தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நெல்லை மாநகராட்சியை தூய்மை பணியாளர்கள் முற்றுகை

27 May 2026, 10:45 pm
நெல்லை மாநகராட்சியை தூய்மை பணியாளர்கள் முற்றுகை

நெல்லை மாநகராட்சியை தூய்மை பணியாளர்கள் முற்றுகை

திருநெல்வேலி, மே 27- நெல்லை மாநகராட்சியில் பணி செய்யக்கூடிய மாஸ் ஒர்க் தூய்மை பணியாளர்களின் சம்பளத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பிடித்தம் செய்த பிராவிடண்ட் பண்ட் பணம் மற்றும் நிர்வாகம் செலுத்த வேண்டிய பிராவிடண்ட் பண்ட் பணம் உட்பட சுமார் இரண்டு கோடி ரூபாய் இபிஎப் அலுவலகத்தில் செலுத்தாமல் உள்ளனர், இது சம்பந்தமாக பலமுறை நெல்லை மாநகராட்சி நிர்வாகத்தில் எழுத்துப்பூர்வமான கடிதம் கொடுத்தும் நேரடியாக பேசியும் எந்த பலனும் இல்லை , எனவே தூய்மை பணியாளர்களின் பணத்தை உடனடியாக இபிஎப் அலுவலகத்தில் செலுத்த வேண்டும்.

மேலும், 524 மாஸ் ஒர்க் தூய்மை பணியாளர்கள் இருக்கிறார்கள் என்று கூறி நூற்றுக்கும் மேற்பட்டவர்களை அலுவலகப் பணிகளில் ஈடுபடுத்துவது இதன் காரணமாக தூய்மை பணி செய்வதற்கு ஆள் பற்றாகுறை ஏற்படுகிறது

.இதன் காரணமாக இருக்கின்ற தூய்மை பணியாளர்கள் அதிகமான வேலையை செய்ய வேண்டியதுள்ளது.

மேலும 524 மாஸ் ஒர்க் தூய்மை பணியாளர்களை காண்டராக் கொடுக்காமல் தக்க வைப்பதற்காக போராடியதும் தூய்மை பணியாளர்கள்தான் நெல்லை மாநகராட்சியின் இந்த செயலை கண்டித்தும் 524 தொழிலாளர்களையும் தூய்மைப் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தியும் புதன்கிழமை காலை சுமார் 11 மணியளவில் நெல்லை மாநகராட்சியில் தூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டம்நடைபெற்றது, முற்றுகை போராட்டத்திற்கு நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆர் மோகன் தலைமை தாங்கினார்.

போராட்டத்தில் சிஐடியு மாவட்ட செயலாளர் எல்.சரவணபெருமாள் சங்கத்தின் செயலாளர் எஸ் மாரியப்பன் , பொருளாளர்எஸ் செல்லத்துரை, நிர்வாகிகள் செல்வி இசக்கிமுத்து, ஜானகி பூமாரி, சுடலைமணி, கணேசன் உட்பட 200-க்கும் மேற்பட்ட தூய்மை தொழிலாளர்கள் கலந்து கொண்டனர் போராட்டத்தின் போது மாநகர நல அலுவலர் மற்றும் துணை மேயர் சங்கத் தலைவர்களோடு நடத்திய பேச்சு வார்த்தையில் இரண்டு கோடி ரூபாய் இபிஎப் பணத்தில் இதுவரை 50 லட்சம் ரூபாய் செலுத்தப்பட்ட தாகவும் ஒரு வார காலத்தில் மீதி பணத்தையும் செலுத்தி விடுவதாகவும் உறுதியளித்தனர். மேலும் புதிதாக நூறு தூய்மை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது இந்த வாக்குறுதியின் அடிப்படையில் முற்றுகை போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.