திருக்கோவிலூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
18 Jul 2026, 12:01 am
<p><strong>திருக்கோவிலூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்</strong></p><p>கள்ளக்குறிச்சி, ஜூலை 17- கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் 1435-ஆம் பசலிக்கான ஜமாபந்தி நிறைவு விழா மற்றும் கிராமக் குடிகள் மாநாடு இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஜெ.இ.பத்மஜா தலைமை வகித்து, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் க.கார்த்திகேயன், திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் சு.பழனிசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர், ஜமாபந்தி முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். விழாவில் அரசு அலுவலர்கள், வருவாய்த்துறை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.</p>
