ஜமாபந்தி முகாம்: 140 மனுக்கள் பெறப்பட்டு உடனடி தீர்வு
12 Jun 2026, 10:57 pm
<p><strong>ஜமாபந்தி முகாம்: 140 மனுக்கள் பெறப்பட்டு உடனடி தீர்வு </strong></p><p>திருக்கோவிலூர், ஜூன் 12- திருக்கோவிலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் 1435-ஆம் பசலிக்கான வருவாய் தீர்வாய ஜமாபந்தி முகாம் மாவட்ட ஆட்சியர் ஜெ.இ.பத்மஜா தலைமையில் வெள்ளியன்று நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள 7 வருவாய் வட்டங்களிலும் ஜமாபந்தி முகாம் தொடங்கி ஜூன் 29 வரை நடைபெறுகிறது. இதன் தொடக்கமாக, திருக்கோவிலூர் வட்டத்தில் ஆவிகொளப்பாக்கம் குறுவட்டத்திற்குட்பட்ட 12 கிராமங்களுக்கான முகாம் வெள்ளியன்று நடந்தது. இதில் பட்டா மாறுதல், நில அளவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்களிடமிருந்து 140 மனுக்கள் பெறப்பட்டு, அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். குறிப்பாக, காட்டுப்பையூர் கார்த்திகேயன் என்பவருக்கு உடனடியாகப் பட்டா மாற்ற ஆணை வழங்கப்பட்டது. முகாமில் திருக்கோவிலூர் வட்டாட்சியர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.</p>
