நீலகிரி தேயிலைத் தோட்டத்தில் புலிகள்
28 Mar 2026, 4:13 pm
<p><strong>நீலகிரி தேயிலைத் தோட்டத்தில் புலிகள்</strong></p>
<p>பீதியில் தொழிலாளர்கள்</p>
<p>ஊட்டி, மார்ச் 28- நீலகிரி மாவட்டம் தொட்டபெட்டா வனச்சரகத்திற்கு உட்பட்ட மைனாலா கிராமத்தை ஒட்டியுள்ள தேயிலைத் தோட்டத்தில் 4 புலிகள் ஒரே நேரத் தில் உலா வந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற் படுத்தியுள்ளது. கடந்த வியாழக் கிழமை, வடமாநிலத்தைச் சேர்ந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் இலை பறித்துக் கொண்டிருந்தபோது புலிகள் நுழைவதைக் கண்டு அதிர்ச்சி யடைந்தனர். இதுதொடர்பாக தொழி லாளர்கள் எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. பொதுவாக இந்தப் பகுதிகளில் யானைகள் மற்றும் சிறுத்தைகளின் நடமாட்டம் இருந்தாலும், ஒரே நேரத்தில் 4 புலிகள் தென்பட்டது இதுவே முதல்முறை என்றும் கூறப் படுகிறது. தேயிலைத் தோட்டத் தொழி லாளர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் தங்களுக்குப் பாதுகாப்பு வழங்கக் கோரியும், வனத்துறையினர் ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்தக் கோரியும் வலியுறுத்தியுள்ளனர்.</p>
