விசைத்தறி தொழிலாளர்களிடம் திருச்செங்கோடு வேட்பாளர் ஈஸ்வரன் வாக்கு சேகரிப்பு
10 Apr 2026, 5:30 am

விசைத்தறி தொழிலாளர்களிடம் திருச்செங்கோடு வேட்பாளர் ஈஸ்வரன் வாக்கு சேகரிப்பு

நாமக்கல், ஏப். 9- திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதியில் மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், விசைத்தறி கூடங்களுக்கு நேரில் சென்று தொழிலாளர்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அங்கு பேசுகையில், மேற்கு மண்டலத்தின் பொருளாதார வளர்ச்சியில் விசைத்தறித் தொழில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. இருப்பினும், தற்போது இத்தொழில் போதிய லாபமின்றி நலிவடைந்து வரும் சூழல் உள்ளது. நானும் நெசவுத் தொழில் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதால், இதன் வலிகளையும் பிரச்சினைகளையும் நன்கு அறிவேன்.

ஏற்கனவே விசைத்தறிக்கான மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதிலும், இலவச மின்சார அளவை உயர்த்துவதிலும் நான் முக்கியப் பங்காற்றியுள்ளேன். வரும் காலங்களில் விசைத்தறித் தொழிலை மேலும் தரம் உயர்த்த சோலார் வசதி, நெட் மீட்டர் அனுமதி மற்றும் ஜிஎஸ்டி விலக்கு உள்ளிட்ட சலுகைகளைப் பெற்றுத் தந்து, இத்தொழிலை லாபகரமானதாக மாற்ற உறுதியான நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

தொடர்ந்து, கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளுடன் இணைந்து தொகுதியின் பல்வேறு வீதிகளில் அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.