திருக்கோவிலூர் பெரிய ஏரியைச் சீரமைத்து படகு குழாம்,பூங்கா அமைக்க கோரிக்கை
16 Jul 2026, 11:49 pm
<p><strong>திருக்கோவிலூர் பெரிய ஏரியைச் சீரமைத்து படகு குழாம்,பூங்கா அமைக்க கோரிக்கை</strong></p><p>திருக்கோவிலூர், ஜூலை 16– கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக் கோவிலூர் பெரிய ஏரியைச் சீரமைத்து, படகு குழாம் மற்றும் நடை பாதை வசதி யுடன் கூடிய பூங்காவாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 95 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியின் மூலம் 800 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும், இதன் உபரி நீர் மூலம் 7-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பி, சுமார் 3,000 ஏக்கர் நிலங்கள் பயன்பெறுகின்றன. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஏரியின் ஆற்று வாய்க்கால், பெஞ்சல் புயலின் போது சேதமடைந்தது. இதனால் ஏரிக்கு நீர் வருவதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனைச் சீரமைத்தால் மட்டுமே ஏரியை முழு கொள்ளளவிற்கு நிரப்ப முடியும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. இதற்கிடையே, ஏரியைச் சுற்றி கருவேல மரங்கள் மண்டி, கழிவுநீர் கலந்து மாசடைந்து வருவது கவலை அளிப்ப தாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். நகரின் அருகே உள்ள இந்த ஏரியைத் தூர்வாரி, கரைகளைப் பலப்படுத்தி, படகு குழாம் மற்றும் நடைபாதையுடன் கூடிய பொழுதுபோக்கு பூங்காவாக உருவாக்கினால், ஆன்மீக சுற்றுலா வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பயனடைவர். தேர்தல் வாக்குறுதிகளாகவும் அளிக்கப்பட்ட இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி, ஏரியைப் பாதுகாக்கவும், விவசாயத்திற்குத் தடையின்றி நீர் கிடைக்கவும் பொதுப்பணித்துறை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த நகர வாசிகளின் எதிர்பார்ப்பாகும். -சசிக்குமார்</p>
