்கும் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.