திருநெல்வேலி மாவட்டத்தில் 95.48 சதவீதம் பேர் தேர்ச்சி
20 May 2026, 10:15 pm
<p><strong>திருநெல்வேலி மாவட்டத்தில் 95.48 சதவீதம் பேர் தேர்ச்சி</strong></p><p>திருநெல்வேலி,மே 20- நெல்லை மாவட்டத்தில் அரசு பள்ளி களை பொறுத்த வரை 92 அரசு பள்ளி களை சேர்ந்த மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். மாவட்டத்தில் 95.48 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். இதில் 38 பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளன. மொத்தம் 6 ஆயிரத்து 404பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளி அளவில் மொத்த தேர்ச்சி 94.93 சதவிகிதம் ஆகும். இவர்களில் மாணவர்கள் 91.891 சதவிகிதம் பேரும், மாணவிகள் 97.169 சதவிகிதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளி களை பொறுத்தவரை நெல்லை மாவட்டம் மாநில அளவில் 9-ஆவது இடத்தை பிடித்துள்ளது. 10- வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை மாவட்ட ஆட்சியர் சுகுமார், மாவட்ட நெல்லை முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் மற்றும் கல்வி அலுவலர்கள், ஆசிரியர்கள் பாராட்டினர். பாளையங்கோட்டை மகாராஜாநகர் ஸ்ரீ ஜெயேந்திர ஸ்வாமிகள் வெள்ளி விழா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் மாண வன் அஸ்வின் 497 மதிப்பெண்கள் எடுத்து மாவட்டத்தில் முதலிடத்தை பெற்றுள்ளார். அவருக்கு பள்ளியின் முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். நெல்லையில் பாளையங்கோட்டை இக்னேஷியஸ் மேல்நிலைப்பள்ளி மாணவி பி.காவ்யா 496 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் இரண்டாம் இடத்தை பிடி த்துள்ளார். இவர் தமிழில் -99_ ஆங்கி லத்தில் -99, கணக்கில் -100, அறிவியலில்- 100 சமூக அறிவியலில்-98 என பெற்றி ருந்தார். இவருக்கு பள்ளியின் முதல்வர் மற்றும் அவரது பெற்றோர்கள் நண்பர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். மாணவி பி.காவ்யா சிஐடியு போக்கு வரத்து தொழிலாளர் சங்க மாவட்ட இணை பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணி யத்தின் மகள் ஆவார்.</p>
