நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் கடும் சரிவு நாலுமுக்கு எஸ்டேட்டில் 27 மி.மீ மழை பதிவு
5 May 2026, 11:01 pm
<p><strong>நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் கடும் சரிவு நாலுமுக்கு எஸ்டேட்டில் 27 மி.மீ மழை பதிவு</strong></p><p>திருநெல்வேலி, மே 5- நெல்லை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள நாலுமுக்கு எஸ்டேட்டில் 27 மி.மீ மழை பதிவாகியுள்ளது. ஆனாலும் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் மட்டம் கடும் சரிவை சந்தித்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் பாபநாசம் அணையில் வெறும் 44.15 அடி நீர் மட்டம் தான் உள்ளது. 19.44 கன அடி நீர் வந்து கொண்டி ருக்கிறது. 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படு கிறது. சேர்வலாறு அணை யில் நீர் இருப்பு 57.02 அடி மட்டுமே உள்ளது, நீர் வரத்து மில்லை நீர் வெளியேற்ற மும் இல்லை. மணிமுத்தாறு அணை யில் நீர் இருப்பு 76.93 அடி மட்டுமே உள்ளது. நீர் வரத்து 69.92 கன அடியாக உள்ளது. 345 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.களக்காடு வடக்கு பச்சை யாறு அணையில் நீர் இருப்பு அதள பாதாளத்தில் உள்ளது. இந்த அணையில் வெறும் ஆறடி தண்ணீர் மட்டுமே உள்ளது. நீர் வரத்தும் இல்லை நீர் வெளி யேற்றமும் இல்லை. நம்பியாறு அணையில் வெறும் 14 அடி மட்டுமே உள்ளது. நீர் வரத்தும் இல்லை. நீர் வெளியேற்ற மும் இல்லை. கொடுமுடி ஆறு அணையில் வெறும் 4 அடி தண்ணீர் மட்டுமே உள்ளது. 2 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. 2 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள மாஞ்சோலையில் 2 மி.மீ மழையும், காக்காச்சியில் 19 மி.மீ மழையும் பதி வாகியுள்ளது.</p>
