நெல்லை மாவட்ட அணைகளில் குறையும் நீர்மட்டம்
27 Sept 2026, 10:40 pm

நெல்லை மாவட்ட அணைகளில் குறையும் நீர்மட்டம்

திருநெல்வேலி, செப் 27-நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் லேசான மழை மற்றும் அணைகளின் நிலவரம் குறித்த புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, மாவட்டத்தின் பிரதான அணைகளில் ஒன்றான பாபநாசம் அணைக்கு ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி அணைக்கு 240.88 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதிலிருந்து பாசனத்திற்காக 404.75 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 48.35 அடியாக உள்ளது. மேலும், பாபநாசம் பகுதியில் 2 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

அதேபோல், சேர்வலாறு அணைக்கு நீர்வரத்து எதுவும் இல்லை . அணையின் நீர் இருப்பு 61.42 அடியாக பதிவாகியுள்ளது. மணிமுத்தாறு அணையின் நீர் இருப்பு 59.41 அடியாக உள்ள நிலையில், அணைக்கு 41 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 50 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.