தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மாநகராட்சி தூய்மைத் தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த பிஎப் பணம் எங்கே? ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித்

29 Jun 2026, 9:27 pm
மாநகராட்சி தூய்மைத் தொழிலாளர்களிடம்  பிடித்தம் செய்த பிஎப் பணம் எங்கே?  ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித்
<p><strong>மாநகராட்சி தூய்மைத் தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த பிஎப் பணம் எங்கே? ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித் துறை ஊழியர்கள் வேலைநிறுத்தம்</strong></p><p>திருநெல்வேலி, ஜூன் 29 - திருநெல்வேலி மாநகராட்சியில் தூய்மைத் தொழிலாளர்களின் ஊதியத்தில் மூன்று வருடங்களாக பிடித்தம் செய்யப்பட்ட இபிஎப் பணம் 4 கோடி ரூபாய் பிஎப் அலுவலகத்தில் செலுத்தப்படாமல் ஏமாற்றுவதை கண்டித்து திங்கட்கிழமை அனைத்து தூய்மைப் பணியாளர்களும் காலையிலிருந்து வேலை நிறுத்தம் செய்த னர். திருநெல்வேலி மாநகராட்சி முன்பு காலை 8 மணி முதல் காத்திருப்பு போரா ட்டத்தை தொடங்கினர். இதனால் மாநகர நல அலுவலர், சுகாதார அலுவலர், இதர அதிகாரிகள் மற்றும் ராம் அன்கோ ஒப்பந்தக் காரர் சிஐடியு தொழிற்சங்க தலைவர்க ளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் “தொழிலாளர்களுக்கு செலுத்தப்பட வேண்டிய இபிஎப், இஎஸ்ஐ பணம் ரூ.4 கோடியை ஜூலை 7 ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் செலுத்துவது” என்று எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்கப்பட்டது. இதனால் மாலை 4 மணியளவில் காத்திருப்பு போராட்டம் ஒத்திவைக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். போராட்டத்திற்கு சிஐடியு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.மோகன் தலைமை தாங்கினார். சங்கத்தின் பொதுச் செயலாளர் மாரியப்பன், நிர்வாகிகள் சுரேஷ், இசக்கிமுத்து, செல்வி, வேல் வடிவு, அந்தோணி உட்பட 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். சங்கத்தின் பொருளாளர் செல்லத்துரை நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.