நீர் மின் நிலையத்திற்குள் புகுந்த புலிகள்
11 Feb 2026, 5:52 pm
<p><strong>நீர் மின் நிலையத்திற்குள் புகுந்த புலிகள்</strong></p>
<p>உதகை, பிப்.11- உதகை அருகே உள்ள பார்சன்ஸ்வேலி நீர் மின் நிலையத்துக்குள் புகுந்த 2 புலிக ளால் மின்வாரிய ஊழியர்கள் அச்சமடைந்த னர். நீலகிரி மாவட்டம், உதகை அருகே பார் சன்ஸ் வேலி அணை உள்ளது. இந்த அணை யிலிருந்து தினந்தோறும் உதகை நகருக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், இங்குள்ள நீர்மின் நிலையம் மூலம் மின்சாரமும் உற்பத்தி செய்யப்பட்டு வருகி றது. இந்த நீர்மின் நிலையத்திற்கு தினந்தோ றும் மின்வாரிய ஊழியர்கள் காலை, மதி யம், இரவு ஆகிய நேரங்களில் பணிக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில், திங்களன்று இரவு பணிக்கு சென்ற மின்வாரிய ஊழியர்கள் நீர் மின் நிலையத்தின் அருகே புலி ஒன்று சாலையில் நடந்து சென்றதை பார்த்தனர். வாகனத்தின் முகப்பு விளக்கை பார்த்ததும், அந்த புலி வனப்பகுதிக்குள் செல்ல முயன் றது. ஆனால், வழி இல்லாததால் மின் நிலை யத்தை நோக்கி ஓடியது. அந்த புலியை வாகனத்தில் ஊழியர்கள் பின் தொடர்ந்து சென்ற போது, மேலும் ஒரு புலி இருந்தது. இரண்டு புலிகளையும் பார்த்து மின்வாரிய ஊழியர்கள் அச்சமடைந்த நிலையில், 2 புலி களும் மின்நிலையத்திற்குள் ஓடிச்சென்று, பின்னர் வனப்பகுதிக்குள் சென்றன. இந்த வீடியோ சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது.</p>
