முந்தய பக்கம்

நீலகிரியில் புலிகள் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரிப்பு

3 Mar 2026, 3:38 pm
நீலகிரியில் புலிகள் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரிப்பு
<p><strong>நீலகிரியில் புலிகள் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரிப்பு</strong></p> <p>உதகை, மார்ச் 3- நீலகிரி மாவட்டத்தில் புலிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித் துள்ளதாக, மாவட்ட ஆட்சி யர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார். &lsquo;மலைகளின் அரசி&rsquo; என் றழைக்கப்படும் நீலகிரி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் மிக முக்கிய மலைத்தொடராக திகழ்கிறது. நீலகிரி மாவட் டத்தில் இயற்கை காடுகளும், வன விலங்குகளும் பாதுகாக் கப்பட்டு வரும் நிலையில், செவ்வாயன்று உலக வன &nbsp;உயிரின தினம், உதகையிலுள்ள எம்ரால்டு ஹாட்ஸ் மகளிர் &nbsp;கல்லூரியில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட &nbsp;ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு கலந்து கொண்டு பேசுகை யில், நீலகிரி மாவட்டத்திலுள்ள வனப்பகுதிகளில் அரிய வகை வன விலங்குகள், மூலிகை போன்ற பல்வேறு தாவரங் கள், பறவைகள் உள்ள நிலையில், தேசிய விலங்கான &nbsp;புலிகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்திருப்பதன் மூலம், நீலகிரி வனப்பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி யாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட் டத்தில் இயற்கை வளங்களை பாதுகாக்க பிளாஸ்டிக் பொருட் களை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்திய ஆட்சியர், வனப் பகுதி மற்றும் வன விலங்குகளை பாதுகாத்து வரும் வனத் துறை ஊழியர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, வனத்துறை சார்பில் நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு, மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் ஷஷாங் ரவி, பள்ளித் தாளாளர் கட்டாரியா உட்பட அரசுத்துறையினர் பங்கேற்றனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram