முறைகேடு புகார்: திருச்செந்தூர் கோவில் அர்ச்சகர்கள், அதிகாரிகள் மீது நடவடிக்கை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பேட்டி
29 May 2026, 9:54 pm
<p><strong>முறைகேடு புகார்: திருச்செந்தூர் கோவில் அர்ச்சகர்கள், அதிகாரிகள் மீது நடவடிக்கை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பேட்டி</strong></p><p>தூத்துக்குடி, மே 29 - திருச்செந்தூர் முருகன் கோவிலில் மே 29 அன்று விடியற்காலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ. ரமேஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சீ. ரமேஷ் கூறியதாவது: கோபுர நுழைவாயிலில் பொதுமக்கள் மற்றும் பக்தர்களிடம் பணம் வாங்கிவிட்டு தரிசனத்திற்கு நேரடியாக அழைத்துச் செல்வதை கண்டுபிடித்திருக்கிறோம். இங்குள்ள அர்ச்சகர்கள், அதிகாரிகள் உட்பட அனைவரும் சேர்ந்து தான் இதில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் யாராக இருந்தாலும், எந்தவித பாகுபாடும் இல்லாமல், எவ்வித பாரபட்சமுமின்றி நடவடிக்கை எடுப்போம். மன்னிப்புக் கடிதம் வாங்கிவிட்டு மன்னித்து விட்டு விட்டோம் என்று இணையதளத்தில் ஒரு தவறான செய்தியை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். எப்படி அனுமதித்தீர்கள்? எதற்காக பணம் வாங்கிவிட்டு உள்ளே அனுமதித்தீர்கள்? என்று விளக்க கடிதம் தான் அவர்களிடம் வாங்கியிருக்கிறோம். அது மன்னிப்புக் கடிதம் அல்ல. இந்த ஆய்வின் அடிப்படையில் தயார் செய்யப்படும் முழுமையான ஆய்வறிக்கை, முதலமைச்சரிடம் விரைவில் சமர்ப்பிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் மேல் நடவடிக்கை நிச்சயமாக எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.</p>
