தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருச்செந்தூர் நகராட்சியில் தினசரி பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கிடுக! நகராட்சி ஆணையரிடம் மாதர் சங்கம் மனு

23 Sept 2026, 10:07 pm
திருச்செந்தூர் நகராட்சியில் தினசரி பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கிடுக!  நகராட்சி ஆணையரிடம் மாதர் சங்கம் மனு

திருச்செந்தூர் நகராட்சியில் தினசரி பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கிடுக! நகராட்சி ஆணையரிடம் மாதர் சங்கம் மனு

தூத்துக்குடி, செப்.23-திருச்செந்தூர் நகராட்சி பாரதியார் தெரு உள்ளிட்ட பகுதிகளில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கி, பொதுமக்களுக்கு தினசரி பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கக் கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் நகராட்சி ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.

திருச்செந்தூர் பாரதியார் தெரு உள்ளிட்ட நகராட்சி பகுதிகளில் 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாகவும், அவ்வாறு வழங்கப்படும் தண்ணீரும் உப்பு நீராக இருப்பதால் குடிப்பதற்கு ஏற்றதாக இல்லை என்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணவும், தினசரி பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கவும் வலியுறுத்தி ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் பாரதியார் தெருவில் வீடு வீடாகச் சென்று பொதுமக்க

ளிடம் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து, பொதுமக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்செந்தூர் நகராட்சி ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது. மனுவைப் பெற்றுக்கொண்ட ஆணையர், குடிநீர் பிரச்சனைக்கு உடனடியாகத் தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததாக மாதர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் மாதர் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் பி. பூமயில், சிபிஎம் திருச்செந்தூர் ஒன்றியச் செயலாளர் பி. முத்துக்குமார், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டச் செயலாளர் செபஸ்டின் ராஜ், மாதர் சங்கத்தின் திருச்செந்தூர் ஒன்றியத் தலைவர் பி. முத்தாரம்மாள், ஒன்றியச் செயலாளர் ஏ. மருதவடிவு, மாவட்டக் குழு உறுப்பினர் ஆர். செல்வி மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் பிராட்டி, கௌரி, கன்னிகாஉள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.