திருச்செந்தூர் திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல்
30 Mar 2026, 3:40 pm
<p><strong>திருச்செந்தூர் திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல்</strong></p>
<p>தூத்துக்குடி, மார்ச் 30- திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திருச்செந்தூர் கோட்டாட்சியர் கௌதமிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். முன்னதாக தூத்துக்குடி விமான நிலையத்தில் தெற்கு மாவட்ட திமுக மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பு நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே எஸ் அர்ஜுனன் தா ராஜா மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், “தமிழகம் முழுவதும் திமுக வெற்றி பெறும் நிலை உள்ளது. அந்த வகையில் திருச்செந்தூரிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற மக்கள் ஆதரவை நாடி கடுமையாக உழைப்போம்” என்றார். மேலும், “கடந்த தேர்தலில் 27 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம். இந்த முறை 50 ஆயிரம் வாக்குகளுக்கும் அதிகமான வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்” என்றும் நம்பிக்கை தெரிவித்தார். இதற்கிடையில், ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் தற்போதைய எம்எல்ஏ சண்முகையாவிற்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாதது தொடர்பாக அப்பகுதியில் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இதுகுறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர்களுக்கு பதிலளித்த அவர், “யார் சிறப்பாக பணியாற்றுகிறார்களோ அவர்களைத் தலைவர் வேட்பாளர்களாக அறிவித்துள்ளார். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காலத்தில் வாய்ப்பு வழங்கப்படும். அதனால் யாரும் அதிருப்தி கொள்ளத் தேவையில்லை” என்றார். மேலும், “ஓட்டப்பிடாரம் தொகுதியில் புதிய வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராமஜெயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்” என்றும் அவர் தெரிவித்தார்.</p>
