விசைத்தறி தொழிலாளர்களிடம் திருச்செங்கோடு
10 Apr 2026, 5:30 am

விசைத்தறி தொழிலாளர்களிடம் திருச்செங்கோடு

நாமக்கல், ஏப். 9- திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதியில் மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், விசைத்தறி கூடங்களுக்கு நேரில் சென்று தொழிலாளர்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அங்கு பேசுகையில், மேற்கு மண்டலத்தின் பொருளாதார வளர்ச்சியை விசைத்தறித் தொழில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. இருப்பினும், தற்போது இத்தொழில் போதிய லாபமின்றி நலிவடைந்து வரும் சூழல் உள்ளது. நூல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் விசைத்தறித் தொழில் நலிவடைந்து வருகிறது.

விசைத்தறித் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், நூல் விலையைக் கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும், விசைத்தறித் தொழிலாளர்களுக்குத் தேவையான மின்சாரக் கட்டணத்தைக் குறைக்கவும், இலவச மின்சார அளவை உயர்த்தவும் நாம் முக்கியப் பங்காற்றுவோம். சோலார் வசதி, நெட் மீட்டர் அனுமதி மற்றும் ஜிஎஸ்டி விலக்கு உள்ளிட்ட சலுகைகளைப் பெற்றுத் தந்து, இத்தொழிலை லாபகரமானதாக மாற்ற உரிய நடவடிக்கைகள் எடுப்பேன் என்றார்.