சாதிப் பெயரைச் சொல்லித் திட்டி போலீசார் தாக்கியதால் ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை கிராமமக்கள் போராட்டம்
1 Jul 2026, 10:51 pm
<p><strong>சாதிப் பெயரைச் சொல்லித் திட்டி போலீசார் தாக்கியதால் ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை கிராமமக்கள் போராட்டம்</strong></p><p> திருநெல்வேலி, ஜூலை 1- சாதிப் பெயரைச் சொல்லி திட்டி போலீ சார் தாக்கியதால் ஆட்டோ ஓட்டுநர் தற் கொலை செய்து கொண்டார். காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள் மற்றும் கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை மாவட்டம் நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவில் தேரோட்டத் தின் போது நகருக்குள் காவல்துறையினர் சார்பில் போக்குவரத்து மாற்றம் செய்யப் பட்டிருந்தது. இதனால் தச்சநல்லூர் சாலை யில் இருந்து பாறையடி பகுதிக்கு ஆட்டோ ஓட்டுனர் வேல்முருகன் என்பவர் ஆட்டோவில் சென்றார். இவர் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர். அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் வேல்முருகனை வழி மறித்து சாதியைச் சொல்லித் திட்டி தாக்கிய தாக கூறப்படுகிறது. இதனால் மனமு டைந்த ஆட்டோ ஓட்டுநர் வேல்முருகன் பெட்ரோலை தன் மீது ஊற்றி தற்கொலை க்கு முயன்றார். காயமடைந்த அவரை குடும்பத்தினர் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். கடந்த மூன்று நாட்களாக சிகிச்சை பெற்று வந்து அவர் புதன்கிழமையன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வேல்முருகன் குடும்பத்தினர் தச்ச நல்லூர் காவல் நிலையத்தில், சம்பந்தப் பட்ட காவல்துறையினர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளனர். இந்த சம்ப வத்தைக் கண்டித்தும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் பாறை யடி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடு பட்டனர்.</p>
