தெப்பக்குளத்தில் குப்பைகள் அகற்றும் பணி
3 hours before

தெப்பக்குளத்தில் குப்பைகள் அகற்றும் பணி

நாமக்கல், அக்.4-திருச்செங்கோடு தெப்பக்குளத்தில் ஞாயிறன்று தூய்மைப் பணி துவங்கியது.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு - ஈரோடு சாலை, வாரச்சந்தை அருகே அமைந்துள்ள பெரிய தெப்பக்குளத்தில் தேங்கியிருந்த பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகளை அகற்றும் தூய்மைப் பணி ஞாயிறன்று நடைபெற்றது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வெட்டப்பட்ட இந்த தெப்பக்குளம் தற்போது சீரமைக்கப்பட்டு வருகிறது. தெப்பக்குளத்தை சுற்றியுள்ள படிக்கட்டுகளில் பொதுமக்கள் மீன்களுக்கு உணவாக பொரி, சாப்பாடு உள்ளிட்டவற்றை குளத்தில் போடுவதால் தண்ணீர் மாசடைகிறது. மேலும், கரைகளில் தர்ப்பணம் செய்வது, மாலை, பூ உள்ளிட்ட பொருட்களை பிளாஸ்டிக் கவர்களுடன் வீசுவது போன்ற செயல்களாலும் குப்பைகள் அதிகரித்து வருகின்றன. சிலர் தெப்பக்குளக்கரையில் அமர்ந்துமது அருந்திவிட்டு மதுபாட்டில்கள் மற்றும் தின்பண்ட பாக்கெட்டுகளை குளத்தில் வீசுகின்றனர். குளத்தை சுற்றி கம்பி வேலி அமைக்கப்பட்டிருந்தபோதிலும், அதனை சேதப்படுத்தி கரைக்குச் செல்வதும், குப்பைகள் மற்றும் பாட்டில்களை வீசுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறுது. நகராட்சி சார்பில் அவ்வப்போது தூய்மைப் பணியாளர்களை கொண்டு தெப்பக்குளக்கரைசுத்தம் செய்யப்பட்டாலும், தற்போது அதிகளவில் குப்பைகள் தேங்கி அசுத்தமாக காணப்பட்டது. வரும் கோடை காலத்தில் குளத்து நீரில் துர்நாற்றம் ஏற்படும் நிலை உருவாகும் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, ‘நம்ம திருச்செங்கோடு’ அறக்கட்டளை நிர்வாகத்தினர் பொதுமக்கள் மற்றும் தன்னார்வ அமைப்பினரை தெப்பக்குளத்தைதூய்மைப்படுத்த அழைப்பு விடுத்தனர். அதன்பேரில் பொதுமக்கள், தன்னார்வலர்கள் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அவர்கள் பரிசலில் சென்று தெப்பக்குளத்தின் கரையோரங்களில் ஒதுங்கியிருந்த பிளாஸ்டிக் பொருட்கள், பாட்டில்கள் உள்ளிட்ட குப்பைகளை அகற்றி தூய்மைப்படுத்தினர்.