திமிரி பேருந்து நிலைய கழிப்பறையில் கட்டணக் கொள்ளை
28 Jun 2026, 12:44 am
<p><strong>திமிரி பேருந்து நிலைய கழிப்பறையில் கட்டணக் கொள்ளை</strong> </p><p> ராணிப்பேட்டை, ஜூன்.27- திமிரி சிறப்பு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கட்டணக் கழிப்பறையில், அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட பல மடங்கு கூடுதல் தொகை வசூலிக்கப்படுவதாகப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அரசு விதிகளின்படி மிகக் குறைந்த கட்டணமே வசூலிக்கப்பட வேண்டும் என்ற நடைமுறை இருந்தும், இங்கு மலம் மற்றும் சிறுநீர் கழிப்பதற்கு 10 ரூபாயும், குளிப்பதற்கு 30 ரூபாயும் கட்டாயப்படுத்தி வசூலிக்கப்படுகிறது. மேலும், இலவசமாகப் பயன்படுத்த வேண்டிய கழிப்பிடப் பிரிவுகளிலும் முறைகேடாகப் பணம் வசூலிக்கப்படுவதாகப் பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்த பகல் கொள்ளைக்கு உள்ளூர் அதிகாரிகளின் உடந்தையே காரணம் எனச் சமூக ஆர்வலர்கள் சந்தேகிக்கின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு உரிய கட்டணப் பலகையை நிறுவுவதுடன், அரசு விதிகளுக்கு உட்பட்ட கட்டணத்தை மட்டுமே வசூலிப்பதை உறுதி செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
