திருச்சிராப்பள்ளி திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் வேட்பு மனுத்தாக்கல்
4 Apr 2026, 4:02 pm
<p><strong>திருச்சிராப்பள்ளி திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் வேட்பு மனுத்தாக்கல் </strong></p>
<p>திருச்சிராப்பள்ளி, ஏப், 4, திருச்சிராப்பள்ளி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் சனிக்கிழமை மாநகராட்சி மண்டலம் - 2 அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர் முத்து முருகேச பாண்டியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இந்த நிகழ்வில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், திருச்சி எம்.பி துரை.வைகோ, காங்கிரஸ் மாநகர் மாவட்டத் தலைவர் ரெக்ஸ், திமுக கிழக்கு மாநகரச் செயலாளர் மதிவாணன் ஆகியோர் உடனிருந்தனர்.</p>
<p> </p>
