முந்தய பக்கம்

சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் திப்பு சுல்தான் பிறந்தநாள் உறுதிமொழி ஏற்பு

1 Dec 2025, 5:20 pm
சிறுபான்மை மக்கள்  நலக்குழு சார்பில்  திப்பு சுல்தான் பிறந்தநாள் உறுதிமொழி ஏற்பு

சிறுபான்மை மக்கள்  நலக்குழு சார்பில்  திப்பு சுல்தான் பிறந்தநாள் உறுதிமொழி ஏற்பு

தஞ்சாவூர், டிச.1-  தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில், ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக போராடிய மைசூர் புலி, திப்பு சுல்தான் பிறந்த நாளை (டிச.1) முன்னிட்டு, “விடுதலை உணர்வை பெறுவோம், மக்கள் ஒற்றுமை காப்போம், ஒருமைப்பாட்டை உயர்த்திப் பிடிப்போம்’’ என்ற முழக்கத்துடன் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி தஞ்சை கீழவாசல் பகுதியில், திங்கட்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு ஹெச். அப்துல் நசீர் தலைமை வகித்தார். சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநில பொதுச் செயலாளர் பி. செந்தில்குமார், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் ஆர். கலைச்செல்வி, தமுஎகச மாநில துணைப் பொதுச் செயலாளர் களப்பிரன், மாவட்டச் செயலாளர் ப. சத்தியநாதன், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என். சரவணன், மாவட்டக் குழு உறுப்பினர் என். குருசாமி, நிர்வாகிகள் கரிகாலன், மணிமாறன், கிளைச் செயலாளர் ஜெயபால் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram