தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

1 Dec 2025, 5:20 pm
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை மேலும் நீட்டிப்பு

கோவை, டிச.1- மேற்கு மாவட்டங்களிலிருந்து தென்  மாவட்டங்களுக்கு செல்லும் வாராந்திர  சிறப்பு ரயில்களின் சேவை மேலும் ஒரு  மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கோவை, பொள்ளாச்சி, பழனி  உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களிலி ருந்து திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங் களுக்கு செல்லும் பயணிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் திரு நெல்வேலி - மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில்களின் சேவை  மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்கப்பட் டுள்ளது. இந்த ரயில்கள் டிசம்பர் 7 முதல் ஜன வரி 26 வரை இயக்கப்படும். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மாலை 7 மணிக்கு திருநெல்வேலியிலிருந்து புறப்படும் 06030 ரயில் மறுநாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையம் வந் தடையும். அதேபோல் ஒவ்வொரு திங் கட்கிழமையும் இரவு 7.45 மணிக்கு மேட்டுப்பாளையத்திலிருந்து புறப்படும்  06029 ரயில் மறுநாள் காலை 7.45 மணிக்கு  திருநெல்வேலி சென்று சேரும். கோவை, பொள்ளாச்சி, பழனி, உடு மலை, திண்டுக்கல், மதுரை, சிவகாசி, ராஜபாளையம், தென்காசி உட்பட அனைத்து முக்கிய நிலையங்களிலும் நின்று செல்லும் இந்த ரயிலில் ஏசி,  ஸ்லீப்பர், பொது பெட்டிகளும் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதியும் உள் ளன. வார இறுதி நாட்களில்  கோவை சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல் பவர்கள், திரும்பி வருபவர்களுக்கு  இந்த ரயில் பெரும் உதவியாக இருக் கும் என்று பயணிகள் மகிழ்ச்சி தெரிவித் துள்ளனர். மேலும், சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகத்திற்கு அதிக வருமானம் ஈட்டக் கூடிய இந்த ரயிலை தொடர்ச்சியாக  இயக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.

காதல் திருமணம்: பாதுகாப்பு கேட்டு மனு

ஈரோடு, டிச. 1- காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பதி பாது காப்பு கேட்டு ஈரோடு மாவட்ட காவல் அலுவலகத்தில் திங்க ளன்று மனு அளித்தனர். ஈரோடு மாவட்டம், ஆப்பக்கூடல் பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார். இவர் பல்லடம் அருகே சாந்தி கியர்ஸ் நிறு வனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் செட்டி பாளையம் பகுதியைச் சேர்ந்த வாசுமதி என்பவரை கடந்த  2 ஆண்டுகளாகக் காதலித்து வந்தார். திங்களன்று வாசுமதி யை தனது குலதெய்வக் கோயிலுக்கு அழைத்துச் சென்று  உதயகுமார் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில்,  பெற்றோர்களிடமிருந்து, அச்சுறுத்தல் வருமோ என்கிற அச்சத் தில் பாதுகாப்பு கேட்டு, ஈரோடு மாவட்ட காவல்துறை கண் காணிப்பாளரிடம் மனு அளித்தனர். அவர்களுடன், சிபிஎம்  பவானி தாலூகா செயலாளர் ஆர்.பிரகாஷ், தமிழ்நாடு விவசா யிகள் சங்க மாவட்ட்டச் செயலாளர் ஏ.எம்.முனுசாமி உள் ளிட்டோர் உடனிருந்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.